வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சீமான் பிற கட்சிகளை அழிப்பதை விட மத்திய பா ஜ க நிறைய கட்சிகளை அழித்துக்கொண்டிருக்கிறதே இதற்கு அந்து மணி பதில் ?மில்லியன் டாலர் ?
கேள்வி: மற்றொரு மொழியை கற்க தடை போடும் திராவிட கட்சிகள், தமிழர்களை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட செய்து விட்டனரே? பதில்: உங்களுக்கு புரிகிறது ஜெயசிங்... அரசியல்வாதிகளுக்கு புரிந்தும், புரியாத மாதிரி நடித்து, அதை வைத்து அரசியல் செய்கின்றனரே மக்களை சங்கம் வைத்து தமிழை வளர்த்த தமிழ் மண்ணில் இன்று தமிழை குழி தோண்டி புதைக்க ஒரு கும்பல் முதல்வர் விஜய் தலைமையில் இருக்கிறது. மன்மத வணக்கம், கண்யான் பூங்குன்றனார், பின்பு அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய பேச்சுக்கள் தமிழக சட்டசபை வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டியவை. ஒரு பிரிண்ட் அவுட்டை கையில் வைத்துக்கொண்டு தமிழை தப்பும் தவறுமாக பேசும் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களை முதலில் தமிழை ஒழுங்காக படிக்க சொல்லுங்கள் .
சீமான் மற்ற கட்சிகளை ஒழிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் தன்னுடைய நாதக கட்சியை ஒழிக்காமல் இருந்தால்... சீமான் இதுவரை அப்புராணி திரள்நிதி தம்பிகளின் காதுகளில் சுற்றிய பூக்களில் சிலவற்றை மட்டும் பார்ப்போம். பெருந்தலைவர் காமராஜர் மறைந்ததற்கு பேரறிஞர் அண்ணா குலுங்கிக் குலுங்கி கதறிக் கதறி அழுததாக கூறினார். அண்ணா இறந்தது 1969 ம் ஆண்டு, காமராஜர் இறந்தது 1975 அதாவது அண்ணா இறந்து ஆறு ஆண்டுகள் கழித்து காமராஜர் இறந்தார். அண்ணனின் அடுத்த உருட்டு, முதல்வர் காமராஜர் கட்டிய பள்ளியில்தான் அப்துல்கலாம் கல்வி பயின்றார் என நாடார்கள் கூடிய கூட்டத்தில் அள்ளி விட்டார். காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றது 1954 ம் ஆண்டு ஆனால் அப்துல்கலாம் அப்போது தன்னுடைய கல்லூரி படிப்பையே நிறைவு செய்து விட்டார். மேலும் அப்துல்கலாம் பள்ளிக் கல்வி பயின்றது கிறிஸ்தவ மிஷினரி பள்ளிகளில்தான் என்பது நம்ம சீமானுக்கு தெரியாமல் போய்விட்டது. அடுத்த உருட்டு தேனிக்கள் இனம் அழிந்து போனால் அதற்கடுத்த நான்காண்டுகளில் மனித இனமே அழிந்துவிடும் என ஐன்ஸ்டீன் கூறியதாக ஒரு புருடா விட்டார் ஆனால் அந்த விஞ்ஞானி அப்படிக் கூறியதாக எவ்வித சான்றும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை. அப்றம் அணுவை கண்டுபிடித்தவர் நோபல் என்ற அரிய கருத்தையும் கூறினார் ஆனால் ஜான் டால்டன் என்பவர்தான் 1808 ம் வருடம் முதன்முதலாக அணுவை உருவாக்கியவர் என்பது நம் அண்ணனுக்கு தெரியாது. சரி அது போகட்டும் அண்ணனின் அடுத்த உருட்டை பார்ப்போம்! குழந்தையை தூக்கிக் கொண்டு போருக்கு சென்றவர் வேலுநாச்சியார் என்று ஒரே போடாக போட்டார் ஆனால் அது வேலுநாச்சியார் அல்ல ஜான்சிராணி என்பதை அவரது அறிவார்ந்த தம்பிகளாவது அவருக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். அதே போல திருக்குறளில் கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்ற குறளில் ஒரு மனிதனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், மற்றவை செல்வமாகாது என்று கூறுகிறது. அந்த குறளில் வரும் மாடு என்பது கால்நடைகளைதான் குறிக்கிறது என மாடும் நமது செல்வங்கள்தான் என சீமான் கூறியதை கேட்ட தமிழறிஞர்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இடைத் தேர்தல் நெருங்க நெருங்க அண்ணன் சீமானின் இதுபோன்ற பொய்களை கேட்டு என்ஜாய் பண்ணலாமே தவிர அவருக்கு ஓட்டுப் போடுவது வேஸ்ட்.
மக்களோடு மக்களாக நின்று தொடர்ந்து களப்பணியாற்றிக் கொண்டிருந்தால் தேர்தல் நேரத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது தானே இதுவரை உள்ள அரசியல் கட்சிகள் எதுவும் தொய்வில்லாமல் தொடர்ச்சியாக பொதுநல பணிகளை செய்வதே இல்லை அதனால் அவர்களுக்கெல்லாம் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் என்பது அத்தியாவசியமாகிவிட்டது எனவே அண்ணாமலை அவர்களின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது முடிந்த அளவில் பொது நலப் பணிகளில் நம்மையும் ஈடுபடுத்திக் கொள்ளலாமே
எனக்கு சீமான் தன் கட்சியை தானே அழிப்பதாகதானே எண்ணம்?
பிரச்சாரம் செய்தாலே ஜெயிக்க வாய்ப்பில்லை. இதில் பிரச்சாரம் செய்யாமலா? எந்த உலகத்தில் இருந்து இயக்கம் நடத்துகிறார் அண்ணாமலை?
ரத்தம் தானமாக கொடுத்தால் உடல்நலம் பாதிக்கும் என்ற அச்சத்தை போக்கும் வண்ணமாக அந்துமணி பதில் இருந்தது
மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் வாக்காளர்களிடம் ஏழரை கேள்விகள்
04-Oct-2026