உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வி.சி.க.,வை அனுப்புங்கள்; பா.ம.க.,வை சேருங்கள்: விஜயிடம் ஆலோசனை சொன்ன அமைச்சர்கள்

வி.சி.க.,வை அனுப்புங்கள்; பா.ம.க.,வை சேருங்கள்: விஜயிடம் ஆலோசனை சொன்ன அமைச்சர்கள்

சென்னை: 'த.வெ.க., அமைச்சரவையில் பா.ம.க.,வை சேர்ப்பதற்கு வி.சி.க., முரண்டு பிடித்தால், அக்கட்சியை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விடலாம்' என, முதல்வர் விஜயிடம் அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.சட்டசபை தேர்தல் நேரத்தில் வி.சி.க.,வை கூட்டணியில் சேர்க்க, த.வெ.க., தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது; ஆனால், வி.சி.க., பிடிகொடுக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, இரண்டில் மட்டுமே வென்றது. ஆனால், தேர்தலுக்கு பின், த.வெ.க., ஆட்சி அமைக்க, வி.சி.க., ஆதரவு அளித்தது. அதற்கு கைமாறாக, வி.சி.க.,வுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7yapr5hi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் வி.சி.க., தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு ஆகியோர், சில நேரங்களில் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் விதமாக பேசி வருகின்றனர்; குறிப்பாக, மத்திய அரசையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்து வருகின்றனர். இதை, த.வெ.க., அமைச்சர்கள் பலர் விரும்பவில்லை.இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், பா.ம.க., ஓட்டுகள் கிடைத்ததால் தான், த.வெ.க., வேட்பாளர் மரகதம் குமரவேல், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல முடிந்தததாக, த.வெ.க., அமைச்சர்கள் சிலர் கருதுகின்றனர். அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், வட மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டுமானால், பா.ம.க., ஆதரவு அவசியம் என்ற முடிவுக்கும் வந்துள்ளனர். இதற்காக, த.வெ.க., அமைச்சரவையில் பா.ம.க.,வை சேர்க்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. பா.ம.க.,வுக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கவும் முதல்வர் விஜய் முன்வந்துள்ளார். ஆனால், பா.ம.க., அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என, வி.சி.க.,வினர் முரண்டு பிடிக்கின்றனர். இதனால், த.வெ.க., கூட்டணியில் பா.ம.க.,வை இடம் பெறச் செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. அமைச்சரவையில் இடம் பெற காய் நகர்த்திய பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் சவுமியா, கணேஷ்குமார் ஆகியோரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திருமாவளவன், வன்னி அரசு ஆகியோரை சமரசம் செய்யும் முயற்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்; ஆனால். வி.சி.க., தலைவர்கள் பிடிகொடுக்கவில்லை. அதனால், முரண்டு பிடிக்கும் வி.சி.க.,வை வெளியேற்றி விட்டு, பா.ம.க.,வை கூட்டணியில் சேர்ப்பதற்கு அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர் முதல்வரிடம் ஆலோசனை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் விஜய் எந்த முடிவும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Santhakumar Srinivasalu
அக் 13, 2026 23:05

ஏன் ஒரே கூட்டணியில் இருந்தது இல்லையா? வெட்டி பேச்சால் விலகி ஓட வேண்டியது தான். இனி யாரும் விசிகவை சீந்த மாட்டார்கள்? வேறு போக்கிடமும் இல்லை?


Santhakumar Srinivasalu
அக் 13, 2026 23:00

பாமக உள்ள வர்ரதை சகித்துக்கொள்ள வேண்டும்? அல்லது வெளியேற வேண்டும்?


சூரியா
அக் 13, 2026 22:09

பாமக மட்டும் ஒன்றும் புனிதமான கட்சி அல்ல. சிறுத்தைகள் அடித்துப் பிடுங்கி அராஜகம் செய்பவர்கள். பாமக ஒயிட் காலர் கிரிமினல்ஸ். இதுதான் வித்தியாசம்.


PATTALI
அக் 13, 2026 21:39

திருமாவளவன் விசிக இருக்கும் கூட்டணியில் பாமகவை சேர்க்கக்கூடாது என்று நீண்ட காலமாக பகிரங்கமாக தொடர்ந்து நிர்பந்திப்பது அந்த இரண்டு கட்சிகளின் தொண்டரக்களிடையே மேலும் பகையையும் வெறுப்பையும் அதிகரிக்குமே தவிர குறைக்க உதவாது. இந்த செயல் ஒருவகையில் இருதரப்பினருக்கும் இடையில் மறைமுகமாக வன்முறையை தூண்டுவதாகவே நினைக்க தோன்றுகிறது.


SULLAN
அக் 14, 2026 10:00

பச்சட சாதி வெறியனைத்தவிர வேறு எந்த நல்ல சமூகமும் சமூக மக்களும் ஏன் வன்னியர்கள் உட்பட எல்லா மக்களும் சுயநல பாமகவை ஏற்க மாட்டார்கள். தேவைஇல்லாமல் சௌம்யா அவர்களுக்கு கொஞ்சம் ஓவர் பில்ட் அப் கொடுப்பதை மீடியாக்கள் நிறுத்த வேண்டும்.


sankar
அக் 13, 2026 19:25

இரண்டு குதிரையில் பயணிக்க நினைக்கும் சிறுத்தை விரைவில் அதல பாதாளத்தில் விழுந்து ஆப்பு சொருகப்படும்


ராஜன்
அக் 13, 2026 19:23

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யை வெளியேற்றுவது நல்லது தானே பிறகு ஏன் முதல்வர் விஜய் அவர்கள் தாமதம் செய்கிறார்


apposthalan வேளாங்கண்ணி
அக் 13, 2026 18:50

பாவம் இந்த ஓட்டு தாஜா அரசியல் கட்சிகளின் நிலை...குருமா கூட்டம் மொத்தமும் த வே க வுக்கு ஓடி விட்டனர்...சிறுபான்மையினர் அப்டின்னு ஓசி சோறு பார்ட்டி பாவாடை ராயன் தீய மு க வுக்கு குல்லா போட்டுட்டு எங்கே சலுகைகள் கிடைக்கும்னு நாக்கை தொங்க போட்டுட்டு அங்கே ஓடிப் போய் பதவி சுகத்தை அனுபவித்து துரோகம் செய்து தாங்கள் மதம் மாறிய கூட்டம் என நிரூபித்து விட்டார்கள். இந்துக்கள் இனியும் விழித்து கொள்ளவும்...


SULLAN
அக் 14, 2026 10:24

இந்த கிரிப்டோ கிருஸ்தவன்ன்னு சொல்லுவாங்களே?? அது நீயா??


Abdul Rahim, karaikudi
அக் 13, 2026 18:43

ஜாதி வெறியன் வி சிக்கு கட்சியை கலைத்துவிட்டு இசுலாம்திற்கு மதம் மாறிவிட்டு அங்கே இமாம் பதவியா பெறலாம். அவர்களும் பா ஜ க உள்ளே வந்துடும் அப்டின்னு மொத்த வி சிக்கு பார்ட்டியும் முசுலீம் கட்சியுடன் சித்தாந்த அடிப்டையில் சங்கமித்து புரட்சி செய்ய வேண்டும்


அருண் பிரகாஷ் மதுரை
அக் 13, 2026 17:02

பாமக ஓட்டும் வேணும் விசிக ஓட்டும் வேணும்.. கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா..


Perumal Pillai
அக் 13, 2026 16:52

பாடசாலையில் மாட்டு இறைச்சி போட வேண்டும் என்று சொன்ன ஒருவனை மந்திரிசபையில் இன்னும் வைத்திருப்பது கேவலம் . எவ்வளவு பெரிய பதவி கொடுத்தாலும் இந்த கட்சிக்காரன் புத்தி இப்படித்தான்.


புதிய வீடியோ