உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஏழரை கேள்விகள்: எச்சில் விழுங்கும் ஆரவார குப்பைகள்

ஏழரை கேள்விகள்: எச்சில் விழுங்கும் ஆரவார குப்பைகள்

'முதல்வரின் 'திடீர்' வருகைக்கு முன்னும் பின்னும் கோவை, கருமத்தம்பட்டி காவல் நிலையம் - இப்படியான ஓர் 'ஒப்பீடு'தானே, முதல்வரது 'ஆய்வு' செய்திக்கு மதிப்பூட்டும்' என்று சிந்திக்காத குப்பைகளை கிளற முனைகையில், அருகில் புதிய மூட்டை; அதனிடம் சில கேள்விகள்...1 'சிரமப்பட்டு ஏழை போல் நடிக்கும் பணக்கார நடிகரை கடவுளாய் கொண்டாடும் மனது, சிரமத்துடன் நம்மை வளர்க்கும் தந்தையை மனிதனாய் கூட மதிக்க மறுப்பது ஏன்' என, இந்த தீபாவளியிலும் சிந்திக்காத இளைஞன் கொளுத்திய பட்டாசு இதில் எது?2 'த்ரிஷா விஜய் எழுதிய புத்தகத்தை எந்த பைத்தியக்காரனும் வாங்க மாட்டான்; அதுவும், தி.மு.க., நாங்க வாங்கவே மாட்டோம்' என்ற ஆவேச பேட்டி, 'தி.மு.க.,வினரை யாரெனச் சொல்கிறது' என்று புரிந்து புன்னகைக்காத பகுத்தறிவாளன் வீட்டு 'புஸ்'வாணமா இது?3 'உங்களை நேரில் பார்க்கவே நன்றாகப் படித்தேன்' என்று முதல்வர் விஜயிடம் பரிசு பெற்ற தமிழக மாணவி பூரிக்கையில், அய்யா அப்துல் கலாமின் கனவுகளை நினைத்து கண்துடைத்துக் கொண்டோரின் காலடி ஈரம் உன்னில் உண்டா?4 'பண்டிகைகளில் பல கொலைகள்; அடுத்த 48 மணி நேரத்தில் 450 ரவுடிகள் கைது' - இவ்விரு செய்திகளை வாசித்தபின்னும், 'திருட்டுக்கு பிறகு எதற்கு பூட்டு' என்று யோசிக்காத ஜீவன்கள், அதிரசத்தை விழுங்கும் முன் துப்பிய ஏலக்காய்தானே இது?5 'திரையரங்குகளில் காலை 6:00 மணி காட்சிக்கு அனுமதி' என்ற அரசின் அறிவிப்பு, இளைஞர்கள் மனதில் எவ்வித தாக்கம் உண்டாக்கும்' என்று பதறாத சினிமா ரசிகர்கள் வீடுகளில் இம் முறையும் பட்டாசு குப்பை கள் அதிகம்தானா?6 ' கோவை ஈ.வெ.ரா., நுாலக திறப்பு விழாவில், 'இதன் பிறப் புக்கு காரணம் தி.மு.க.,' என்று சொல்லி இருந்தால், 'நுாலக புத்தக கொள் முதல் ஊழலுக்கும் தி.மு.க.,வே காரணம்' எனச் சொல்வதை தமிழகம் நம்பியிருக்கும்' என்று கறுப்பு சிவப்பில் எழுதி கிழித்த துண்டு சீட்டுதானே அது?7 'அதிக விலைக்கு மின்சாரம் வாங்கவே 'செயற்கை மின்வெட்டு' நிகழ்த்தப்படுகிறது என்கிறீர்களே,'பட்டாசு சத்தத்தைவிட 'பட்டா கத்தி'களின் சத்தமே அதிகம்' எனும் மிகை வசனம், என்ன குறிக்கோளுடன் சொல்லப் படுகிறது ஸ்டாலின் சார்?' - இக்கேள்வி எழுப்பியவன் கொளுத் திய மத்தாப்பூ எங்கே?7 ½ இதென்ன... நம்பிக்கையில்லா தீர்மானமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை