உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆட்சியில் பங்கு விவகாரம்: காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு

ஆட்சியில் பங்கு விவகாரம்: காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு எதிர்ப்பு

ஆட்சியில் பங்கு கேட்டு பொதுவெளியில், பேசி வரும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமாருக்கு, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக காங்கிரசில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, முன்னாள் தலைவர் அழகிரி, எம்.பி., மாணிக்தாகூர், சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய மூவரும் ஒரே அணியாக செயல்படுகின்றனர். தி.மு.க., உடன் தொகுதி பங்கீடு பேச்சின்போது 'ஆட்சியில் பங்கு; அதிக தொகுதிகளில் போட்டி' என வலியுறுத்த வேண்டும் என மூவரணி வலியுறுத்தி வருகிறது. அதற்கு, 90 சதவீதம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஆதரவு கிடைத்துள்ளது. அதனால், ஓய்வு எடுத்திருந்த அழகிரி, தற்போது மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்லும் அளவுக்கு சுறுசுறுப்பாகி விட்டார். ராஜேஷ்குமாரும் மற்றொரு பக்கம், மாவட்ட வாரியாக ஓட்டு திருட்டு எதிர்ப்பு கையெழுத்து இயக்க கூட்டங்களில் பங்கேற்கிறார். விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரின் படங்கள் இல்லை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மாணிக்தாகூர், ராஜேஷ்குமார் படங்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து, செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள், டில்லி மேலிடத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். இதற்கிடையில், திருநெல்வேலியில் பேட்டியளித்த ராஜேஷ்குமார், ''ஆட்சியில் பங்கு என்பது காங்., தொண்டர்களின் எண்ணம். தமிழக கள நிலவரங்களை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அந்த அடிப்படையில், டில்லி தலைமை நல்ல முடிவு எடுக்கும்,'' என்றார். இந்நிலையில், அவரைக் கண்டித்து, செல்வப்பெருந்தகை ஆதரவாளரும், காங்., பொதுச்செயலருமான ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேச வேண்டிய விஷயங்களை எல்லாம், தன் அரசியல் சுயநலத்திற்காக, ராஜேஷ்குமார் பேசி வருகிறார். கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில், கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கிறார். ஆட்சியில் பங்கு என்பது தொண்டர்கள் விருப்பம் என்கிறார். தொண்டர்களின் விருப்பம் இருக்கட்டும்; கட்சியின், சட்டசபை தலைவர் என்ற முறையில், ராஜேஷ் குமார் விருப்பம் என்ன? கூட்டணி தொடர்பாக கருத்து சொல்வது என்றால், கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலோ, நிர்வாகிகள் கூட்டத்திலோ தான் தெரிவிக்க வேண்டும். நான்கு சுவருக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொது வெளியில் சொல்வதால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுகிறது. கூட்டணிக்கு குழப்பம் ஏற்பட வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமா? அப்படியென்றால், அப்படி செய்யச் சொல்லி, அவருக்கு அசைன்மென்ட் கொடுத்தது யார்? மாநிலத் தலைவரின் அதிகாரத்தில் வரம்பு மீறி தலையிடுவோர், இனியாவது தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
அக் 11, 2025 20:02

நாங்கள் எடுபிடியாக தான் இருப்போம் என்று தெளிவாக கூற வேண்டியது தானே பஞ்ச... சீ சீ சீ... செல்வ பெருந்தகை !!!


elangovan subramanian
அக் 11, 2025 17:58

காங்கிரஸ் பார்ட்டி முதலில் தங்களுடைய தொகுதியில் தனி மக்கள் செல்வாக்கு பெற்று, அதன்பின் கட்சியில் பெரும்பலம் அமைத்து, பிறகு தங்களது கூட்டணியில் பங்கு கேட்கலாம். தற்போது போஸ்ட் ஓட்ட கூட ஆட்கள் இல்லை, செலவு செய்ய பணம் இல்லை. இந்த தருணம் பங்கு கேட்பது இயலாது.


D Natarajan
அக் 11, 2025 10:23

ஏன் பதவி. பல்லக்கு தூக்க வேண்டியது தான்


duruvasar
அக் 11, 2025 08:26

நான்கு சுவர்களுக்குள் என்ன பேசுகிறாய் என்பதை தொண்டர்களுக்கும் சொன்னால் புரிந்து கொள்ளபோகிறார்கள் . திமுகவின் காங்கிரஸ் அணி பிரிவின் தலைவர் கோவப்படுவதில் அர்த்தமுள்ளது.


Ravi
அக் 11, 2025 08:08

அடுத்த தேர்தலில் நாலு பேர் கூட எம்எல்ஏ ஆக போவதும் இல்லை திமுக ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை.. அப்படி இருக்கும் போது ஏன் இந்த திண்ணை பேச்சு வீரர்கள் தங்களுக்குள் அடித்து கொள்கிறார்கள்


duruvasar
அக் 11, 2025 08:30

உதயசூரியன் சின்னத்தில் நின்று இவர் எம்எல்ஏ ஆகிவிடுவாரே .


prakash
அக் 11, 2025 17:17

enna arasiyal yo


A viswanathan
அக் 11, 2025 23:16

உழைத்து முன்னேறிய தலைவர்களுக்கு கட்சியின் அருமை தெரியும்.எல்லா கட்சிகளுக்கும இது பொருத்தும்


புதிய வீடியோ