உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தக்காளிக்கு மாற்றாக ஷீட் திருச்சி பேராசிரியை அசத்தல்

தக்காளிக்கு மாற்றாக ஷீட் திருச்சி பேராசிரியை அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: தக்காளி விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்திருக்கும் போது, சமையலில் பயன்படுத்தும் வகையில், திருச்சி, ஜமால் முகமது கல்லுாரி துணை பேராசிரியர், 'தக்காளி ஷீட்' என்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளை உருவாக்கி அசத்தியுள்ளார்.திருச்சி, ஜமால் முகமது கல்லுாரியில், உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறையின் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் சங்கீதா, 'தக்காளி ஷீட்'டை உருவாக்கி, கல்லுாரி முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம், செயலர் காஜா நஜ்முதீன், கிரியா நிறுவனர் சிவபாலன், உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை தலைவர் கவுஸ் பாஷா முன்னிலையில், அறிமுகப்படுத்தி உள்ளார்.இதுகுறித்து, துணை பேராசிரியர் சங்கீதா கூறியதாவது: தக்காளி பழங்கள் விலை குறைவாக இருக்கும் போது, அவற்றை வாங்கி சுத்தம் செய்து, தோல் மற்றும் விதைகளை நீக்கி, கூழாக்கி, மென்மையாக அரைத்து சீராகப் பரப்பி, உலர்த்தி, தரமான, 'தக்காளி ஷீட்' கள் தயாரிக்கப்படுகின்றன.விலை உயர்வாக இருக்கும் காலத்தில், அந்த ஷீட்டை துண்டுகளாக்கி சமையலுக்கு பயன்படுத்தலாம். இதனால், இதன் தரம், சுவை, சத்துகள் குறையாது. இந்த தக்காளி ஷீட்டுகளை காற்று புகாத பைகளில் வைத்து, மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாத்தும் பயன்படுத்தலாம்.தக்காளி ஷீட்டுகளை, விவசாயிகள் வீடுகளிலேயே எளிமையாக தயாரிக்கலாம், விற்கலாம்.தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன நிபுணர்கள், இந்த தக்காளி ஷீட்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N Annamalai
அக் 24, 2024 15:26

வாழ்த்துக்கள் .இதை உங்கள் கல்லூரி வெளியே ராதா கஃபே கடையிலே விற்கலாம்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2024 17:17

மன்னிக்கவும் தினமலர் மற்றும் பேராசிரியை அவர்களே. இந்த செய்தியில் புதுமை ஏதும் கிடையாது. எண்பதுகளில் மதுரையில் டோக் பெருமாட்டி கல்லூரி அருகில் சமூக நலத்துறை சார்பில் இயங்கிய ஒரு மத்திய அரசு நிறுவனத்தில், வீடுகளில் மூன்று மாதம் வரை கெடாமல் வைத்திருக்கும் வகையில் எலுமிச்சை ஆப்பிள் தக்காளி பழச்சாறு செய்வதற்கு பயிற்சி அளித்தார்கள். அப்போதே விலை குறைவாக உள்ள காலங்களில் தக்காளியை வாங்கி கூழாக செய்து பதப்படுத்தி விலை கூடுதலான காலங்களில் பயன்படுத்தும் முறையை கற்றுக்கொடுத்தார்கள்.


என்றும் இந்தியன்
அக் 22, 2024 16:26

கண்டுபிடிப்பு நிச்சயம் பாராட்டக்கூடியது. ஆனால் இது உடம்பிற்கு நல்லதல்ல. உதாரணம் : நாம் பிளேனில் செல்லும் போது இது அது என்று வாங்கினால் அதில் வெந்நீர் ஊற்றி 5 நிமிடம் பொறுங்கள் து வெந்த உப்புமா, வெந்த பொங்கல்..... என்று சாப்பிட்டிருக்கின்றோம். அதே principle தான் இதுவும். ஏதோ வருடத்திற்கு ஒரு முறை இரு முறை உபயோகிக்கலாம் ஆனால் Regular Use க்கு நல்லதல்ல. இதை கம்பனிகள் வாங்கி அதனுடன் preservative கலந்து கம்பெனிகள் விற்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கும்.


Ramesh Trichy
அக் 22, 2024 11:23

வாழ்த்துகள்


Karuppasamy Muthu
அக் 22, 2024 11:00

தக்காளியை காயபோடுவது வடக்கு பகுதியில் செய்வார்கள்.


Smba
அக் 22, 2024 08:13

தக்காளி பழம் போல் இருக்காது இது பஞ்சத்துக்கு ஆண்டி


visu
அக் 22, 2024 11:27

வாங்க முடியாதவர்களுக்கு வழி சொல்கிறார்கள் நீங்க 1000 ரூபாய் கொடுத்து தக்காளி வாங்கிக்கங்க


முக்கிய வீடியோ