வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அரசு நினைத்தால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் உணர இது நல்ல உதாரணம். இதுவே சீனா ஆஸ்திரேலியா மாதிரி இருந்தால் நிரந்தர தடை, மற்றும் உள்ளூர் செயலிகளை மட்டும் பயன்படுத்த கட்டாயத்தில் தள்ளப்படுவர். யாருக்கும் அடங்காத இந்த வெளிநாட்டு செயலிகள் முழுவதும் ஒழிய வேண்டும். பேட்ரியாட் மலையாள திரைப்படம் பாருங்கள்
இந்த செயலிகளால் வாழ்க்கையை தொலைத்த மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள் பல லக்ஷம் பேர். ஐ டி துறையினர் 80% உட்பட. பாதி கூட்டம் கண்ணை இந்த செயலிகளுக்குள் வைத்து கொண்டு தான் சாலையில் வண்டி ஓட்டுகிறது. வீட்டுக்குள் கணவன் மனைவிக்குள் பேச்சு வார்த்தை இல்லை. குழந்தைகள் பெற்றோர்களிடம் பேசுவதில்லை. அந்த அளவு மனித வாழ்க்கை மோசமாகி உள்ளது.
இந்த பத்திரிக்கையில் கிட்டத்தட் 3500 பதிவுகளை போட்டு முன்னணியில் நிக்கிறே வே. அப்படீன்னா நீ 24 மணிநேரமும் எதை நோண்டிக்கிட்டு இருக்கே? நீ மத்தவங்கள குறை சொல்ல வந்துட்டியாக்கும்?
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிப்பாட்டிடலாம் என்று யாரோ சொல்லியிருப்பார்களோ?
எத்தியோப்பியா வில் 12 கிரேடு தேர்வு நடக்கும் பொழுது கிட்ட தட்ட ஒரு மாதத்திற்கு தேர்வுகள் முடியும் வரை வாட்ஸ் ஆப் டெலிகிராம் போன்ற அனைத்து விதமான மொபைல் மற்றும் ஜிமெயில் யாஹூ போன்ற இணையவழி தொடர்பு செயலிகளையும் ஒட்டு மொத்த நாட்டிற்கும் தடை செய்து விடுவார்கள் ஏன் என்றால் இதில் இதில் மாணவர்களின் வாழ்க்கை அடங்கி இருக்கிறது என்று கருதுவதால்... ஆனால் இங்கே ஒரே ஒரு செயலி அதுவும் ஒரு நான்கு நாட்களுக்கு....
ஒப்பீடு செய்ய எத்தியோப்பியா. சூப்பரப்பு.
கூமுட்டை கொத்தடிமையே வலராத நாட்டிலேயே இப்படி என்றால் வளரும் நாடான நாம் மாணவர்கள் நலன் கருதி இதை செய்துதான் ஆகவேண்டும்...
சோசியல் மீடியா இல்லாமல் வாழ முடியாது என்று போராட்டம் செய்வது மனித குலத்தின் மிக பெரிய அவமானம் இதை சரி செய்ய அடிக்கடி facebook,twitter,instagram, எல்லாத்தையும் shut down செய்து மக்களை பலவீனங்களில் இருந்து திசை திருப்ப அரசு முயற்சிக்க வேண்டும் நமது பழைய வாழ்க்கை முறையை நாம் மறக்க கூடாது கொரானா காலத்தில் நாம் வாழ வில்லையா ?
"மிகச் சிறந்த பிராக்டிகல் எதார்த்தம் டெலிகிராம் செயலி எவ்வளவுதான் தனிநபர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் மூலம் தேசிய அளவிலான தேர்வுகள் ரத்தாகி, மறுதேர்வு நடத்தப்படும் போது வீணாவது அக்மார்க் சாமானிய மக்களின் வரிப்பணம்தான் ஒரு தேர்வு நடத்துவதற்குப் பெற்றோர்களின் பாக்கெட்டிலிருந்தும், மக்களின் வரியிலிருந்தும் பல நூறு கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. சில சமூக விரோதிகளின் லீக்கேஜ் ஆட்டத்திற்கு இந்த ஆப் புகலிடமாக இருக்கும் பட்சத்தில், நாட்டின் நிதி மற்றும் மாணவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருதி இதனை இந்தியாவில் நிரந்தரமாகத் தடை செய்வதில் எந்தவொரு தப்புமே இல்லை. நஷ்டம் மக்களுக்குத்தான், கார்ப்பரேட் ஆப்பிற்கு அல்ல"
"போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் பல நேர்மையான மாணவர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்திற்கு டெலிகிராம் ஆப்பையே நம்பியுள்ளனர் . வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கறாராகக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் கடுமையான ஆயுள் தண்டனை போன்ற தீர்ப்புகளை வழங்க வேண்டும். கருவியை முடக்குவதை விட குற்றவாளிகளை ஒடுக்குவதே புத்திசாலித்தனம்"
ஆப்பை மட்டும் தடை செய்வது தற்காலிகத் தீர்வுதான் என்பது ஒருபுறம் இருந்தாலும், வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு மிக எளிதான புகலிடமாக டெலிகிராம் திகழ்கிறது என்பதை மறுக்க முடியாது. 4 ஜிபி வரை ஃபைல்களை அனுப்பும் வசதி இருப்பதால், ரகசியக் குழுக்கள் மூலம் கசிவுகள் எளிதாக அரங்கேறுகின்றன. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெறும் தடையோடு நிறுத்தாமல், தேசிய தேர்வு முகமையின் NTA உள்ளகப் பாதுகாப்பு சிஸ்டத்தில் இருக்கும் மெயின் லூப்ஹோல்களை Loopholes அடைக்க வேண்டும். அப்போதுதான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்"
"வினாத்தாள் கசிவு காரணமாக இன்று லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவர்கள் மீண்டும் தேர்வு Re-exam எழுத வேண்டிய கொடூரமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கும், பெற்றோர்களுக்கு ஏற்படும் வீண் பணச் செலவுக்கும் இந்த டெலிகிராம் ஆப் ஒரு முக்கியக் கருவியாகப் பயன்பட்டுள்ளது என்பது அக்மார்க் உண்மை ஒரு தேர்வின் புனிதத்தையே கெடுக்கும் இத்தகைய ஆபத்தான செயலிகளுக்கு வெறும் 4 நாட்கள் தற்காலிகத் தடை விதிப்பது என்பது அப்பட்டமான கண் துடைப்பு நாடகம். மாணவர்களின் எதிர்காலத்தை விளையாட்டாக நினைக்கும் இதுபோன்ற ஆப்களை இந்தியாவில் நிரந்தரமாகத் தடை செய்வதில் ஒரு தப்பும் இல்லை"
Telegram App நான்கு நாட்கள் மட்டும் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதே போல், மற்ற சமூக வலைத்தளங்களுக்கும், நான்கு நாட்கள் தடை ஏன் விதிக்க வில்லை ? Telegram App மூலமாகத்தான், கேள்வித்தாள் லீக் ஆனதை கண்டுபிடித்ததாக கூறினால், மற்ற சமூக வலைத்தளங்களில், Document Sharing with password setting Option இல்லை என்று தேர்வாளர்கள் கருதுகிறீர்களா ? ஒரு அவசரத்திற்கு தகவல் பரிமாற்றத்திற்கு, Telegram App சேவை தேவை என்பதை மறுப்பதற்கில்லை. மற்ற செயலிகளை காட்டிலும், Telegram App-ன் நம்பகத்தன்மை, சற்று கூடுதலாகும். ஒரு சிலர் தவறாக பயன்படுத்து கிறார்கள் என்பதற்காக, முழு தளத்தையும் முடக்குவது ஏற்கத்தக்கதல்ல. எனினும், Telegram App நான்கு நாட்கள் மட்டுமே தடை என்று கூறி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. I support Telegram App rather than other similar apps.
மேலும் செய்திகள்
கோவையை ஆளப்போகிறது ஏ.ஐ!
19-May-2026