உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கிளையை வெட்டினால் ஆறு மாதம் சிறை; மரங்கள் மாநாட்டில் சீமான் அறிவிப்பு

கிளையை வெட்டினால் ஆறு மாதம் சிறை; மரங்கள் மாநாட்டில் சீமான் அறிவிப்பு

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச் சாலையில் மனித நேய பூங்கா மற்றும் வனப்பகுதியில், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களின் மாநாடு நேற்று நடந்தது.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

மரங்களின் மாநாடு நடத்துவதற்காக, காட்டில் புலிகள் நுழைந்துள்ளன. அதனால், ஒரு அணில் கூட காணவில்லை. ஆனாலும், அணில்களுக்கும் சேர்த்து தான் மரங்களின் மாநாடு நடத்துகிறோம். காடுகள் இருந்தால் தான், அங்கிருக்கும் மரங்கள் மழை பொழிய வைக்கும். மரங்கள் இல்லை என்றால், உலகில் எந்தவொரு உயிரினமும் இருக்காது. மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில், பருவமழை பெறும் மழை கிடையாது. வெறும் புயல் மழை மட்டும் இருக்கும். புவி வெப்பமாவதால், பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில், தாங்க முடியாமல் கடல் பொங்கி கொந்தளிக்கும். மழைநீரை முறையாக சேமிக்காமல், கடலில் வீணாக கலக்கிறது. பின், குடிநீர் பிரச்னை என்று சொல்லி கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்குகின்றனர். இதற்கு, அரசு தரப்பில் 50,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, துாய்மையான காற்றை பெறுவதற்கு, 4,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு உள்ளோம். புதுடில்லியை போல தமிழகத்திலும், சுத்தமான காற்றை குடுவையில் விற்கப் போகின்றனர். காற்று தானாக மாசுபடுவதில்லை; நாம் தான் அதை மாசுபடுத்துகிறோம். பூமியை சமநிலைப்படுத்துவதில், மரங்களின் பங்கு அதிகம் என்பது அறிஞர்கள் கருத்து. நான் ஆட்சிக்கு வந்தால், மரத்தின் ஒரு கிளையை வெட்டினாலும், ஆறு மாதம் சிறை தண்டனை வழங்குவேன். மேலும், மாணவர்கள் 100 மரக்கன்றுகள் நட்டால் பொதுத்தேர்வில் 10 மதிப்பெண், 1,000 மரக்கன்றுகள் நட்டால், அரசு பணிக்கான தேர்வில் 10 மதிப்பெண் வழங்குவேன். 10,௦௦௦ மரக்கன்றுகள் நடுபவர்களுக்கு, அவர்களின் இறுதி சடங்கு, அரசு மரியாதையுடன் செய்யப்படும். இது என் உறுதிமொழி. கழிவுநீரை சுத்திகரித்து, அதன் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை ஊற்றியே மரங்களை வளர்க்கலாம்; அதை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர் அறிவிப்பு

மரங்கள் மாநாட்டில் வரும் சட்டசபை தேர்தலில், திருத்தணி தொகுதியில் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சந்திரன், திருவள்ளூர் தொகுதியில் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் போட்டியிடுவர் எனக்கூறி, அவர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Abdul Rahim
ஆக 31, 2025 20:27

இன்னமுமா இந்த உலகம் உங்கள நம்புது.....


முதல் தமிழன்
ஆக 31, 2025 19:52

இவரு காமெடி பண்ற மாதிரி தெரியுது. வடிவேல் அவர்கள் எங்கிருந்தாலும் உடனே வந்து காமெடி படம் நடிக்கவும். கொசு தொல்லை தாங்க முடியலை...


என்றும் இந்தியன்
ஆக 31, 2025 19:00

ஆகவே கிளையை வெட்டாமல் முழு மரத்தையும் வெட்ட வேண்டும். என்ன குருமா சரிதானே?


tirou
ஆக 31, 2025 15:22

ஒருவர் சவுக்கு பரிசளித்த அரசியல்வாதி


Anbuselvan
ஆக 31, 2025 15:08

மரமோ செடியோ நன்கு வளர வேண்டுமெனில் அதற்கு கிளைகளை வெட்ட வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் ப்ரூனிங் Pruning என்று பெயர். முருங்கை மரத்தை ஒரு அடி உயரம் விட்டு விட்டு வெட்டினால் அது ஆறு மாதத்தில் மறுபடியும் விருட்சமாகும். பெரிய பெரிய மரங்களில் இந்த வேலையை இயற்கை எடுத்து கொள்கிறது.


Enrum anbudan
ஆக 31, 2025 12:56

அரசியல் கோமாளி


Balasubramanian
ஆக 31, 2025 11:27

மக்களின் நாடித்துடிப்பு புரியாத கோமாளி. கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பதை உணராத உன்மத்தன்


Vasan
ஆக 31, 2025 11:08

Instead of allocating just 10 marks in each subject for plantation of tree saplings, please reserve an exclusive subject for plantation of tree saplings for 100 marks, in which every student must secure at least 50% marks to get PASS result. This is because students may not put in efforts for those 10 marks and will try to get the maximum out of renaining 90 marks. Whereas when made as a compulsory subject, all students will work hard to put at least 50% effort to get 50% pass marks.


VSMani
ஆக 31, 2025 10:14

எங்கள் வீட்டு மரத்தின் இலைகள் பக்கத்து வீட்டில் விழுகிறது என்று பாலா ஆருடங்கள் இருந்த மரத்தையே வெட்ட போலீஸ்காரர்களை பணம் கொடுத்து கூட்டிவந்து பிரச்னை பண்ணுகிறார்கள். கிளையை வெட்டினால் ஆறு மாதம் சிறையா?


K.Ravi Chandran , Pudukkottai
ஆக 31, 2025 07:23

இங்கு தலையை வெட்டினவனே ஜாலியா ஜாமின்ல வெளிவந்து அடுத்த தலைக்கு ரெடி பண்றான்? இவரு வேற அப்பப்ப காமெடி பண்ணிக்கிட்டு?


பிரேம்ஜி
ஆக 31, 2025 08:53

சூப்பர் கமெண்ட்! சிரிக்க வைத்தது! தான்தோன்றி தலைவனின் கிறுக்குத்தனம் எல்லை மீறுகிறது! நமக்கும் பொழுது போகுது!


புதிய வீடியோ