உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: ரிட்டையர் ஆகிறாரா ஸ்மிருதி?

டில்லி உஷ்ஷ்ஷ்: ரிட்டையர் ஆகிறாரா ஸ்மிருதி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., வட்டாரங்களில் ஒரு முன்னாள் அமைச்சர் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. 'அதிரடியாக செயல்பட்ட அந்த அரசியல்வாதி, அரசியலுக்கு முழுக்கு போடப் போகிறாரா...' என, ஆச்சர்யப்படுகின்றனர். அவர் வேறு யாருமல்ல... அந்த அரசியல்வாதி, பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இரானி!கடந்த 2019 பார்லிமென்ட் தேர்தலில் ராகுலை தோற்கடித்து, அமேதி தொகுதி எம்.பி., யான இவர், மத்திய அமைச்சராகவும் ஆனார். ஆனால், 2024ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரசிடம் தோற்றுப் போனார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w4h7lys0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எம்.பி.,யாவதற்கு முன், தொலைக்காட்சி நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருந்தார். இவர் நடித்த ஹிந்தி சீரியல், 'க்யூங்கி சாஸ் பி கபி பஹூ தி' சக்கை போடு போட்டது. அமைச்சரான பின் நடிப்பதை ஓரங்கட்டினார்; இப்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.'க்யூங்கி சாஸ் பி கபி பஹூ தி' என்கிற இந்த ஹிந்தி சீரியலின் இரண்டாம் பாகம் தயாரிக்க ஆரம்பித்துவிட்டனர்; அதில் மீண்டும் நடிக்கிறாராம் ஸ்மிருதி. இதற்காக மும்பையில் வீடு வாங்கி, அங்கு தங்கி, 'டிவி' சீரியலில் நடிக்கப் போகிறாராம்.'அரசியலில் இனிமேல் நமக்கு பெரிதாக எதுவும் இல்லை என்பதால், சீரியலில் நடிப்பதே நல்லது' என்கிற முடிவிற்கு ஸ்மிருதி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.'பார்லிமென்டிலும், வெளியிலும் காங்கிரசை கடுமையாக விமர்சித்த இவர், இப்போது அரசியலிலிருந்து விலகுகிறாரே...' என, பா.ஜ.,வினர் வருத்தத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

rama adhavan
ஜூலை 06, 2025 21:34

அப்போ கனிமொழி, தங்கபாண்டியன் எல்லாம் இளைஞர்களா?


Ramesh Sargam
ஜூலை 06, 2025 12:11

தமிழகத்திலும் பாஜவுக்காக குரல் கொடுத்த குஷ்பூ எனும் நடிகை என்னவானார் என்றே தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.


Rathna
ஜூலை 06, 2025 12:10

இவரை போன்ற பேச்சு திறமை உள்ளவரை பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பது அந்த கட்சியின் தோல்விதான்.


Ramesh Sargam
ஜூலை 06, 2025 12:10

திறமையான, மிகவும் தைரியம் கொண்ட இவரை பாஜக மேலிடம் ரிடையர் ஆகவிடக்கூடாது. அவருக்கு தகுந்த ஒரு நல்ல பதவியை கட்சியில் அவருக்கு கொடுக்கவேண்டும் என்று விழைகிறேன்.


venugopal s
ஜூலை 06, 2025 11:39

அவ்வளவு தான், இவருக்கு வயதாகி விட்டது. அவர் புதிதாக ஒருவரை இவருடைய இடத்துக்கு கொண்டு வருவார்!


பழனி ராஜா
ஜூலை 06, 2025 09:59

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து இருந்தால் வாரிசுகள் அமைச்சர் ஆகலாம். நான்கு கனிமங்கவள உரிமைகள் பெற்று கோடிகளில் புரண்டு இருக்கலாம்.


Arul Narayanan
ஜூலை 06, 2025 08:58

இது தான் இந்திரா காந்தியின் அரசியல் பாணி. காங்கிரஸ் வீழ்ச்சிக்கும் காரணம் அதுவே.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 06, 2025 08:50

நினைவுக்கு வரும் சொலவடை ....


RRR
ஜூலை 06, 2025 08:44

பாஜகவுக்கு இந்தியா முழுவதுமே கேடு காலம் நடக்கிறது... நூபுர் சர்மா, Tiger ராஜா, அண்ணாமலை, ஸ்ம்ருதி இரானி என பாஜகவில் ஓரம்கட்டப்பட்ட மிகத்திறமையான, ஆளுமை மிக்கவர்களின் பட்டியல் நீளுகிறது....


அப்பாவி
ஜூலை 06, 2025 08:04

பா.ஜ பெண்களின் ரிடையர்மெண்ட் வயது 60.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை