உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாமலையை வரவேற்க பாடல் ஹேஷ்டேக்: பா.ஜ.,வினர் ஏற்பாடு

அண்ணாமலையை வரவேற்க பாடல் ஹேஷ்டேக்: பா.ஜ.,வினர் ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மூன்று மாத கால அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை டிச.,1 ல் நாடு திரும்புகிறார். வந்த பின் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட உள்ளார்.கடந்த மூன்று மாதங்களாக அண்ணாமலைக்கு பதிலாக எச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு பா.ஜ.,வின் நடவடிக்கைகளை கையாண்டது. இந்நிலையில் சென்னை வரும் அண்ணாமலையை வரவேற்று, பா.ஜ.,வினர் பாடல் ஒன்றை உருவாக்கி வைரலாக்கியுள்ளனர். 'வச்சக்குறி தப்பாதுடா... சிங்கம் இது சிக்காதுடா... சுத்துப்போட்டு நிக்காதடா... சூறை விட்டா தாங்காதுடா... சிவன்டா.... சிவன்டா... சிவன்டா... எதுக்க எவன்டா... எவன்டா... எவன்டா...' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவும் மாநில தலைவர் எம்.எஸ்.பாலாஜி, பார்வையாளர் அர்ஜூனமூர்த்தி ஆகியோர் தலைமையில் துணைப் பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத், செயலாளர் செந்தில்குமார் உட்பட மாவட்ட நிர்வாகிகளுடன், ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினர். சென்னை திரும்பும் அண்ணாமலையை வரவேற்று, இன்று (நவ.,30) மாலை முதல் 'டி.என்.வெல்கம் அண்ணாமலை' என்ற ஹேஷ்டேக்கை சமூகவலைதளங்களில் பிரபலப்படுத்தி, அதிக தொண்டர்களை ஈர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 15:51

ஹேஷ் டேக் எவ்வளவு போயிருக்கு?


Senthoora
டிச 01, 2024 17:03

பாட்டு பொருத்தமாக இருக்கும்.


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 15:50

இன்னொரு அலுமினிய பிலிம் டப்பா ரெடி பண்ணுங்க. டம்ளக் பைல்ஸ் -3 ரெடி பண்ணி செலிபி எடுத்து போடணும். பாவம் எச் ராஜா, கெளம்பு கெளம்பு..


K.n. Dhasarathan
டிச 01, 2024 11:35

அண்ணாமலை வந்ததும் பொய்கள் மழை ஆரம்பிக்கும், பஞ்சால் மழை பொழிந்தது போல தினம் நூறு பொய்கள் வந்து விழும், ஆனால் ஏதாவது ஆதாரத்தோடு பேசட்டும், இல்லையேல் வேற்று கூச்சல் ஆகிவிடும் என்று யாராவது எடுத்து சொல்லுங்கள், மக்கள் வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள், மனதிற்குள் சிரிப்பார்கள், ஒட்டு மட்டும் போட மாட்டார்கள் என்று விபரமாக எடுத்து சொல்லுங்கள், அப்புறம் எப்படி கட்சி வளரும் ?


ARAI G P PANDIAN
டிச 01, 2024 09:11

இனி தமிழகத்தில் அதிரடி அரசியல் ஆரம்பம்


சுலைமான்
நவ 30, 2024 21:49

திகார் முன்னேற்றக் கழக கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ட போயி கேளுங்க திராவிடாஸ்....


அப்பாவி
நவ 30, 2024 18:24

பரவாயில்லை. துண்டுச் சீட்டு இல்லாம கம்பியூட்டர் ப்ராம்ப்ட் வெச்சுக்கிட்டு பேசுறாரு. அதுவும் மூணு நாலு வெச்சிருக்காரு.


Sundar G
டிச 01, 2024 06:08

ரொம்ப அப்பாவியா இருக்க LED spot light க்கும் கம்ப்யூட்டர் பிரொம்ப்ட் Screen க்கும் வித்யாசம் தெரியல


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 15:47

மூணு நாலு tab promoter வெச்சிண்டு பேசறார். அதில் pre- programmed question answers கூட அப்லோட் பண்ணிக்கலாம். இனி full entertainment தான்.


Barakat Ali
டிச 01, 2024 18:45

தலைவன் மட்டுமில்ல .... மொத்தம் பேருக்கும் brain in the AH. நீட் ஐ எதிர்க்கும் இவிங்க தலீவரே நீட் கோச்சிங் படிக்கும் மாணவிகளிடம் நீட் செகண்ட் இயற் படிக்கிறீங்களா என்று கேட்டார் ....


Oviya Vijay
நவ 30, 2024 17:21

பெயர்: அண்ணாமலை வயது: 40 தொழில்: வாய்ச்சவுடால் ஒன்று மட்டும் சம்பாத்தியம்: நண்பர்கள் உதவியுடன் காலந்தள்ளுவது அரசியல் அறிவு: ஜீரோ - புஷ்வானம் பிணக்கு: சொந்த கட்சியின் சீனியர்களுடன் பிடித்தவர்கள்: ஜால்ரா தட்டும் முட்டு கொடுக்கும் சங்கிகள் பிடிக்காதவர்கள்: எதிர்க்கட்சி மீடியாக்கள் அடிமை: மத்திய சங்கி அரசுக்கு பிடித்த டயலாக்: அண்ணே. ஒரு நிமிஷம். ஒரு நிமிஷம் பொங்குவது: எதிர்க்கட்சிகளை பார்த்து பதுங்குவது: சொந்த கட்சியில் நடக்கும் அராஜகத்தை கண்டும் காணாதது போல் எதிர்காலம்: சீமானை போல் பேசிப் பேசியே காணாமல் போகப் போவது. தமிழக மக்களால் என்றைக்குமே தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பில்லாமல் மத்திய அரசின் கடைக்கண் பார்வையால் வேண்டுமானால் மத்திய அமைச்சர் பதவி.


சம்ப
நவ 30, 2024 16:24

எடுபடாது முடித்து விடுவார் கவல வேண்டாம்


Vijay D Ratnam
நவ 30, 2024 14:17

ஏண்டா ஒரு மூணு மாச சர்டிபிகேட் கோர்ஸ் முடிச்சுட்டு வர இவ்ளோ பில்டப்பா. என்னவோ சர்வதேச அளவில் அறிவியல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு பல்கலை கழகத்தில் ஆர்டிக்கில் சமர்ப்பித்து அதை சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி கழகம் ஏற்றுக்கொண்டு, அதை ஸ்வீடனில் உள்ள நோபல் சொசைட்டிக்கு பரிந்துரைத்து அந்த ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு வழங்கியதை பெற்றுக்கொண்டு நாடு திரும்புவது போல எதுக்கு இந்த வெட்டி உதார். ஊழலின் தந்தை என்று கூறப்படும் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கே பெருமை. அந்த நாணயத்தை வெளியிட ராஜ்நாத் சிங் வந்தது உலகில் உள்ள தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை என்று பினாத்திய அறிவு ஜீவி ஆச்சே அண்ணாமலை.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 30, 2024 14:10

திராவிட மாடல் அடிமைகள் அழுது புலம்பி கதற ஆரம்பித்துவிட்டார்கள் ......... இப்பவே இப்படி கதறிக்கதறி உசுர விட்டா என்ன பண்ணுறது ????


முக்கிய வீடியோ