உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தென் மாவட்ட வேட்பாளர் தேர்வு கனிமொழியிடம் ஒப்படைப்பு

தென் மாவட்ட வேட்பாளர் தேர்வு கனிமொழியிடம் ஒப்படைப்பு

தென் மண்டல சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை, தி.மு.க., மண்டல பொறுப்பாளரும், துணை பொதுச்செயலருமான கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், துணை முதல்வர் உதயநிதி ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வேட்பாளர்கள் தேர்வில், தி.மு.க., தலைமை கூடுதல் கவனம் செலுத்த உள்ளது. தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில், தென் மண்டல பொறுப்பாளராக உள்ள கனிமொழியிடம் துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2x4pjd12&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென் மாவட்டங்களில் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரின் தொகுதிகளில் உட்கட்சி பூசல்கள் அதிகமாக உள்ளன. அதனால் தகுதியானவர்க ளையும், மக்கள் செல்வாக்கு உள்ளவர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என, கனிமொழிக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இது தெரிந்ததும், இம்மாவட்டங்களில் உள்ள துணை முதல்வர் உதயநிதி ஆதரவு நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கு காரணம், இளைஞரணி நிர்வாகிகளாக இருக்கும் சிலர், தங்களுக்கு 'சீட்' கிடைக்காமல் போய்விடும் என, அஞ்சுகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

duruvasar
அக் 22, 2025 19:51

இளம் விதவைகள் பெருகுவதை கண் துஞ்சாமல் கட்டுப்படுத்திகொண்டிருக்கும் வேலை பளுவே சமாளிக்கமுடியாமல் யிருக்கிறார். பாவமாக இருக்கிறது


அப்பாவி
அக் 22, 2025 17:37

தெக்கே கட்டணம் வசூலிக்கும் குத்தகை..


Easwar Kamal
அக் 22, 2025 16:37

அப்படியே இந்த துர்க்கா அம்மய்யார் கனிமொழியிடம் ஒப்படைத்து vituvadurakkum. தன வீண்போன மகனுக்காக தன மகள்/ மருமமகனை எல்லாம் ஓரம் கட்டி வைத்தவர் இந்த கனி மொழியை எல்லாம் விட்டு விடுவராக்கும். சுடலை வீட்டுப்பக்கம் போக முடியுமா? இது தெரிந்துதான் கருணா இந்த சுடலை குடும்பத்தை araave தள்ளி வைத்தார்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2025 16:11

இவருக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் தேர்வு செய்யப்பட வேண்டிய வேட்பாளர்களில் 50 சதவீதம் இளம் விதவைகளுக்கு ஒதுக்கவேண்டும்


Thiagaraja boopathi.s
அக் 22, 2025 15:25

நம்பினால் மட்டுமே சோறு


ஆரூர் ரங்
அக் 22, 2025 14:22

கடைசியில் மருமகனுக்கு கப்பம் கட்டுபவர்கள் மட்டுமே பயனடைவர்.


angbu ganesh
அக் 22, 2025 13:59

எந்த வட்டமானாலும் இந்த தடவை உங்களுக்கு ஆப்புதான்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 22, 2025 13:50

கனிமொழியார் தென் மாவட்டங்களில் கருத்து கேட்பு நடத்தி தேர்வாளர்களை தேர்வு செய்து பட்டியலை தலைமேல் கலகத்திடம் கொடுப்பார். அப்படி கொடுக்கும் போது புகைப்படம் காணொளி எடுத்து ஊடகங்களில் பலமுறை தொடர்ந்து செய்தியாக்கப்படும். ஆனால் இறுதியில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது கனி மொழி தேர்வு செய்த எவருமே அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்க மாட்டார்கள்.


V RAMASWAMY
அக் 22, 2025 11:47

வேட்டை.


ஆரூர் ரங்
அக் 22, 2025 11:31

அப்போ வட மாவட்டமெல்லாம் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை