உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மஹாராஷ்டிரா முதல்வர் நிலைப்பாடு; ஸ்டாலின் கேள்வி

மஹாராஷ்டிரா முதல்வர் நிலைப்பாடு; ஸ்டாலின் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு:மூன்றாம் மொழியாக ஹிந்தியை திணிக்க பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என, இப்போது கூறுகிறார். ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக, பொதுமக்களின் பரவலான கண்டனம் குறித்து, அவர் கொண்டிருக்கும் அச்சத்தின் தெளிவான வெளிப்பாடு இதுவாகும்.பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும், இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின்கீழ், மஹாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர, வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? அப்படியானால், மூன்றாவது மொழியை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா? மும்மொழிக் கொள்கையை காரணம் காட்டி, தமிழகத்திற்கு அநியாயமாக 2,152 கோடி ரூபாய் நிறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

h
ஏப் 22, 2025 20:51

பயங்கரவாதிகள், குற்றவாளிகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்க.


Ramesh Sargam
ஏப் 22, 2025 19:47

மொழி அரசியலை விட்டு தமிழக முதல்வருக்கு வேறு ஒன்றும் தெரியாது போல தெரிகிறது. மக்கள் இவரை மொழி அரசியல் செய்ய மட்டுமா முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள்?


அருண் பிரகாஷ் மதுரை
ஏப் 22, 2025 11:16

பாஜக முதல்வர் பற்றி உங்களுக்கு என்ன கவலை. உங்கள் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே முதல்வரான பினராயி அவர்களின் நிலைப்பாடு என்ன என்று தமிழ்நாட்டு மக்களிடம் அறிக்கை கொடுங்கள்.


vijai hindu
ஏப் 22, 2025 10:42

முதல்ல அந்த சார் யாருன்னு எல்லாருக்கும் தெளிவுபடுத்தவும்


vijai hindu
ஏப் 22, 2025 10:41

உங்க வேலையை பாருங்க


Ambedkumar
ஏப் 22, 2025 10:23

நமது முதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு


S.Balakrishnan
ஏப் 22, 2025 09:52

வர வர முதல்வர் ஒன்று கிடக்க ஒன்றை பேசி மக்களின் அறியாமையை சோதிக்கிறார். ஊழல் ஆட்சியில் உண்டான கஷ்டங்களை கட்டாயம் மறக்க மாட்டார்கள். பண பலத்தில் ஆடும் ஆட்டத்திற்கு வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.


ஆரூர் ரங்
ஏப் 22, 2025 09:18

மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தமிழ்ப் பள்ளியில் படித்தவர். இங்கேயே படித்த உங்களுக்கு தமிழ் எவ்வளவு சரளமா வருது?


M Ramachandran
ஏப் 22, 2025 08:55

உங்க பாடே தரிகினதோம். மகாராஷ்டா விற்கு போயிட்டீங்க.


Shekar
ஏப் 22, 2025 08:34

விடியல் சார், முதல்ல உங்க நிலைப்பாடு என்ன? ஹிந்தி கற்று கொடுக்கும் CBSE ல இருந்து சமச்சீர் கல்வி முறையை எப்போது உங்க சூரிய பிரகாஷத்தில் அமல்படுத்த போறீங்க?


சமீபத்திய செய்தி