உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாடவேண்டும்: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாடவேண்டும்: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள்

புதுடில்லி: 'அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாட வேண்டும். அதைத் தொடர்ந்து, தேசிய பாடல், தேசிய கீதம் பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும்' என, புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் தேசிய கீதமாக, 'ஜன கண மன' பாடலும், தேசிய பாடலாக, 'வந்தே மாதரம்' பாடலும் உள்ளன. அரசு நிகழ்ச்சிகளில் இந்த இரு பாடல்களையும் கட்டாயம் பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் இந்த உத்தரவை கடைப்பிடிப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தால், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முந்தைய தி.மு.க., அரசுக்கும், முன்னாள் தமிழக கவர்னர் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவியது. தேசிய கீதம் முதலில் பாடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த நிகழ்வுகளும் அரங்கேறின. இதற்கிடையே, தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலையும் அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் முக்கிய அம்சமாக, பாடலின் அனைத்து பத்திகளையும் முழுமையாக பாட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில், மாநில பாடலை முதலில் பாடுவதா அல்லது தேசிய கீதத்தை பாடுவதா அல்லது தேசிய பாடலை பாடுவதா என்ற குழப்பம் மாநில அரசுகளிடையே நிலவியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு நிகழ்ச்சிகளில், முதலில் தேசிய பாடலை பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, தேசிய கீதத்தை இசைக்க வேண்டும். மாநில அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடல் பாடப்பட வேண்டும். அதன்பின், தேசிய பாடல், தேசிய கீதம் ஆகியவை பாடப்பட வேண்டும். தேசிய கீதம் மற்றும் தேசிய பாடலை இசைக்கும் போது, அவற்றின் அதிகாரப்பூர்வமான வரிகள், உச்சரிப்பு மற்றும் இசை நயம் ஆகியவை மிகவும் துல்லியமாகவும், தவறின்றியும் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய, தேசிய கீதம் மற்றும் தேசிய பாடலின் சரியான வரிகள் மற்றும் உச்சரிப்பு முறைகள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வரிசைமுறையை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் மத்திய அமைச்சகங்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பதவியேற்ற பின், மே இறுதியில், டில்லிக்கு முதன்முறையாக சென்ற விஜய், பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது, அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என, வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்பாவி
ஜூலை 12, 2026 15:31

முதலில் நம் அம்மா... அப்புறம் தான் பெரியம்மா. இப்போதாவது புரிஞ்சிதே.


Srini Raman
ஜூலை 12, 2026 14:33

கணியன் பூங்குன்றனார் எழுதிய முழு தமிழ்தாய் வாழ்த்தை வெளிக்கொண்டுவரவேண்டும்..கருணாநிதி தன் வசதிக்கு அதில் சில வரிகளை நீக்கினார் . அது அநாகரீகம்


PR Makudeswaran
ஜூலை 12, 2026 13:24

தமிழ் தாய் வாழ்த்து ஒரிஜினல் படியா இல்லை மு க வெட்டி திருத்தி எழுதிய படியா


Barakat Ali
ஜூலை 12, 2026 12:46

உருவ வழிபாடு கூடாது ....... இறைவனுக்கு இணைவைத்தல் கூடாது என்று சொல்பவர்கள் கூட தமிழ்த்தாய் வாழ்த்துக்காக கதறுவது ஏன் ?? புரியலை ...


Barakat Ali
ஜூலை 12, 2026 12:45

கவர்னர் பங்குகொள்ளும் மாநில அரசின் விழா / நிகழ்ச்சிகளில் தேசிய கீதம், வந்தே மாதரம் பாடல்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் ......


S.Sivarajan
ஜூலை 12, 2026 09:56

தேர்தல் முடிவுகள் தந்த பாடமாக இருக்குமோ


subramanian
ஜூலை 12, 2026 09:22

நல்ல உள்ளம் படைத்த மோடிஜி முடிவு இது. இதிலும் குறை சொல்வார்கள்.


bharathi
ஜூலை 12, 2026 08:32

Must adopt the original version of the song


ஆரூர் ரங்
ஜூலை 12, 2026 07:48

தமிழ்த்தாய் வாழ்த்தில் நிறைய சமஸ்கிருத சொற்கள் உள்ளன. அப்படியும் அதனை மாநிலப் பாடலாக ஏற்றுக் கொண்ட தமிழர்களின் பறந்த மனப்பான்மை போற்றத்தக்கது.


Barakat Ali
ஜூலை 12, 2026 12:50

நீராரும் என்று தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்து .... தூய தமிழ்ச் சொல்லாக பரவலாக அனைவரும் நம்பும் நீர் என்கிற பதமே சம்ஸ்கிருதப் பதம் .....


Srini Raman
ஜூலை 12, 2026 14:36

திராவிடம் என்ற வார்த்தையே சமசுகிருத சொல்தான் . கருணாநிதி, உதயநிதி, கலாநிதி , தயாநிதி , தினகரன் போன்றவையெல்லாம் கூட சமசுகிருத பெயர்கள்தான் .


GMM
ஜூலை 12, 2026 07:36

மாநிலங்களில் சாதி மத இன குழுக்கள் அதிகம். தேசிய அளவில் இவை இல்லை . சில மாநிலங்கள் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தும் போது நீதிமன்றம், மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியவில்லை. மம்தா, ஸ்டாலின் ஆட்சி முறை. மசோதா வெற்றி பெற இந்த வழிகாட்டு முறை? மாநிலம் பின் மாவட்டம் உள்ளது போல் தேசம் பின் மாநிலம். காலப்போக்கில் மாநிலத்திற்கு கொடியை உருவாக்கி விடுவர். ?


புதிய வீடியோ