உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் கட்சிக்கு போகும் மாணவர்கள்: தடுக்க தி.மு.க., புது ரூட்!

விஜய் கட்சிக்கு போகும் மாணவர்கள்: தடுக்க தி.மு.க., புது ரூட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில், மாணவர்கள் இணைவதைத் தடுக்கும் வகையில், கல்வி நிலையங்களில், தமிழ் மாணவர் மன்றம் அமைக்க, தி.மு.க., மாணவரணி ஆலோசனைக் கூட்டம் செப்., 6ல் நடக்கிறது.நடிகர் விஜய், தன் பெயரில் மக்கள் இயக்கம் நடத்தியபோது, 234 சட்டசபை தொகுதிகளிலும், 10, 12ம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் துவக்கியதும், ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில், அவருடைய கட்சியில் பல லட்சம் மாணவர்கள் இணைந்தனர். தமிழக வெற்றிக் கழக மாணவர் அணி உருவாகும் பட்சத்தில், தற்போதைய உறுப்பினர்களை விட இன்னும் அதிகமான உறுப்பினர்கள் கட்சியில் சேர வாய்ப்பு உள்ளது.மாணவர்கள் விஜய் தலைமையை ஏற்றுச் செல்வதை தடுக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி தலைமையில், தி.மு.க.,வில் மாணவர்கள் சேர, அக்கட்சியின் மாணவரணி வியூகம் வகுத்துள்ளது. குறிப்பாக, கல்வி நிலையங்களில், தமிழ் மாணவர் மன்றம் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க, செப்., 6ல், தி.மு.க., மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.தி.மு.க., மாணவரணி மாநில செயலர் எழிலரசன் எம்.எல்.ஏ., அறிக்கை: கல்வி நிலையங்களில், தமிழ் மாணவர் மன்றம் ஏற்படுத்துதல்; ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய அமைப்புக்கான மாணவர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடத்துதல் குறித்து ஆலோசிக்க, மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் செப்., 6ல், சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது.தமிழ் மாணவர் மன்ற சேர்க்கை விண்ணப்ப படிவம் மற்றும் மன்ற அடையாள அட்டையை, மாணவர் அணி அமைப்பாளர்களிடம், துணை பொதுச்செயலர் அ.ராஜா, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழங்கி, சிறப்புரை ஆற்றுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

lana
ஆக 29, 2024 18:02

மாணவர்கள் படிப்பை கெடுக்கும் வகையில் ஒவ்வொரு செயலும் நடக்கிறது. இருக்கும் கொஞ்சம் நல்ல ஆசிரியர் இனி இந்த மாணவர்கள் group க்கு பயப்பட வேண்டும்


venugopal s
ஆக 29, 2024 15:34

தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாஜக பக்கம் போகாமல் இருந்தால் போதும்!


Hari
ஆக 29, 2024 18:30

Only brilliant students can Go. To bjp...


வைகுண்டேஸ்வரன்
ஆக 29, 2024 14:55

இது வருடாவருடம் திமுக நிகழ்த்தும் கட்சி வளர்ப்புப் பணி தான். விஜய் கட்சி ஆரம்பிச்சாலும் இல்லைன்னாலும் இது நடந்து கொண்டே இருக்கும் வழக்கமான நிகழ்வு தான்.


krishna
ஆக 29, 2024 16:04

200 ROOVAA OOPIS COOLIE KOIDAIKKA VILLAI ENDRAALUMKARUTHU VARUMA.VARAADHU.PAKKAM 21 DESIGN.


Mr Krish Tamilnadu
ஆக 29, 2024 14:10

கட்சி அமைப்பு, தேர்தல் செலவு கணக்கு என உள்ள சிக்கல்களை புதிதாக உருவாகும் கட்சிகள், ஆரம்பித்திலேயே உடைத்து எறிந்து வர வேண்டும். வளைந்து கொடுக்கும் சமூகத்தில் வாழ பழகி, நேர்படுத்த விரும்புவனை நீ வளைந்து வாழ்ந்தவன் தானே என எதிர் கேள்வி கேட்கும். மக்கள் தொண்டில் உள்ள மனிதர்கள் எடை போட படுவது. நடத்தை, வரவு செலவு, மற்றவர்களை மதிக்கும் பண்பு, கோபத்தை குணமாக்கும் விந்தை. ஒரு சிலர் சொல்லுவர்கள், இந்த புத்தாண்டில் இருந்து இந்த பழக்கத்தை விட போகுகிறேன் என. அதே போல, புதிய கட்சிகள், இன்றில் இருந்து எனது சொத்து இவ்வளவு, கட்சி நிதி இவ்வளவு. எனது சொத்தில் இதை கட்சிக்கு அளிக்கிறேன். தேர்தல் செலவுக்கு கட்சிக்கு ஜிபே கணக்கு ஆரம்பித்து மக்களிடம் நிதி கேளுங்கள். ஓட்டு போடும் நாளில் அன்றைய சம்பளத்தை அரசியல் கட்சிகளிடம் எதிர்பார்க்காதீர்கள், வாங்காதீர்கள். என தெளிவு படுத்துங்கள். ஊழலின் ஆரம்ப புள்ளி இது தான் உணர்த்துங்கள். உங்களுக்கு கொடுக்க எங்கு இருந்து பணம் வரும். பணம் வரும் வழி, நீங்கள் பணம் வாங்குவதை நிறுத்துங்கள் ஊழல் தானாக நின்று விடும்.


angbu ganesh
ஆக 29, 2024 13:45

மாணவர்கள் என்றால் கண்டிப்பா 18 வயசுக்கு கீழ்த்தான் இருப்பார்கள், கல்லூரி என்றால் கண்டிப்பா 19 வயசுக்கு மேல்தான் இருப்பார்கள் ஆனா இருவருமே அவர்கள் எல்லாம் நல்ல சிந்திக்க கூடியவர்கள் கண்டிப்பா விஜய்க்கு போக மாட்டார்கள், ஏன்னா விஜய் ஒரு சுயநலவாதி, அவன் தன்னை காப்பாத்திக்க எவனோ ஒருத்தன் பேச கேட்டு கட்சி ஆரம்பிச்சிருக்கான், அது மயான கட்சி மாதிரி புலிச்சி போய்டும் அதனால நன்றாக சிந்திக்க கூடிய அதும் அறிவுள்ள மாணவர்கள் விஜய் கட்சிக்கு போவது சந்தேகம்னுதான்


தேவதாஸ் புனே
ஆக 29, 2024 13:37

ஒழுங்கா இருந்தது பள்ளிக்கூடம் மட்டும் தான்.....இப்போ அதுக்கும்.......


ஆரூர் ரங்
ஆக 29, 2024 10:46

உருது மாணவரணி உறுதியா வரும்.


Sivagiri
ஆக 29, 2024 08:57

அப்ப தெலுங்கு கன்னட மலையாள மாணவர்கள் , கிடையாதா , அப்ப திராவிட மாடல் அவ்வளவுதானா ?


Hari
ஆக 29, 2024 07:44

Political entering to education. System will. Spoil the entire. Society


முருகன்
ஆக 29, 2024 07:16

முதலில் எந்த மாணவர் சென்றார்


Hari
ஆக 29, 2024 07:45

Kothadimai maanavaraga irundhal neraga tasmac poi irupaar. Murugan


சசிக்குமார் திருப்பூர்
ஆக 29, 2024 08:07

திமுகவை பொருத்த வரை 60 வயது வரை இளைஞர்கள் 45 வயது வரை மாணவர்கள். 30 வயது வரை பள்ளி குழந்தைகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை