உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நா.த.க.,வில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்: கட்சியை பலப்படுத்த சீமான் சுற்றுப்பயணம்

நா.த.க.,வில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல்: கட்சியை பலப்படுத்த சீமான் சுற்றுப்பயணம்

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து, மாநில, மாவட்ட நிர்வாகிகள், அடுத்தடுத்து விலகி வருகின்றனர். மற்ற நிர்வாகிகளை தக்க வைக்கவும், கட்சியை பலப்படுத்தவும், சீமான் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் துவக்கி உள்ளார்.சமீப காலமாக, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3oqq8tkp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களில் பலரும் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். வேறு சிலர், தங்களுக்குள் ஒன்றிணைந்து தமிழ்த்தேசிய சிந்தனையை வலுப்படுத்தப் போவதாகக் கூறி, திருச்சியில் மாநாடு நடத்தியுள்ளனர். மீதமிருப்போரை தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க., மற்றும் த.வெ.க., முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.விலகியோர் தவிர, வேறு பல மாவட்ட நிர்வாகிகளும், சீமான் நடவடிக்கை பிடிக்காமல் கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, கட்சியை பலப்படுத்தவும், நிர்வாகிகளை சந்தித்து சமாதானம் பேசி, அவர்களை கட்சியில் தக்க வைக்கவும், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் சென்று, நிர்வாகிகளை சந்திக்க, சீமான் திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சியில் இருந்து விலகியவர்கள் வகித்த பதவிகளுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார். நேற்று ராணிப்பேட்டையில் சீமான், தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். அடுத்தடுத்து வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு செல்கிறார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

நா.த.க., என்றால் அது சீமான் மட்டும்தான். அவர் தலைமையில் தான் கட்சி இயங்குகிறது. அதனால், அவரை தவிர கட்சி நிர்வாகிகள் யாருக்கும் கட்சியில் செல்வாக்கு கிடையாது. யார் சென்றாலும், வந்தாலும், கட்சிக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது. அதனால் தான், சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும், அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையிலான ஓட்டுகளை கட்சி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் புதிய கட்சி துவங்கப்பட்டிருக்கும் நிலையில், அக்கட்சி மீதான ஈர்ப்பிலும், ஆளுங்கட்சி துாண்டுதலாலும், நா.த.க., நிர்வாகிகள் சிலர் விலகிச் சென்று உள்ளனர். பதவி, பணத்திற்கு ஆசைப்பட்டும், இங்கிருந்து சிலர் சென்றுள்ளனர். வரும், 2026 சட்டசபை தேர்தலுக்குப் பின், தவறிழைத்து விட்டோமே என மனம் திருந்தி, இங்கிருந்து வெளியே செல்வோரெல்லாம் மீண்டும் நா.த.க.,வை நோக்கி திரும்பி வருவர். இருந்தபோதும், கட்சியை வலுவாக கட்டமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சீமான், தமிழகம் முழுதும் செல்ல சுற்றுப்பயணம் துவங்கி உள்ளார். அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை சந்தித்து, நிறை, குறைகளை கேட்க உள்ளார். கட்சியில் சோர்ந்திருப்போர் பலருக்கும் பதவி அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நிக்கோல்தாம்சன்
பிப் 26, 2025 21:27

வலையை வீசி பார்த்தார்கள் சிக்கவில்லை , இப்போ கட்சியை உடைக்கும் வேளையில் இறங்கிவிட்டார்கள் பவர்புல் குடும்பத்தினர்


Karthik
பிப் 26, 2025 19:14

ஆளுங்கட்சி, இவரோட ஒவ்வோரு செங்கல்லா உருவுறது அப்பட்டமா தெரியுது. ஆனால் ஒருங்கிணைப்பாளருக்கு அது தெரியுதா னு தான் தெரியல.


தமிழன்
பிப் 26, 2025 13:43

எதற்கு ஊர் ஊராக சுத்தனும்?? நேராக வடபழனி முருகன் கோயில் வாசலுக்கு போனால் 10 பிச்சைகாரங்களை தேர்ந்தெடுத்து அமைதிப்படை அம்மாவாசை போல புது துணி வாங்கி கொடுத்து நெகு நெகுன்னு கத்தி படாம சரச்சுட்டு குளிக்க வெச்சு கூட்டிகிட்டு வந்து ஒரு மைக்க பிடிச்சு 10 நிர்வாகிகள் புதிதாக சேர்ந்திருக்காங்கன்னு சொன்னா முடிஞ்சு போச்சு


V வைகுண்டேஸ்வரன்
பிப் 26, 2025 13:41

மாவட்ட மகளிர் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவும். வெடிகுண்டு வீசுவேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் பைத்தியம் வரப்போகிறது. இதைக் கைது செய்யவும் சட்டத்தில் இடம் இல்லை.


மால
பிப் 26, 2025 11:17

என்ன சுத்துனாலும் தோற மாட்டான் யாராவத கூட சேந்தா ஒன்று இரண்டு கிடைக்கும்


Oviya Vijay
பிப் 26, 2025 11:09

ஏற்கனவே சங்கு ஊதியாச்சு ராசா... இனிமே எந்திரிச்சி நிக்காது... என்ன பண்ணாலும் நாட் பாசிபிள்...


பிரேம்ஜி
பிப் 26, 2025 08:08

நாதக கட்சி எப்போதும் நியூஸ் இல் தான் இருந்தது. மக்கள் யாரும் இதில் இல்லை. சில வெட்டிப் பயலுகளுக்கு பொழுதுபோக்கு மன்றமாக இருந்தது. இப்போது உறுப்பினர்கள் விலகியதால் மன்றம் கலைகிறது. அவ்வளவுதான்! இதுக்குப் போயி பேப்பர்காரங்க முக்கியம் கொடுத்து அலட்டிக்கிறாய்ங்க!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை