உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்; கலகலக்கிறதா நாம் தமிழர் கட்சி?

அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்; கலகலக்கிறதா நாம் தமிழர் கட்சி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலர் தங்கம் இரு நாட்களுக்கு முன் கட்சியில் இருந்து விலகிய நிலையில், அக்கட்சியின் வீர தமிழர் முன்னணி, சேலம் மாவட்ட செயலர் வைரம் நேற்று முன்தினம் விலகி உள்ளார்.நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். நாம் தமிழர்கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம், மேற்கு மண்டல செயலர் பூபாலன் உள்ளிட்டோர், கடந்த அக்டோபரில் கட்சியில் இருந்து விலகினர்.இவர்களை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் சுகுமார், மத்திய மாவட்ட செயலர் மணிகண்டன் ஆகியோரும் கட்சியில் இருந்து விலகினர். விலகும் பொறுப்பாளர்களோடு ஆதரவாளர்களும் விலகுவதால், கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்தவர்கள் கடந்த இரண்டு நாட்களில் விலகி, தலைமைக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலர் தங்கம் என்ற தங்கதுரை, கட்சியில் இருந்து விலகுவதாக இரு நாட்களுக்கு முன் அறிவித்து,கட்சியில் இருந்து வெளியேறி விட்டார். இதன் தொடர்ச்சியாக, கட்சியின் வீரத்தமிழர்முன்னணியைச் சேர்ந்த சேலம் மாவட்டச்செயலர்வைரமும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும்விலகிக் கொள்வதாக நேற்று முன்தினம் அறிவித்திருக்கிறார். தொடர்ந்து தமிழ்த்தேசியப் பாதையில்பயணிப்பேன் எனஅறிவித்திருக்கிறார்.

வைரம் கூறியதாவது:

பல காலம் நேசித்து வளர்த்த கட்சி, நாம் தமிழர்.அக்கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன்முழுமையாக விலகுகிறேன். நிர்வாக வசதிக்காக கட்சியை பிரிக்கிறேன் என, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். எந்த கட்சியிலும் செயல்படுத்தாத ஒரு நடைமுறையை கொண்டு வந்தார். இது கட்சிக்குள் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.நீண்ட காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் பலரையும், காரணம் சொல்லாமல் கட்சியில் இருந்து வெளியேற்றி வருகிறார் சீமான். கட்சியில் இருந்து விலகிச் செல்வோர், நீக்கப்படுவோர் குறித்த பின்புலங்களை விசாரித்தேன். பிரச்னைக்குரியவர் சீமான் தான் என அறிந்து கொண்டேன். பிரச்னை நம்மை நோக்கி வருவதற்குள், நாமே விலகி விடலாம் என முடிவெடுத்து விலகி விட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், சேலம் மாவட்ட மேட்டூர் நகர துணைத்தலைவர் ஜீவானந்தம், அவரது ஆதரவாளர்கள் என, 40 பேர், நாம் தமிழர் கட்சியில் இருந்து நேற்று விலகி உள்ளனர். இதே நிலை தமிழகம் முழுதும் இருப்பதால், கட்சியில் இருந்து விலகுவோர் எண்ணிக்கை கூடுதலாகும் என கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Raj
நவ 21, 2024 23:26

மகிழ்ச்சி.


kulandai kannan
நவ 21, 2024 11:21

கட்சிகள் குறைவது ஜனநாயகத்திற்கு நல்லது.


Oviya Vijay
நவ 21, 2024 08:51

கலகலத்து போகப் போகிறது கட்சி... 2026 தேர்தலில் போட்டியிடும் வரைக்காவது இவரால் கட்சியைக் கட்டி காப்பாற்ற முடியுமா? சந்தேகம் தான் எனத் தோன்றுகிறது... எந்த தேர்தலிலும் வெற்றி என்ற ஒன்றே இல்லாத போது யார் தான் தங்களது கைக்காசை செலவு செய்து கொண்டே இருப்பர்... இக்கட்சிக்கு ஒரு நாள் முற்றுப்புள்ளி வைக்கப்படக் கூடும்... கூடிய விரைவில்...


nagendhiran
நவ 21, 2024 06:20

உண்மையோ பொய்யோ எது பேசினாலுமௌ கை தட்டினால் இப்படிதான் ஆகும்?


சமீபத்திய செய்தி