உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வட்டிக்கு கடன் வாங்கி ரூ.30 ஆயிரம் லஞ்சம்!

வட்டிக்கு கடன் வாங்கி ரூ.30 ஆயிரம் லஞ்சம்!

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் ஊராட்சி, பனங்காடு பகுதியில் வசித்து வரும், 30, வயது பெண் குமுறல்: நான், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியிடம் வளர்ந்தேன். தற்போது திருமணமாகி விட்டது. நான் குடியிருந்து வந்த பெற்றோர் இடத் தின் பட்டாவை, எனது பெயருக்கு மாற்ற வேண்டும் என, பெருமாநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றேன்.அங்கிருந்த உதவியாளர், 'பெற்றோர் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வேண்டும்' என்றார்; என்னிடம் இல்லை. அதனால், விண்ணப்பிக்கு மாறு கூறி அதற்கான வழிமுறைகளையும் அவரே தெரிவித்தார். கடந்த 2024ல், உரிய ஆதார ஆவணங் களுடன் பெற்றோர் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். பல நாட்கள் ஆகியும் எந்த தகவலும் இல்லை. வி.ஏ.ஓ., ஆபீ சுக்கு நேரில் சென்று விசாரித்தேன்.அங்கிருந்த ஒருவர், 'நீங்கள், 30 ஆண்டுகள் கழித்து பெற்றோர் இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் கேட்கிறீர்கள்; இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் சான்று கொடுப்பது சிரமம். 'ஆண்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் 30 வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். மேலே உள்ளவர் களுக்கும் தர வேண்டும்' என்றார்.

கூலி வேலை

'அய்யா... நானும், என்னோட கணவரும் கூலி வேலைக்குத்தான் போறோம்; எங்களால இவ்ளோ பணம் கொடுக்க முடியாது' என்றுகூறி கண்ணீர்மல்க முறையிட்டேன்; அவரது மனம் இரங்கவில்லை. திரும்பி வந்துவிட்டேன். பின்னர் மீண்டும் சென்றபோது, 'நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் சரியாக இல்லை' என்றனர்.இப்படியே பல முறை அலைந்தும் பலனில்லை. கடைசியாக ஒரு புரோக்கர் தொலைபேசி நம்பரை கொடுத்து பேசுமாறு கூறினார். அவர், அவிநாசியைச் சேர்ந்தவர். அவரிடம் பேசியபோது, '30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் காரியம் கச்சித மாக முடியும்' என்றார். வேறு வழி?வட்டிக்கு கடன் பெற்று 30 ஆயிரம் கொடுத்தேன். புரோக்கர் மூலம் சான்றி தழ்கள் கிடைத்தன. ஆனால், இன் னும் இடத்திற்கான பட்டா மாறுதல் வரவில்லை. அது எப்போது கிடைக் குமோ தெரியவில்லை. அப்பாவிகளை அலையவிடும் அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்குமே வெளிச்சம்!தொடரும்...

லஞ்சப் பேர்வழிகள் மீது புகார் அளிக்க...

மாநில லஞ்ச ஒழிப்புத்துறை, 293, MKN சாலை ஆலந்துார், சென்னை - 600 016. மின்னஞ்சல்: nic.in, தொலைபேசி: 044-22321090 / 22321085 / 22310989 / 22342142

அனுப்புங்கள் வாசகர்களே!

இப்பகுதிக்கு தகவல் தெரிவிக்கும் வாசகர் பெயர், பிற விவரங்கள் வெளியாகாது. ரகசியம் காக்கப்படும். 'எனது பெயரை வெளியிடலாம்' என, துணிச்சலாகச் சொல்லும் வாசகரின் விவரம் மட்டும் வெளியாகும். மறக்காமல் அதையும் கடிதத்திலேயே குறிப்பிடுங்கள்.e-mall: dinamalar.In, 95666 97267 WhatsApp மற்றும் Arattai செயலிகள் வழியாக வாசகர்கள் தகவல் அனுப்பலாம். தபாலில் அனுப்ப... 'லஞ்சம் என்னிடம் பறித்தனர் பகுதி', 'தினமலர்', டி.வி.ஆர்.ஹவுஸ், சுந்தராபுரம், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Sekar Times
டிச 23, 2025 09:54

லஞ்சம் ஊழல் ஒழிய ஒரே தீர்வு மரண தண்டனை மட்டுமே


rama adhavan
டிச 22, 2025 23:47

முன்பு நடைமுறையில் இருந்த மணியக்காரர் கணக்குப்பிள்ளை நடைமுறையை ஒழித்து வி ஏ ஓ நடைமுறையை கொண்டு வந்தது மாபெரும் தவறு.


rama adhavan
டிச 22, 2025 23:43

பொது மக்களை பாடாய் படுத்தும் படுத்தும் லஞ்சத்தின் அஸ்திவாரமாக விளங்கும் பட்டா என்னும் காகிதத்தை ஏன் ஒழிக்கக் கூடாது? மாற்று வழியை ஏன் காணக் கூடாது?


ராஜா
டிச 22, 2025 19:41

இதெல்லாம் ரொம்ப சாதாரணம், நான் வீடு கட்டும் மனை வாங்கி 1997 ஆண்டு வீடு கட்டி வரி கட்டி அதன் மின்சார இணைப்பு பெற்று அநுபவித்து வருகிறேன்.பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தால் மறுக்கப்படுவது,


சிட்டுக்குருவி
டிச 22, 2025 19:36

மாநில அரசுகள் ஊழலுடன் ஒன்றிணைந்துவிட்டன என்ற காரணத்திற்காகவே மூன்றாவது அமைப்பாக லோக் ஆயுக்தா என்ற அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டிருக்கின்றது . அதன் பணிதன்னிச்சையாக நாட்டில் நடக்கும் லஞ்சம் லாவண்யங்கள் ,ஊழல்களை ,அரசு சொத்துக்களை களவாடல்கள் அறிந்து ஒழிப்பதே .இந்த அமைப்பு யாருடைய அனுமதியும் பெறவேண்டியது இல்லை .ஆனால் மக்களிடையே அரியப்படவில்லை .கர்நாடக மாநிலத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது .ஏனோ தமிழ்நாட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றது.இந்த அமைப்பின்பெயரை தமிழில் மொழிபெயர்த்து ,தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் ,ஈமெயில் தொடர்புகளை மக்கள் அறியும்படி தின்தோறும் செய்தித்தாள்களில் பதிவிட்டு அதன் நோக்கம் நிறைவேற ஊடங்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் . இதுபோன்ற அவலங்கள் கேட்டதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கின்றது .சக மனிதகுலத்துக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் காட்டுமிருகங்கள் வேட்டையாடுவதுபோல் மக்கள் உழைப்பை வேட்டையாடுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ளக்கூடாது .இத்தனைநேரத்தில் அந்த கயவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் இல்லங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கவேண்டும் .அது ஏன் இன்னும் நடக்கவில்லை ?


Muralidharan S
டிச 22, 2025 17:48

நமது நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்காமல், நமது பிரதமர் இந்தியாவை வளர்ந்த, முன்னேறிய, வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஆக்க முடியாது.. கீழ் மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அரசு அலுவுலகங்களில் லஞ்சமும் ஊழலும் கரையான் போல, புற்றுநோயை போல செல்லரித்து இருக்கிறது.. அரசு அலுவுலகங்களில் சம்பளத்துக்கு நேர்மையாக மக்களுக்கு சேவை செய்பவர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவே.. மீதி 99 சதவிகிதம் கிம்பளத்திற்க்கே வேலை செய்கின்றனர்.. ஆள்பவர்களும் கவுன்சிலர்களில் ஆரம்பித்து எல்லா கான்ட்ராக்ட்டுகளிலும் கமிஷன், கட்டிங் என்று இருக்கும் நிலைமையில் லஞ்சத்திலும், ஊழலிலும் வேண்டுமானால் நாட்டை முன்னேறிய நாடாக மாற்ற முடியும்.... ஊழலும் லஞ்சமும் பயங்கரவாதத்திற்கு சமமான குற்றமாகும்.. நமது நாட்டை அது அழித்து பாகிஸ்தான் பங்களாதேஷ் வரிசையில் கலவர நாடாக மாற்றிவிடும்.. ஊழலையும், லஞ்சத்தையும் இப்பொழுது இருக்கும் சட்டங்களாலும், நீதிமன்ற விசாரணை முறைகளாலும் நிச்சயம் ஒழிக்கவே முடியாது.. 75 ஆண்டுகளாக அரித்து போய்விட்டது.. மிதமிஞ்சிய ஜனநாயகம் மற்றும் அளவிற்கு மீறிய சுதந்திரம் இதற்க்கு காரணம்.... சீனா, சிங்கப்பூர் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகமும், சிங்கப்பூர், சவுதி போன்ற கடுமையான தண்டனை சட்டங்களும் இயற்றி, அப்பீல் போக முடியாதபடி தண்டனையை நிறைவேற்றவேண்டும்.... மிதமிஞ்சிய ஜனநாயகம் நமது நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறது..


suresh Sridharan
டிச 22, 2025 17:15

நீங்க பாட்டுக்கு லஞ்சம் கேட்டால் இந்த தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கவும் என்று சொல்கிறீர்கள் உங்களிடம் புகார் தெரிவித்தால் நீங்கள் யார் மீது புகார் தெரிவிக்கிறோம் அவர்களிடம் காட்டிக் கொடுத்து இவன் தான் உன்னை காட்டிக் கொடுத்தான் என்று எப்படி ஐயா நம்புவது


rama adhavan
டிச 22, 2025 23:52

இது நம் முதல்வருக்குத் தெரியாதா? ஏன் கடும் நடவடிக்கை இல்லை? டி வி ஏ சி எல்லாம் வெறும் கண்துடைப்பு.


V RAMASWAMY
டிச 22, 2025 15:17

இனி அந்தந்த துறை அலுவகங்களில் லஞ்ச விண்டோக்கள் திறக்கலாம்.


Kannan
டிச 22, 2025 13:12

ஒரு உருப்படியான செயல்.


chinnamanibalan
டிச 22, 2025 12:13

அரசுத் துறைகளைப் பொறுத்தவரை, பணமின்றி எதுவும் இல்லை என்ற நிலை மக்களுக்கு வந்து விட்டது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைவருமே துணிந்து லஞ்சத்தை கேட்டுப் பெற ஆரம்பித்து விட்டதால், கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்ற மோசமான நிலைக்கு நாடு வந்து விட்டது! வெட்கக்கேடு!!


புதிய வீடியோ