உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தளவாய்சுந்தரம் கதிதான் ஏற்படும்: 6 மாஜிக்களுக்கு இ.பி.எஸ்., எச்சரிக்கை

தளவாய்சுந்தரம் கதிதான் ஏற்படும்: 6 மாஜிக்களுக்கு இ.பி.எஸ்., எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தளவாய் சுந்தரத்துடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும், பிரிந்தவர்களை இணைக்கும் முயற்சியை முன்னெடுக்கும் ஆறு முன்னாள் அமைச்சர்களுக்கும், திருக்குறள் வாயிலாக இ.பி.எஸ்., எச்சரிக்கை விடுத்துள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது,சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் ஆகிய மூவரையும் எக்காரணத்தைக் கொண்டும், அ.தி.மு.க.,வில் சேர்க்க மாட்டேன் என்ற முடிவில், இ.பி.எஸ்., உறுதியாக இருக்கிறார். ஆனால், டிசம்பர் மாதத்திற்குள் இணைப்பு குறித்து, நல்ல முடிவு வரும் என்றும், அதுவரை பொறுமையாக இருக்குமாறும், தன் ஆதரவாளர்களிடம் சசிகலா தெரிவித்து உள்ளார்.'அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கும் முயற்சியில், முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் இறங்கியுள்ளனர். அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். அதனால், தொலைக்காட்சி விவாதங்களில் இ.பி.எஸ்.,சை விமர்சித்துப் பேச வேண்டாம்' என, ஓ.பி.எஸ்.,ம் தன் ஆதரவாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில், இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை, அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, இணைப்பு முயற்சி மேற்கொள்ளும் முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேருக்கும், தளவாய் சுந்தரத்திற்கு நேர்ந்த கதிதான் ஏற்படும் என்பதை, மறைமுகமாக குறிப்பிடும் வகையில், அந்த அறிக்கையில் அவர் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.அவரது அறிக்கை: 'வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு' என்ற வள்ளுவர் அறிவுரையை மறக்கலாமா? வெளிப்படையான பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நண்பர்கள் போல இருந்து உட்பகை கொண்டவர்களின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என, எத்தனை ஆழமான அறிவுரையை வள்ளுவப் பேராசான் நமக்கு தந்திருக்கிறார்.உட்பகை கொண்டவர்கள் இனி நம் கட்சிக்கு வேண்டாம் என்பதில் உறுதியோடு நிற்போம். அ.தி.மு.க., ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்ய தயார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: பா.ஜ.,வுடன் தளவாய் சுந்தரம் தொடர்பு வைத்துள்ளார். இனி, அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்பதில், இ.பி.எஸ்., உறுதியாக உள்ளார். அதனால்தான் உட்பகை என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார். மேலும், இணைப்பு முயற்சியை முன்னெடுக்கும், ஆறு முன்னாள் அமைச்சர்களுக்கும் தளவாய் சுந்தரத்திற்கு நேர்ந்த கதிதான் என்பதையும், திருக்குறள் வழியாக, அவர் மறைமுகமாக சொல்லி விட்டார். இவ்வாறு கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

M Ramachandran
அக் 20, 2024 15:02

எல்லோரையும் அனுப்பிய பின் கூடாரத்தையெ காலி செய்து விட்டு ஸ்டாலினிடம் / உதயநிதியிடம் சரண்டர் ஆவது தானெ உம்ம குறிக்கோள்.


முருகன்
அக் 16, 2024 20:39

எஜமானர் நினைத்தால் தளவாய் சுந்தரம் நிலை நாளை உங்களுக்கும் வரலாம்


Indian
அக் 16, 2024 19:17

மிக சரியான முடிவு .


Anantharaman Srinivasan
அக் 16, 2024 14:51

ஆறு மாஜிக்கள் நினைத்தால் ஒரு எடப்பாடியை கவுக்க முடியாதா..??


விஜய்
அக் 16, 2024 11:53

2026 தேர்தல்ல பிஜேபி கூட கூட்டணி வச்சா பிழைக்கலாம் இல்லன்னா கடவுளால கூட உன்னை காப்பாத்த முடியாது


T.S.Murali
அக் 19, 2024 17:49

பிஜேபி கூட கூட்டணி என்பது பாறாங் கல்லை காலில் கட்டி கொண்டு போட்டி போடுவதற்கு சமம். அதான் உங்கள் மலை உள்ளாரே.தனியா போட்டி போட வேண்டியது தானே . 4 முனை போட்டியில் பிஜேபிக்கு தைரியம் இருந்தால் தனியாக நிற்கவும். அல்லது காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவும்.


ஆரூர் ரங்
அக் 16, 2024 11:20

ஆப்கானிஸ்தான் அழைக்கிறது. போ.


தமிழ்வேள்
அக் 16, 2024 10:54

பழனிச்சாமியின் வீடு வாசல் நிலம் நீச்சு அனைத்தும் முஸ்லீம் சொத்து என்று வக்ப் போர்ட்டிலிருந்து நோட்டிஸ் வரும்போதுதான் இவனது பாசம் முடிவுக்கு வரும் ...ஆனால் அதற்கும் இவனும் , இவனது கட்சியும் முடிந்துபோயிருக்கும் ...


saravan
அக் 16, 2024 10:47

இந்த கூமுட்டையே வெட்டி தான் இதுல இவரு பருப்பு மாதரி பேசுறாரு... சரி உன்னால் ஒரு தொகுதி ஜெயிக்குமா


saravan
அக் 16, 2024 10:43

சரி இந்த ஆளு என்ன கதியில் இருக்காரு ஒரு தொகுதி கூட இந்த ஆலால வெற்றி பெற பைக்கை முடியாது....


வீர தமிழன்
அக் 16, 2024 10:38

அதிமுகவின் ஒன்றை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் அண்ணன் இபிஎஸ்ஐ அசைத்து கூட பார்க்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு வரும். 2026 தேர்தலில் அண்ணா திமுக தலைமை கூட்டணியில் உள்ள கட்சிகள் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பது உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை