உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சீமானுடன் பேச்சு; கூட்டணி சேர அழைப்பு: தனி அணி அமைக்க ராமதாஸ் புது முயற்சி

சீமானுடன் பேச்சு; கூட்டணி சேர அழைப்பு: தனி அணி அமைக்க ராமதாஸ் புது முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி கூட்டணியில் இடம்பெற வேண்டும் அல்லது வெற்றியை கட்டமைக்கும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உறுதியாக உள்ளார். ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேர்வதையே, அன்புமணி விரும்புகிறார். அதேநேரம் தி.மு.க., தலைமையிலான கூட்டணியே வலுவானது எனக் கருதுகிறார் ராமதாஸ். அவரது ஆதரவாளர்களும், அதையே வலியுறுத்துகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yuvdcl2h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டசபையில், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன், அதை வலியுறுத்திப் பேசியவர்களில், பா.ம.க.,வைச் சேர்ந்த ஜி.கே.மணியும் ஒருவர். ராமதாஸ் ஆசி இல்லாமல், அவர் பேசியிருக்க முடியாது என்கின்றனர், ஆளுங்கட்சியினர்.இதற்கிடையில், பா.ம.க., வட்டாரத்தில், இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. நடிகர் விஜய், சீமான் ஆகியோருடன் இணைந்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக புதிய அணி அமைக்கும் முயற்சியில், ராமதாஸ் தற்போது அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. சீமானுடன் தொலைபேசியில் பேசியுள்ள ராமதாஸ், தன்னுடைய திட்டம் குறித்து விரிவாகக் கூறியுள்ளார்.சீமானிடம் ராமதாஸ் கூறியுள்ளதாவது:தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்கள். ஆனால், அந்த முடிவு வெற்றி தராது. கூட்டணி பலம்தான் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, புது அணி உருவாக்கினால், ஆட்சியைக் கைப்பற்றலாம்.வட மாவட்டங்களில் எங்களுடன் நீங்கள் இணைந்தால், நாம் போட்டியிடுகிற தொகுதிகளில், 100 சதவீதம் வெற்றி உறுதி. நாம் தமிழர் கட்சியில் இளைஞர்கள் பலம் இருப்பதுபோல, பா.ம.க.,விலும் வன்னியர் சமுதாய இளைஞர்களின் படைபலம் அதிகம்உள்ளது.இளைஞர்களின் பலத்தைக் காட்டும் பா.ம.க., இளைஞரணி மாநாட்டுக்கு நீங்கள் வர வேண்டும். வேளாண் நிழல் பட்ஜெட் தயாரித்ததும், உங்களுக்கு அனுப்பி வைத்தேன்.அதில் உள்ள நல்ல திட்டங்களை பாராட்டியதை, நான் மறக்கவில்லை. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தைப் பெறவும், அதிகார பகிர்வு கிடைக்கவும், நாம் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும்.இவ்வாறு சீமானிடம் ராமதாஸ் பேசியதாகக் கூறப்படுகிறது - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
ஏப் 26, 2025 21:01

சீமானின் எஜமானரும் துக்ளக்கார்தான் .... அவர் மருத்துவரின் கூட்டணிக்கு வந்தால் துக்ளக்கார் ஆப்படித்துவிடுவார் ....


ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 18:12

TVK யை அழிக்க சரியான வழி. சீமாண்டி ஏற்கனவே சின்னாபின்னமாகி கிடப்பதை பார்த்து விட்டோம், மாம்பழத்துக்காக குடும்ப சண்டை நடக்குது இவங்க கூட்டணி வச்சி... வெளங்கிடும்.


Chanakyan
ஏப் 26, 2025 15:37

அப்படியே குருமா, சைகோ, கம்மிகளையும் சேத்துக்கோங்க. ஓஹோன்னு வருவீங்க.


கண்ணன்,மேலூர்
ஏப் 26, 2025 16:35

உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட என்று கடைசியில் ஒன்னும் இல்லாமல் நாசமா போவதற்கு வாழ்த்துக்கள்.


Narasimhan
ஏப் 26, 2025 13:21

வைகோ திருமா கம்யூனிஸ்டுகள் விஜயகாந்த் என்ற மாமனிதரை உசுப்பேத்தி முச்சந்தியில் நிறுத்தினர். விஜயகாந்த் என்றும் நேர்மையாக இருந்தவர். விஜயோ வரி ஏய்ப்பு செய்தவர். திமுகவை முற்றிலும் காபி அடித்து அரசியல் செய்யும் இவர் கட்சியுடன் சீமானோ மருத்துவரோ கூட்டு வைத்தால் எல்லோர் ஜோலியும் முடியும்.


நிஜன்
ஏப் 26, 2025 12:55

இந்த செய்தி உண்மையானதாக இருக்க வாய்ப்பு இல்லை. ராமதாஸ் எப்போதும் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர். தவெக விஜய், நதக சைமன் ஆகியோர் கமல்ஹாசன் போன்று பிறர் பணத்தில் கட்சி நடத்துபவர்கள். இவர்களிடம் இருந்து மரு. ராமதாஸ் பணம் இரக்க முடியாது. எனவே கூட்டணி சாத்தியம் இல்லை.


சாரதி
ஏப் 26, 2025 10:24

நல்ல கருத்துக்களை சொல்ல முடியவில்லை.


Oviya Vijay
ஏப் 26, 2025 09:56

கடந்த தேர்தல்களில் நாதக வாங்கிய வாக்கு வங்கியை மனதிற்கொண்டு இப்போதும் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எப்போது விஜயலக்ஷ்மி கேஸில் தொம்பி மாட்டினாரோ அப்போதே அந்த கட்சிக்கு மக்கள் முடிவுரை எழுத தொடங்கி விட்டனர்... மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் இவரது கட்சியில் இருந்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி முழு கட்சியும் இப்போது கலகலத்துப் போய் நிற்கிறது... 2026 தேர்தலில் இவரது கட்சி வாங்கப் போகும் ஓட்டு சதவீதத்தை பார்த்த பின் இதுக்காகவா இவ்ளோ மெனக்கெட்டோம் என மற்ற கட்சிகள் நினைக்கப் போகிறார்கள் என்பதே உண்மை...


S Regunathan Abudhabi UAE
ஏப் 26, 2025 09:48

அப்படி பாமக நாதக விஜய் கூட்டணி அமைத்தால்.. அது மீண்டும் ஒரு மக்கள் நல கூட்டணியாக பரிணமிக்கும், அதே திமுக ஆட்சி அமைக்க உதவும். இதை அறிந்து கொண்டு கூமுட்டை ராம்தாஸ், உஷாராக அதிமுக கூட்டணியில் போனால் ஆட்சி மாற்றம் வரும்.. கூட்டணி மந்திரி சபை வந்தால் லாபமும் கிடைக்கும்.. தனி கூட்டணி அனைக்க என்ன அவ்வளவு வீம்பு.??


புதிய வீடியோ