மேலும் செய்திகள்
தெலுங்கானா,- ஆந்திராவில் நிலநடுக்கத்தால் பீதி
05-Dec-2024
சென்னை: தமிழகத்துக்கு தனியாக, நில நடுக்க கண்காணிப்பு மையம் அமைக்க, மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.மழை வெள்ளம், புயல், நில நடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் தொடர்பான பாதிப்புகள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்ள, தேசிய, மாநில அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இதற்கு அடுத்த படியாக, மாவட்ட அளவிலும், இதற்கான அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை, இந்திய வானிலை துறை வழியாகவே, தமிழகம் பெறுகிறது. தேசிய அளவில் திரட்டப்படும் தகவல்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு பிரித்து தெரிவிக்கப்படுகின்றன. இதனால், தமிழகத்துக்கு என பிரத்யேகமாக, இத்தகவல்களை விரைந்து கொடுப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்த வகையில், நாடு முழுதும் எந்தெந்த பகுதிகளில், எத்தகைய நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறித்த வரைபடங்களை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டு உள்ள, இதற்கான மையம், நில நடுக்கம் ஏற்பட்டால் அதை உடனடியாக அறிய நாடு முழுதும், 100 இடங்களில் சிறப்பு மையங்களை அமைத்துள்ளது.இதன்படி, தமிழகத்தில், விழுப்புரம், தஞ்சாவூர், துாத்துக்குடி, கோவை ஆகிய இடங்களில், 24 மணி நேரமும் செயல்படும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்துக்கு என தனியாக, நிலநடுக்க கண்காணிப்பு மையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது, அதற்கான பணிகள் துவங்கியுள்ளன.சென்சார் கருவிகள் வாங்க முடிவுதேசிய நில அதிர்வு மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன், தமிழகத்தில் நில அதிர்வு அலைவரிசையை உணர்வதற்காக, 'சிஸ்மிக் சென்சார்' கருவிகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பகுதி வாரியாக நிலநடுக்க தரவுகளை சேகரித்து வைக்கும் அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான கண்காணிப்பு மையத்தை, 30 லட்சம் ரூபாயில் அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. - வருவாய் துறை அதிகாரி
05-Dec-2024