உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகம் ஈ.வெ.ரா., மண் அல்ல அவரே ஒரு மண் தான்: சீமான்

தமிழகம் ஈ.வெ.ரா., மண் அல்ல அவரே ஒரு மண் தான்: சீமான்

புதுக்கோட்டை: ''இது ஈ.வெ.ரா., மண் கிடையாது. அவரே ஒரு மண் தான்,'' என, புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் முதன்முதலில் ஹிந்தி பள்ளியை திறந்தவர் ஈ.வெ.ரா., தான். ஹிந்திக்கு எதிராக போராடுபவர்களை பெட்ரோல், டீசல் ஊற்றி எரியுங்கள் என, கூறியது ஈ.வெ.ரா., தான். எதற்கெடுத்தாலும் ஈ.வெ.ரா., மண் என்கின்றனர். அவரே ஒரு மண் தான். ஈ.வெ.ரா., விவகாரத்தில் பா.ஜ.க.,வை தவிர அனைத்து கட்சிகளும் என்னை எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன்.ஈ.வெ.ரா., கூறிய பிராமணியத்தை எதிர்ப்பதாக இருந்தால், ஒரு பிராமணப்பெண் முதல்வராக இருந்தபோது, அவருக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தது யார். அவரை வணங்கி அம்மா, அம்மா என்று இருந்தது யார்.ஈ.வெ.ரா., எதிர்த்த பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெண் முதல்வராக இருந்த போது தான், 69 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். அருந்ததியர் ஒருவரை சபாநாயகர் ஆக்கியது அந்த பிராமண பெண் தான்.2026 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற வாய்ப்பில்லை. அ.தி.மு.க., விற்கும், தி.மு.க.,விற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஒரு கட்சியில் அண்ணாதுரை படம் உள்ளது. மற்றொரு கட்சியில் அந்த படம் இல்லை. ஆனால், இருவரும் பல்வேறு விஷயங்களிலும், நடவடிக்கைகளிலும் ஒன்றாக தான் உள்ளனர்.வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, பல்வேறு அலைபேசிகள் மூலமாக பெறப்பட்ட ஆதாரங்கள், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் பிறகு தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, கூறியுள்ளனர். ஆனால், வீடியோ, ஆடியோ எப்படி வெளியானது.காவல்துறைக்குள் அதிகாரி ஒருவரை அலைபேசி திருடராக வைத்துக்கொண்டு, போன்களில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்களை எடுத்து வெளியிடுவது தான் அதிகாரிக்கு அழகா. எங்கள் ஆடியோக்கள், வீடியோக்கள் வெளியே வரும்போது அனைவரும் சந்தோஷப்பட்டனர்.தற்போது, வேங்கைவயல் வழக்கில் ஆடியோ, வீடியோக்கள் வெளிவந்துள்ளதையும் பார்த்து அனைவரும் சந்தோஷப்படுங்கள். கனிமவள கொள்ளைக்கு எதிராக ஜெகபர் அலி புகார் அளித்த போது, புதுக்கோட்டை எஸ்.பி., யாக இருந்தது யார் என, அனைவருக்கும் தெரியும். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

M Ramachandran
ஜன 27, 2025 20:58

இது வரை வேங்க்காயத்தை வைத்து நீலி கண்ணீர் வடித்து பொழப்பு நடத்தின கும்பல் நாக்கை பிடுங்கி கொண்டு நான்டு கொண்டு தான் ...


venugopal s
ஜன 27, 2025 19:02

பெட்டி கொடுத்தால் யாரைப் பற்றியும் என்ன வேண்டும் என்றாலும் பேசுவார் இவர்!


kumar
ஜன 27, 2025 18:18

சீமான் கருத்து உண்மை... என்னதான் சில நேரங்களில் காமெடியாக பேசினாலும்..சில நேரங்களில் அவரது கருத்துக்கள் தெளிவாகவும் உண்மையாகவும் இருக்கும்


nb
ஜன 27, 2025 17:47

உண்மைய பேசியதற்காக நன்றி ஐயா


ஆரூர் ரங்
ஜன 27, 2025 16:07

மண்ணைக் கேவலப்படுத்திவிட்டார்


theruvasagan
ஜன 27, 2025 16:02

ஓஹோ. பெரியார் மண்ணு. பெரியார் மண்ணுன்னு கூவனதுக்கு இதுதான் அர்த்தமா.


Seekayyes
ஜன 27, 2025 15:28

அண்ணாமலையோ, சீமானோ, யார் ஆட்சிக்கு வந்தாலும், முதல் வேலையாக எந்தெந்த கோவில் வாசலில் சாலைகள் இருக்கிறதோ அதை எல்லாம் உடைத்து அப்புறப்படுத்த வேண்டும்.


Seekayyes
ஜன 27, 2025 15:24

ஈ.வெ.ரா மண்ணுக்கூட இல்லை, அது களிமண்.


ஆதிநாராயணன்,குவைத்
ஜன 27, 2025 13:35

அருமை பூனைக்கு மணி கட்டிவிட்டார் இனி பெரியாரை வைத்து பிழைப்பவர்களுக்கு திண்டாட்டம் தான்


Ganesh Subbarao
ஜன 27, 2025 13:33

இப்படித்தான் விடாமல் அடிக்கவேண்டும் சூப்பர் சீமான்


சமீபத்திய செய்தி