உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துப்பாக்கியுடன் உக்ரைன் போரில் தமிழக மாணவர்

துப்பாக்கியுடன் உக்ரைன் போரில் தமிழக மாணவர்

சேத்தியாத்தோப்பு: ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற சேத்தியாத்தோப்பு மாணவர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பெற்றோர் கவலையடைந்துள்ளனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை, கீழ்பாதி கிராமத்தைசேர்ந்தவர் சரவணன் மகன் கிஷோர், 23; கடந்த 2021ல் மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். கிஷோர் மூன்றாம் ஆண்டு படித்தபோது, பகுதி நேரமாக கூரியர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். கடந்த, 2023ல் தடை செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ததாக அவரை ரஷ்யா போலீசார் கைது செய்தனர். இதையறிந்த பெற்றோர், மகனை ஜாமினில் எடுக்க கடலுார் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்திய துாதரகம் மூலமாக ரஷ்ய துாதரகத்தை அணுகினர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன், ரஷ்யா போலீசார், ராணுவ தளத்திற்கு அழைத்து சென்று பயிற்சி அளிப்பதாக கிஷோர் வீடியோ அனுப்பினார். மகனை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ராணுவ உடையில், கையில் துப்பாக்கியுடன் இருக்கும் வீடியோ, போட்டோவை கிஷோர், வேறொருவரின் மொபைல் போன் மூலமாக தன் பெற்றோரருக்கு அனுப்பியுள்ளார். இதனால், பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 'தங்கள் மகன் மீது பொய் வழக்கு பதிந்து ரஷ்யா போலீசார் கைது செய்துள்ளனர். மகனை மீட்க முடியாமல் தவிக்கிறோம். கிஷோரை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததது கவலை அளிக்கிறது' என, பெற்றோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 20:05

இரு நாட்டிலும் இருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரே. தவறு நடந்துள்ளது. எப்படியோ அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


K V Ramadoss
ஆக 20, 2025 16:21

மோடிக்கு நேரடியாக மனு அனுபச்சொள்ளுங்கள்


Rathna
ஆக 20, 2025 12:29

படிக்க போனவனுக்கு இதென்ன கேவலமான வேலை. இது மாதிரி செய்தால் வீட்டுக்கு சீருடை கூட வராது. எந்த அரசாங்கத்தாலும் காப்பாத்த முடியாது. இவர் அவருக்கு கடிதம் எழுதினார். மோடி தமிழர்களுக்கு எதிரி என்று கூப்பாடு போடவேண்டியது தான்.


அப்பாவி
ஆக 20, 2025 17:31

அங்கே போயி ஆயில் வாங்கி இங்கே விக்கலாமே. எதுக்கு போதை பொருள் வித்துக்கிட்டு மாட்டிக்கிட்டு


Ramesh Sargam
ஆக 20, 2025 11:53

அதிபர் டிரம்புக்கு விஷயம் தெரியுமா?


எஸ் எஸ்
ஆக 20, 2025 11:28

மத்திய அரசின் முயற்சிகளுக்கும் நடவடிக்கை களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டியே ஒட்டி விட்ட திராவிட மாடல் அரசு உடன் முயற்சி செய்ய வேண்டும். துறை அமைச்சர் விரைந்து சென்று மீட்டு வருவார்


அப்பாவி
ஆக 20, 2025 08:25

என்பது தமிழக அரசு விடுவிக்கணுமா? புட்டினை அவரை கட்டிப் புடிச்சவரைக் கேளுங்க.


Padmasridharan
ஆக 20, 2025 07:43

துபாய்ல நர்ஸ் கொலை செய்தாரென்று விடுவிக்க இந்தியா எத்தனிக்கும்போது இவரையும் விடுவிக்கும். காத்திருங்கள்


சமீபத்திய செய்தி