உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டாஸ்மாக் ஊழல் தொகை உயரலாம்: அமலாக்கத்துறை தகவல்

டாஸ்மாக் ஊழல் தொகை உயரலாம்: அமலாக்கத்துறை தகவல்

சென்னை : 'மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் நடந்த ஊழல், 1,000 கோடி ரூபாயை தாண்டலாம்' என, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மதுபானங்களை தயாரித்து வழங்கிய, எஸ்.என்.ஜே., மற்றும் கால்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடம், கடைசி மூன்று ஆண்டுகளுக்கான, 'சப்ளை' குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அவற்றுடன், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, பெரிய அளவு வித்தியாசம் உள்ளது. டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கு, 3 - 5 லட்சம் ரூபாய் வரை பெறப்பட்டு உள்ளது. அதற்கான குறிப்பு ஒன்றும் சிக்கியது. கலால் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஆலைகளில் இருந்து கடைகளுக்கு நேரடி விற்பனை செய்ததில், பாட்டிலுக்கு, 30 ரூபாய் வரை அதிகமாக விலை வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, 'டிஜிட்டல்' ஆவணம் ஒன்றில், வரவு என, பதிவிடப்பட்டு உள்ளது.முதற்கட்ட ஆய்வில், 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கலால் வரி ஏய்ப்பு, டெண்டர் முறைகேடு, கணக்கில் காட்டாமல் விற்கப்பட்ட மதுபானங்கள் குறித்த ஆய்வில், ஊழல் தொகை உயரலாம் என்று தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venkataraman
மார் 22, 2025 21:37

விரைவில் ஆதாரத்துடன் f.i.r..பதிவு செய்து குற்றவாளிகளை சிறையில் தள்ள வேண்டும். மறுபடி தேர்தலில் நிற்க முடியாதபடி பத்தாண்டுகளுக்கு உள்ளே தள்ள வேண்டும்


venugopal s
மார் 19, 2025 17:22

முதலில் தகுந்த ஆதாரங்களுடன் எஃப் ஐ ஆர் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து காட்டுங்கள் பார்ப்போம். இந்த மோடி மஸ்தான் வேலை எல்லாம் நீங்கள் வழக்கமாக செய்வது தானே!


Sridhar
மார் 19, 2025 15:02

ED எல்லாம் சும்மா வேஸ்டுங்க. சும்மா படம் காமிச்சிட்டு பம்மிருவாங்க. இவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருக்கு ஏழை மக்கள் வயத்துல அடிச்சி 7 லச்சம் கோடி துட்டு அடிச்சிருக்கானுங்க. கொஞ்சம்கூட அதிர்ச்சியே அடையாம வேற எதோ பேசிகிட்டுருக்காங்க தமிழ்நாடு மேல இவங்களுக்கு அக்கறையே இல்லனு திருட்டு கும்பல் சொல்றது உண்மைதான்.


Muralidharan S
மார் 19, 2025 12:54

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த 12 ஆண்டுகளில், ஊழலில் மலிந்து / நலிந்து கிடைக்கும் தமிழ்நாட்டில் இருக்கும் ஊழல் திராவிஷ அரசியல் வியாதிகள் எத்தனை பேர் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்து சிறையில் இருக்கிறார்கள்..? அதே மாதிரி தேசிய அளவில் எத்தனை ஊழல் கான்-cross அரசியல் வியாதிகள் சிறையில் இருக்கிறார்கள்..?. எதுவும் நடக்காது.. அரசியலில் ... எல்லாம் ஒரு கணக்கு.. மொத்தத்தில் அரசியல் வியாதிகளை நம்பி, ஏதாவது நல்லது நடக்கும் என்று நினைக்கும் மக்கள் - பரிதாபம்.. ஊழல் அரசியல் கட்சிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, ஊழல் அரசியல் வியாதிகள் சொத்துக்கள் பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பிறகு பார்க்கலாம்..


ஆரூர் ரங்
மார் 19, 2025 15:04

No COMMENTS.


Rajarajan
மார் 19, 2025 09:39

இரவோடு இரவாக, தி.மு.க. முக்கிய புள்ளி, டெல்லிக்கு சென்று மேல்மட்ட தலைவரை சந்திப்பார். பிறகு, இந்த ஊழல் கிணற்றில் போட்ட கல் தான். அப்படித்தானே, மணல் கடத்தல் வழக்கும் ஆனது.


Padmasridharan
மார் 19, 2025 06:46

வரி கட்டும் குடிக்காரர்களை திரைப்பட பாடல்களால் நடித்து, இழுத்து எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் எண்று நினைத்ததை சாதித்து விட்டார்கள்.


A Viswanathan
மார் 19, 2025 10:06

சும்மா பேசிக்கொண்டே இருந்தால் பத்தாது. சீக்கிரமாக விசாரித்து உரியவர்களிடம் கொள்ளை அடித்த பணத்தை பறிமுதல் செய்து உரிய தண்டனை வாங்கி கொடுத்தால் மற்றவர்களுக்கு பயம் இருக்கும் அப்போது தான் இ டி யின் மேல் மக்களுக்கு நம்பிக்கை வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை