மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையின்படி மாணவர்கள் பள்ளியில் மூன்று மொழியை கற்கவேண்டும். முதலில் தாய்மொழி, அடுத்து ஆங்கிலம்; மூன்றாவதாக எந்த மொழியையும் கற்கலாம். ஹிந்தியை தான் கற்க வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை. ஆனால் ஹிந்தியை மத்திய அரசு திணிக்கிறது என்று தமிழகத்தில் கருத்து பரவுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் சரி, தற்போது மார்க்சிஸ்ட் ஆட்சியிலும் சரி அங்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் தான் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்கிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிலும் மூன்றாவது மொழியை கற்பிக்கின்றனர். மாணவர்கள் விரும்பி கற்பதைதமிழக அரசியல்வாதிகள் தடுப்பது ஏன். மாணவர்களின் படிப்பில் அரசியல் என்பதுதமிழகத்தில் தான் நடக்கிறது. யாருடைய எதிர்காலத்தை வைத்து அரசியல் நடக்கிறதோ... அவர்களிடமே (மாணவர்கள்) மூன்றாவது மொழியை கற்பது குறித்து கேட்டோம்... கூடுதலாக கற்பதில் எந்த சிரமமும் இல்லையேநேத்ரா மகாலட்சுமி மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு மாணவர்களின் கனவு, பயனுள்ளதாக தான் இருக்கும். ஒரு மொழியை கூடுதலாக கற்றுக்கொள்வதில் யாருக்கும் எந்த சிரமமும் வரப்போவதில்லை. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பது போல் நாம் கற்கும் கல்வி நமக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். ஒருபோதும் தாய்மொழிக்கு எதிராக அமைந்து விடாது. 10 வயதுள்ள மாணவர்களுக்கு பல மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் அதிகம். அப்போதே அவர்கள் விரும்பிய மொழிகளை கற்க வாய்ப்பளிக்க வேண்டும். குறிப்பாக ஹிந்தி தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லையே. ஹிந்தி கற்றுக்கொண்டாலும் தவறில்லையே. அதனால் தமிழ், ஆங்கிலம் மறக்க போவதில்லை.மாநில அரசின் கடமை
சஞ்சய்இன்றைய நிலைமையில், சென்னையை தாண்டினால் தமிழ் மொழி பயன்பாடு குறைந்துவிடும். ஆங்கிலம் அல்லது ஹிந்தி தேவை என்பது தான் எதார்த்த நிலவரம். அரசியல்வாதிகள் குழந்தைகள் ஆரம்ப வகுப்பில் இருந்தே ஹிந்தியை கற்கின்றனர். ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வேண்டாம் என கொடி பிடிக்கின்றனர். ஹிந்தி கற்பதால் பிற மாநிலங்களில் தொழில் துவங்கி சாதிக்க கூட பயன் படுமே. மாணவ பருவத்தில் தான் கற்றுக்கொள்ள முடியும். மாணவர்கள் என்ன படித்து அறிவை வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றரோ அதை நிறைவேற்றித்தரும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. சி.பி.எஸ்.இ., மாணவரான நான் பெறும் மொழி அறிவு, மாநில கல்வி திட்ட மாணவர்களும் பெறவேண்டும்.வெளிநாடு செல்ல உதவும் பிரெஞ்சுமொழி
பர்மிதாஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை தமிழ் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழி எடுத்து படித்தேன். தற்போது ஏழாம் வகுப்பில் பிரெஞ்சு மொழியை பாடமாக எடுத்து படிக்கிறேன். மாணவப் பருவத்தில் ஒன்றிரண்டு மாதங்களிலேயே ஒரு புதிய மொழியை கற்றுக் கொண்டு பேசவும் எழுதவும் முடியும். பிற நாடுகளுக்கு செல்லும் போது அந்நாட்டவர்களின் மொழியை தெரிந்து கொள்வது அவசியம். எல்லா மொழியையும் கற்க முடியாது என்றாலும் அடிப்படையாக ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது. சி.பி.எஸ்.இ., மாணவியான எனக்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு மொழிகளில் பேசவும் எழுதவும் முடியும். கூடுதலாக மொழிகளை கற்றுக்கொள்வது தன்னம்பிக்கை, தைரியம் தரும்.வேலைக்கு சென்றாலும் ஹிந்தி உதவும்
கிப்டாசி.பி.எஸ்.இ., ஏழாம் வகுப்பு படிக்கிறேன். ஒன்றாம் வகுப்பில் இருந்து தமிழ், ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியாக ஹிந்தி படித்து வருகிறேன். தமிழ்மொழி தெரியாத பிற மாநில மாணவர்களை சந்திக்கும் போது ஹிந்தியில் பேசுகிறேன். இதனால் தடையின்றி தயக்கமின்றி எளிதாக நட்பாக பழக முடிகிறது. தனியாக ஹிந்தி படிப்பவர்களுக்கு பள்ளியிலேயே ஹிந்தி கற்றுக் கொண்டால் தேர்வெழுத உதவியாக இருக்கும். வேறு மாநிலத்திற்கு படிக்க சென்றாலும் வேலைக்கு சென்றாலும் ஹிந்தி உதவுகிறது. எனவே ஒவ்வொரு மாணவரும் கூடுதலாக ஒரு மொழி கற்றுக் கொள்ள வேண்டும்.டியூஷன் சென்று ஹிந்தி படிக்கின்றனர்
ராஜஹரீஷ் பாண்டியன்சி.பி.எஸ்.இ., மாணவரான நான் ஹிந்தி கற்கிறேன். ஒரு மொழியை கூடுதலாக படிப்பதன் மூலம் அதுதொடர்பான அறிவு விரிவடைகிறது. தாய் மொழி என்பது நம் உணர்வில் உள்ள விஷயம். அது எப்போதும் அழியாது. இப்போது நாம் பேச்சு வழக்கில் லைட், டேபிள், கேமரா என பல வார்த்தைகள் ஆங்கிலத்தில் தான் குறிப்பிடுகிறோம். அதற்காக தமிழ் மொழி அழிந்துவிட்டது என அர்த்தமா. மூன்றாவதாக ஹிந்தி கற்கலாம் என ஏன் சொல்கிறார்கள் என்றால், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொழி. அரசு பள்ளி மாணவர்கள் பலர் ஹிந்தி மொழியை டியூஷனுக்கு சென்று படிக்கின்றனர். தற்போது மூன்றாவது மொழி தேவையான ஒன்று.ஹிந்தி பாரமில்லைமுத்தீஸ்தமிழ், ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக பள்ளியில் ஹிந்தி பயில்கிறேன். கூடுதல் மொழி கற்பதை பாரமாக நினைக்கவில்லை. ஆர்வமுடன் கற்பதால் அதிக மதிப்பெண் பெற முடிகிறது.வருங்காலத்தில் நாட்டின் பிற பகுதிகளிலும் பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.வேலைக்கான தகுதியாக பார்க்க வேண்டும்சுவாஸ்திகாஇது டெக்னாலஜி உலகம். ஒவ்வொரு மாணவர்களும் திறமைகளை வளர்த்துக்கொண்டால் தான் இப்போட்டி உலகில் ஜெயிக்க முடியும். மும்மொழிக் கொள்கை என்றாலே ஹிந்தி தான் படிக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். தமிழ் தெரிந்த நாம் தெலுங்கு, மலையாளம் என பக்கத்து மாநில மொழிகளை கற்றுக்கொள்ளும்பட்சத்தில், வேலைவாய்ப்பு என கிடைத்து விட்டால் கர்நாடகா, கேரளா என சம்பந்தப்பட்ட அந்த மாநிலங்களுக்கு பயமின்றி செல்லலாமே. அதுபோல் அந்த மாநில மாணவர்களும் நம் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் தமிழ் மொழியும் வளரும் தானே. கூடுதலாக ஒரு மொழியை மாணவர்கள் கற்றுக்கொள்வதை அரசியலாக பார்க்க வேண்டாம். வேலை வாய்ப்புக்கான தகுதியாக பார்க்க வேண்டும்.அனைவருக்கும் வாய்ப்புதனுஷ்காகூடுதல் மொழியாக பள்ளியில் ஹிந்தி பயில்கிறேன்.பிரெஞ்சு கற்பதிலும் ஆர்வம் உள்ளது. தனியாக அல்லாமல் பள்ளியிலேயே கூடுதல் மொழிகளை கற்றுக்கொள்ள முடிகிறது. எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு மாநில பாடதிட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை அதற்கு வழிவகுக்கும்.- நமது நிருபர் குழு- -