வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஜி.எஸ்.டி இல்லா ஒப்பந்தம் முயற்சி செய்து பாருங்களேன்.
ஆசைக்கு அளவில்லை
மேலும் செய்திகள்
டிரம்ப் மீண்டும் அதிபர் ஏற்றுமதி எழுச்சி பெறுமா?
08-Nov-2024
திருப்பூர்: அமெரிக்காவுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த, மத்திய அரசு முயற்சிக்க வேண்டுமென, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்தியாவின் வர்த்தக கூட்டாளி நாடுகள் பட்டியலில், முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா; ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில், அமெரிக்காவுடன் நல்லுறவு பேணப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் மட்டும், கடந்த 23 ஆண்டுகளில், 5.22 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக மதிப்பு, 2022- 23ம் நிதியாண்டில், 10.03 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2023 -24 நிதியாண்டில், 10.81 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த, 2023--24ம் நிதியாண்டில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு, 6.59 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடந்துள்ளது; அமெரிக்காவில் இருந்து, 4.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி வர்த்தகம் நடந்துள்ளது.டிரம்ப் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்க இருக்கும் நிலையில், இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அதற்காக, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தியா, ஒன்பது நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து, வர்த்தகத்தை வளர்க்கிறது. அதேபோல், அமெரிக்காவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், நம் நாட்டு ஏற்றுமதி வர்த்தகம் இருமடங்கு உயருமென, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'இந்தியாவில் இருந்து அமெரிக்க நாடுகளுக்குத்தான், அதிகபட்சமாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. பருத்தி நுாலிழை ஆடைகளை, அமெரிக்க மக்கள் விரும்பி அணிகின்றனர். அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்ற பின், வரியில்லா வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கையை உருவாக்க, மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்,' என்றனர்.
ஜி.எஸ்.டி இல்லா ஒப்பந்தம் முயற்சி செய்து பாருங்களேன்.
ஆசைக்கு அளவில்லை
08-Nov-2024