உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் சுரண்டியது ரூ.5,500 லட்சம் கோடி!

இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர் சுரண்டியது ரூ.5,500 லட்சம் கோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,: இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, 1765 முதல் 1900 வரை நாட்டின் 5,500 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எடுத்துச் சென்றதாக, மனித உரிமை அமைப்பான, 'ஆக்ஸ்பேம் இன்டர்நேஷனல்' வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உலக பொருளாதார அமைப்புகளில் ஒன்றான, 'வேர்ல்டு எகனாமிக் போரம்' ஆண்டுக் கூட்டம் துவங்கியுள்ளது. அதன் முதல் நாள் கூட்டம் துவங்கும் முன், 'டேக்கர்ஸ், நாட் மேக்கர்ஸ்' என்ற தலைப்பில் ஆக்ஸ்பேம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:வரலாற்றுப் பதிவான காலனி ஆதிக்கத்தில் துவங்கிய வாரிசு அதிகாரம், சமத்துவமின்மை ஆகியவை நவீன காலத்திலும் மக்களை தொடர்ந்து பாதித்துவருகின்றன. குளோபல் சவுத் எனப்படும் தென்பகுதி நாடுகளை வடபகுதி நாடுகள் திட்டமிட்டு தொடர்ந்து சுரண்டி வந்தது வரலாறு. பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சி கட்டுரைகள், ஆவணங்கள் அடிப்படையில் கணக்கிட்டதில், 1765 முதல் 1900 வரை, இந்தியாவில் இருந்து பிரிட்டன் சுரண்டிய சொத்துக்களின் மதிப்பு, 5,500 லட்சம் கோடி ரூபாயை தாண்டுகிறது.இதில், 10 சதவீதத்தை பிரிட்டனின் 10 சதவீத பெரும் பணக்காரர்கள் வசமாக்கிக் கொண்டனர். பிரிட்டிஷ் கரன்சியான 50 பவுண்ட் நோட்டை பரப்பி வைத்தால், ஒட்டுமொத்த லண்டனை கவர் செய்து விடும் அளவு அது. இந்தியாவை கிழக்கு இந்திய கம்பெனி வாயிலாக ஆட்சி செய்த பிரிட்டன், ராணுவத்துக்கு 75 சதவீதம் செலவிட்டு, பொதுப் பணிகளுக்கு வெறும் 3 சதவீதம் செலவிட்டது தெரிய வந்துள்ளது. அதோடு, இந்தியாவின் நீர்ப்பாசன முறைகள், விவசாய உற்பத்தியை சீரழித்து, வறுமையும் வறட்சியும் ஏற்படுத்தியதன் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

balasanthanam
ஜன 21, 2025 23:00

If we take survey now after independence that too after 1967 More than this figure will be with the politicians who ruled over here congress dmk like state politician of the each state. The total loan amount of loan by state and central in the name of projects 65%swindled by them only.


nisar ahmad
ஜன 21, 2025 17:24

அவர்களை விட அதிகபாக இப்போது ஆட்சி சையும் பஜக சுரண்டுகிறது ஆனால் திறமையாக, அதனால தான் அந்தக்கட்சி உலகிலேயே பணக்கார கட்சியாக உள்ளது அது திருடுவது திறமையாக செய்கிறது.


கலையரசன்,சாத்தூர்
ஜன 21, 2025 20:21

உம்மை போன்றவர்களுக்குதான் தனியாக ஒரு தேசம் பிரித்து கொடுத்து விட்டோமே பிறகு ஏன் இங்கு இருந்து கொண்டு கூப்பாடு போட வேண்டும்? உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு போய் விட வேண்டியதுதானே?


Ramesh Sargam
ஜன 21, 2025 13:22

சுதந்திரம் அடைந்தபிறகு, அதைவிட அதிகம் சுரண்டியவர்கள், சுரண்டிக் கொண்டிருப்பவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக.


அப்பாவி
ஜன 21, 2025 12:39

அதுக்கு முன்னாடி ஆட்சி செய்த முகலாயர்கள் சுரண்டியது 10000 லட்சம் கோடி. அதுக்கு முன்னாடி வந்தேறிய ஆரியர்கள் சுரண்டியது 50000 லட்சம் கோடி. எல்லாவற்றையும்.இழந்தவர்கள் இந்தியாவின் ஆதி குடிகள்.


Haja Kuthubdeen
ஜன 21, 2025 15:54

இதில் சிறிய வித்தியாசம் மகாலயர்கள் சுரண்டி அதை வெளியே எடுத்து போகவில்லை...அப்படி வெளியே போயிருந்தாலும் ஆப்கனுக்கே போயிருக்கனும்...ஆப்கனின் இன்றைய நிலை அனைவரும் அறிந்ததே....


subramanian
ஜன 21, 2025 08:12

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு பாரதத்தை உலகின் தங்கக்கிண்ணம் என்று சொல்வார்கள்.


ஆரூர் ரங்
ஜன 21, 2025 07:46

இதனால் மகிழ்ச்சியடைந்த ஈர வெங்காய சாமி காலை வெள்ளையனே வெளியேறாமல் எங்களை இன்னும் சுரண்டிக் கொண்டிரு எனக் கெஞ்சினார். இப்போ அவரது சீடர் குடும்பம் சுரண்டுகிறது


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 21, 2025 07:28

5500 லட்சம் கோடி சுரண்டி கொண்டு போனாலும் அவன் மொழி தான் வேண்டும்...பாரத மொழியாகிய இந்தி வேண்டாம்....ஏனெனில் நாம் திறமைசாளிகள் நமக்கு எந்த மொழி தேவை என்பதை தேர்ந்தெடுப்பதில் அறிவாளிகள்...!!!


SANKAR
ஜன 21, 2025 09:34

in a multi language multi culture country like India single link language is not possible.no other country this huge diversity


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை