உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கீழடி அகழாய்வில் மத்திய அரசு கேள்வியில் தவறில்லை: தி.மு.க., அரசியல் செய்கிறது: பாண்டியராஜன் குற்றச்சாட்டு

கீழடி அகழாய்வில் மத்திய அரசு கேள்வியில் தவறில்லை: தி.மு.க., அரசியல் செய்கிறது: பாண்டியராஜன் குற்றச்சாட்டு

சென்னை: ''ஆரியர் -- திராவிடர் தத்துவத்தை கொண்டு வந்து, பிரிவினைவாதத்தை உருவாக்க தி.மு.க., முயற்சிக்கிறது. கீழடி அகழாய்வில் மத்திய அரசு கேள்வியில் தவறில்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் குற்றஞ்சாட்டினார்.

அவர் அளித்த பேட்டி:

'கீழடி நாகரிகத்தை இந்திய நாகரிகம்' என, நான் சொன்னதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் தான் முதன்முதலாக, சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்டது.கீழடியை வைத்து அரசியல் செய்யும் தி.மு.க., கீழடி அகழாய்வுக்கு ஒரு காசு கூட செலவு செய்யவில்லை.தமிழகத்தில் இதுவரை, 39 இடங்களில் அகழாய்வு நடந்துள்ளது. அதில், 33 இடங்களில் அகழாய்வு செய்ய உத்தரவிட்டது அ.தி.மு.க., அரசு தான். ஈரோடு கொடுமணல் அகழாய்வில் இரும்பு பயன்பாடு கண்டறியப்பட்டது. பழனிசாமி முதல்வராக இருந்த போது தான், அங்கு அகழாய்வுக்கு முதலில் நிதி ஒதுக்கப்பட்டது.'கீழடி என் தாய்மடி' என்ற வார்த்தையை உருவாக்கியது, நான் தான். அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அந்த கண்காட்சிக்கு, 'கீழடி என் தாய்மடி' என்று பெயர் சூட்டினேன்.பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகமாக இருந்த அழகன்குளத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் மூன்று முறை அகழாய்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இப்போது, எட்டு இடங்களில் அகழாய்வு நடக்கிறது.

நிபுணர்கள் அதிகம்

அதற்கு வித்திட்டது அ.தி.மு.க., அரசு. பழனிசாமி முதல்வராக இருந்த போது தான், 15 தொல்லியல் நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்வெட்டை படியெடுக்கும் நிபுணர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழகம் தான்.கீழடி அருங்காட்சியகத்திற்கும் இடம் தேர்வு செய்து, விவசாயிகளிடம் இருந்து நிலத்தை வாங்கி முதற்கட்ட பணிகளை முடித்து, பழனிசாமி திறந்து வைத்தார்.கடந்த 2006 முதல் 2011 வரை கீழடியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, அன்றைய கருணாநிதி அரசு ஏற்கவில்லை.இந்த ஐந்து ஆண்டுகளில் தொல்லியல் ஆய்வுகளுக்கு, 9 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், பழனிசாமி முதல்வராக இருந்த நான்காண்டுகளில், ஆண்டுக்கு 105 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகளை, 10 ஆண்டுகளுக்குப் பின், அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.இந்த அறிக்கையில் கி.பி., 5ம் நுாற்றாண்டிலிருந்து கி.மு., 5ம் நுாற்றாண்டு வரை அதாவது, 1,000 ஆண்டுகளில் ஏதாவது ஓராண்டைச் சேர்ந்த காலகட்டமாக, இந்த நாகரிகம் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

திசை திருப்புகின்றனர்

இதற்கு தான் மத்திய தொல்லியல் துறை விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். இதில், தி.மு.க., அரசியல் செய்கிறது.அ.தி.மு.க., ஆட்சியில், கீழடியில் ஐந்து கட்ட அகழாய்வு நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதை, மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை தவறு என்றோ, செய்யக்கூடாது என்றோ யாரும் சொல்லவில்லை.வைகை நதி நாகரிகத்திற்கும், சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. அதே எழுத்து வடிவங்கள் உள்ளன. ஆரியர் -- திராவிடர் தத்துவத்தை கொண்டு வந்து, பிரிவினைவாதத்தை உருவாக்க தி.மு.க., முயற்சிக்கிறது.அதற்கு பதிலடியாகவே, பாரத நாகரிகத்தின் அடிப்படை தமிழர் நாகரிகம் என்று சொன்னேன். இதைத்தான் திசை திருப்புகின்றனர்.கீழடியில் தமிழக அரசு நடத்திய ஐந்து கட்ட அகழாய்வு அறிக்கையை பற்றி, முதல்வர் ஸ்டாலின் பேசுவதில்லை. தமிழக அரசின் ஆய்வறிக்கையில், எந்த கேள்வியையும் மத்திய அரசு கேட்கவில்லை. கீழடியில் அ.தி.மு.க., செய்த சாதனைகளுக்கு, தி.மு.க., அரசு, 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 21, 2025 22:34

இத்தனை நாட்கள் இவர் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை.....கடந்த இரண்டு நாட்களாக தினமலரில் இவரின் அறிக்கை வந்த வண்ணம் உள்ளது.....


முருகன்
ஜூன் 21, 2025 21:51

தமிழக்கு ஆதரவாக பேச சொன்னல் உங்கள் பாசம் அதை ஏற்க மறுப்பது இயல்பு தானே


Mahendran Puru
ஜூன் 21, 2025 19:47

தேமுதிக வாயிலாக அரசியலுக்கு வந்து எம் எல் ஏ ஆகி பின்னர் அதிமுகவிற்கு தாவி அங்கும் சசி பன்னீர் எடப்பாடி என மாறி மாறி தாவி இப்போ பாஜகவிற்கு தாவ பிளான் போட்டுவிட்டார் போல. கை தேர்ந்த அரசியல்வாதி.


Balasubramanian
ஜூன் 21, 2025 17:32

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் ஆசை பாசம் காதல் என நாகரீக வாழ்வில் விழுந்தான்! அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை! தமிழ் தமிழன் என்று சொல்லி தேர்தல் களேபரம் செய்து இனறு சிலர் மட்டுமே இதில் லாபம் அடைய முயற்சிக்கிறனர்!


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 17:05

மேலடி அகழ்வாராய்ச்சியில் ஒரு கட்டுமரம் கிடைத்ததாக தகவல். அதற்குள் மஞ்சத்துண்டு மற்றும் கறுப்புக் கண்ணாடியும் கிடந்ததாக கூறப்படுகிறது. ஊழல் விஞ்ஞானியின் தொன்மையைக் காட்டுகிறது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 21, 2025 13:48

கொஞ்சம் விட்டால் கட்டுமரத்தின் கொள்ளுதாத்தாவுக்கு 10 தலைமுறைக்கு முன் இருந்த கொள்ளு தாத்தா கீழடிராஜாவாக இருந்து ஆண்டவர் என்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று சொல்வாங்க. மக்கள் உஷாராக இருப்பது நல்லது


மணியன்
ஜூன் 21, 2025 10:55

இன்று இந்த திராவிடக்கொள்ளையரால் மக்கள் படும் கஷ்டத்தை திசை திருப்ப கீழடி,மேலடி என்று திசைதிருப்பி மீண்டும் 2026ல் ஆட்சியைபிடித்து கொள்ளையை தொடர்ந்து நடத்த போடும் நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டால் தமிழ்நாடு பேரழிவிலிருந்து தப்பும்.


venugopal s
ஜூன் 21, 2025 06:44

அதுசரி,மரத்துக்கு மரம் தாவும் மந்தியைப் போன்ற நீங்கள் இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்!


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 10:42

சபாநாயகர் அண்டு எட்டு மந்திரிகள் கட்சித்தாவிகள்தான். அஞ்சு கட்சி அமாவாசையை காப்பாற்ற முயன்றது போல 60 ஆண்டு சீனியர் விசுவாசி துரைமுருகனுக்கு கூட உதவவில்லை.


renga rajan
ஜூன் 21, 2025 05:49

renga rajan


ராஜா
ஜூன் 21, 2025 04:44

தமிழரின பாரம்பரிய வரலாற்றினை அழிவிற்கு கொண்டு செல்லும் வகையில் வட நாட்டவர் ஏதேதோ வழியில் முயற்சி செய்கின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் இந்த முயற்சியை அறிந்து அதை செயல்படுத்தாதபடி தடை செய்ய வேண்டும்.


vivek
ஜூன் 21, 2025 05:42

தவறான கருத்து ராஜா...டாஸ்மாக் ஆதிக்கத்தில் தமிழகம் வீறு நடை போடுகிறது


SUBBU,MADURAI
ஜூன் 21, 2025 06:52

கீழடி அகல்வாய்வில் இந்த திராவிடமாடல் அரசு பித்தலாட்ட பிராடு தனம் பண்ணுகிறது ஆராய்ச்சி என்ற பெயரில் வெறும் பானை ஓட்டை வைத்து தமிழர்களை ஏமாற்ற பார்க்கிறது அப்படிப் பார்த்தால் ஆதிச்ச நல்லூரில் பத்து லோடு பழைய பானை ஓடுகளை அள்ளலாம். மத்திய அரசு கேட்பதற்கு சரியான பதிலை சொல்லாமல் வழக்கம் போல தமிழர்களின் பழங்கால தொன்மத்தை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது இதனால் தமிழர்களை வஞ்சிக்கிறது என்று தத்தி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு லாவணி பாடிக் கொண்டிருக்கிறது இதை கருணாநிதி சொன்னது போல் சோற்றால் அடித்த பிண்டங்களும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை தரும் விஷயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை