உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊசி மூலம் தர்பூசணியில் சிவப்பு சாயம் ஏற்றும் கொடுமை; ஒரே நாளில் 1200 கிலோ பழங்கள் அழிப்பு

ஊசி மூலம் தர்பூசணியில் சிவப்பு சாயம் ஏற்றும் கொடுமை; ஒரே நாளில் 1200 கிலோ பழங்கள் அழிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை பீ.பி.குளம் பகுதி பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய ஆய்வில் சிவப்பு சாயம் ஏற்றி விற்பனைக்கு வைத்திருந்த 1200 கிலோ தர்பூசணி பழங்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: பழங்களுக்கு ஊசி மூலம் செயற்கை வண்ணம் (சிவப்பு) ஏற்றுகின்றனர். அதை இரண்டாக வெட்டி பார்வைக்கு வைக்கும் போது அதிக சிவப்புடன் கண்ணைக் கவரும். பொதுமக்கள் இந்த வண்ணத்தை பார்த்து வாங்கி ஏமாறுகின்றனர். பழத்தை வெட்டி 'டிஸ்யூ' பேப்பரால் துடைத்து பார்த்தால் சிவப்புநிற சாயம் பேப்பரில் ஒட்டியிருக்கும். பேக்கரி உணவுகளில் கூட அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை தவிர பிற செயற்கை வண்ணங்களுக்கு தடை விதித்துள்ளோம். பீ.பி.குளம் பகுதியில் உள்ள 5 கடைகளை ஆய்வு செய்த போது செயற்கையாக நிறமேற்றியது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்த 1200 கிலோ எடையுள்ள பழங்களை கைப்பற்றி மாநகராட்சி வண்டியில் ஏற்றி திருப்பாலையில் உள்ள மைக்ரோ கம்போசிங் மையத்தில் அழிக்கப்பட்டது. தொடர்ந்து பழக்கடைகளில் ஆய்வு செய்யப்படும் என்றார்.

புகார் தெரிவிக்க

அடுத்த மாதம் மாம்பழ சீசன் துவங்கி விடும். அதிலும் கார்பைட் கல் வைத்து பழுக்கப்பட்டு விற்பனைக்கு வரலாம். பழைய ஆப்பிள்களில் மெழுகு தடவி புதிது போல் சில கடையில் வைத்திருக்கலாம். நுகர்வோருக்கு சந்தேகம் இருந்தால் 94440 42322 வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ethiraj
மார் 26, 2025 05:51

Destroying fruits is not a solution the seller must be jailed 24 hours as punishment by mobile court Rs 10000 fine or 24 hours jail


Dharmavaan
மார் 25, 2025 19:06

இவங்களுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும்


venkatan
மார் 25, 2025 17:28

பெரும்பாலும் சென்னையில் மா, பல மற்றும் வாழைப்பழங்கள் இயற்கை சுவையுடன் இருப்பதில்லை. பழங்கள் பழுப்பதை தாமதப்படுத்த இரசாயனங்கள் தெளிக்கப்படுகின்றன. பழங்கள் சாதிக் கட்டிகளுடன் ஆங்காங்கே பச்சை நிற திட்டுக்களுடன் இனிப்பு சுவை குன்றி செயற்கையாகிவிட்டன. இந்தமாதிரி செய்கின்ற மனிதர்களை தயை தாட்சண்யமின்றி உணவுப் பாதுகாப்பு சட்டப்படி தண்டிக்க வேண்டும்.


S. Neelakanta Pillai
மார் 25, 2025 17:10

இந்த செய்தியின் அடிப்படையில் எந்த கருத்தை எழுத சொல்கிறீர்கள். . சாயம் கலந்த பழங்களை விற்கிறான் என்று தெரிந்தும் அந்த கடைக்காரன் மீது நடவடிக்கை இல்லை. பழத்தை இவன் தலையில் சுமந்து கொண்டு போய் அழித்தானாம். இன்று லட்சணத்தில் இனிமேல் இதுபோல் நடந்தால் இவனுக்கு இந்த போனில் தொடர்பு கொள்ள வேண்டுமாம், அறிவிப்பு வேறு. எல்லாம் தலையெழுத்து.


Nandakumar Naidu.
மார் 25, 2025 13:18

தமிழகம் முழுவதும் முக்கியமாக சென்னை, கோவை, மதுரை போன்ற பெரு நகரங்களில் சோதனை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் இது போன்று தான் நடக்கிறது. உணவுப்பண்டங்கள், மருந்துகள் போன்றவற்றில் கலப்படம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அப்போது தான் இது குறையும்.


புதிய வீடியோ