உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

ஆன்மிகம் மூலம் மதமாற்றத்தை பூஜாரிகள் தடுக்க வேண்டும் ; ஆர்.ஆர்.கோபால்ஜி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமேஸ்வரம்; ''கிராம கோயில் பூஜாரிகள் ஆன்மிக போதனைகள்மூலம் மதமாற்றத்தை தடுக்க வேண்டும்'' என தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி தெரிவித்தார்.ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ஜூன் 15ல் தமிழ்நாடு வி.எச்.பி., சார்பில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் துவங்கி தொடர்ந்து 15 நாட்கள் நடந்தது.நேற்று நிறைவு விழாவையொட்டி கோசுவாமி மடத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பூஜாரிகள் பூணுால் அணிந்தனர். பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:மதசார்பற்ற நம்நாட்டில்அதுவும் தமிழகத்தில் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதுதான் நம் பலவீனம். இதனை மீட்க நாம் போராட வேண்டும். அக்காலத்தில் கோயிலுக்கு ஆன்மிக பெரியோர்கள் தானமாக கொடுத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இன்று அரசியல்வாதிகள் கபளீகரம் செய்கின்றனர்.

இழிவுபடுத்த ஒரு கும்பல்

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலம் முதல் தற்போது வரை மதமாற்றம்நடக்கிறது. இது ஹிந்து சமூகத்திற்கு பேரழிவு ஆகும். எனவே கிராமங்களில் ஆன்மிக போதனைகள் மூலம் மக்களிடம் ஹிந்து மதத்தின் புனிதம், கடவுளின் வரலாற்று கதைகளை விளக்கி தெய்வ நம்பிக்கை ஏற்படுத்தி மத மாற்றத்தை தடுக்க வேண்டும். நம் மதத்தையும், கிராம கோயில் பூஜாரிகளையும் இழிவுபடுத்த ஒரு கும்பல் அலைகிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. இதுதான் நீங்கள்நம் நாட்டிற்கு செய்ய தர்மம் என்றார். கிராம கோவில்களே இந்து சமுதாயத்தின் ஆணிவேர். கோவில்களுக்கு நமது முன்னோர் இடங்களை தானமாக கொடுத்தனர். கோவில்கள் மூலமாக மக்களுக்கு இலவச கல்வி கிடைக்க வேண்டும். அன்னதானம் கிடைக்க வேண்டும் என வழிவகை செய்தனர். இப்போது, நகரங்களில் ஏராளமான கோயில் கட்டடங்களுக்கு போதிய வருவாய் வராமல் பாக்கி வைத்துள்ளனர். வசூலிக்க வழி வகை இல்லை. கோர்ட்டுக்கு அலைகிறார்கள். இந்து கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும்.கிராமக்கோவில் பூஜாரிகள், தங்கள் பகுதி மக்களை கோயிலுக்கு அழைத்து வரவேண்டும். குழந்தைகளுக்கு நீதிக் கதை சொல்லிக் கொடுக்க வேண்டும். மதம் மாறியவர்களை தாய்மதமான இந்து மதத்திற்கு அழைத்து வரவேண்டும். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சென்னையில் உள்ள விசுவ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் ஏராளமானோர் தாய்மதம் திரும்புகின்றனர். கிராம கோவில் பூஜாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம்; ரூ.4 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதை, ரூ.5 ஆயிரமாக்க வேண்டும். இப்போது ஊக்கத்தொகையாக ரூ.1,500 கொடுப்பதாக அறிவித்துள்ளதை அதை செயல்படுத்தவேண்டும். இவ்வாறு ஆர்ஆர். கோபால்ஜி பேசினார்.கிராம கோவில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் செயல்தலைவர் செல்லமுத்து, பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜாசேஷாத்ரி, மாநில இணை அமைப்புச்செயலாளர் பொன்கி.பெருமாள், மாநில இணைப்பொதுச் செயலாளர்கள் கணேசன், விஜயகுமார், ராமநாதபுரம் மண்டல அமைப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற பூஜாரிகளுக்கு நாடார் மஹாஜனசங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.

மொழி அரசியல் எதிரானது!

பயிற்சி முகாமில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் பூஜை, கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடக்க வேண்டும். அதை மீறி மொழி அரசியல் கூடாது. மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும். குழந்தை பிறப்பில் நாட்டின் சராசரி 1.9ஆக குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அது, 1.4ஆக குறைந்திருப்பது அபாய எச்சரிக்கை. இதனால், குடும்ப அமைப்பு சீரழியும். இந்து பெண்கள் குறைந்தது 3 குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்; 3 குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கு அரசு நலத்திட்டங்களில் முன்னுரிமை வேண்டும். கோவில்களில் கட்டண தரிசன முறையை கைவிட வேண்டும். பென்ஷன் பெறும் கிராமக் கோவில் பூஜாரிகள் மறைவுக்கு பிறகு, அவர் மனைவிக்கு வழங்க வேண்டும். கிராமக் கோவில் நலவாரியத்தை செயல்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை எளிதாக்க வேண்டும். எல்லா கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். இந்து கோவில் சொத்துக்களில் மாற்று மதத்தவருக்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்ய வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்று நடக்காதபடி இந்துசமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். கோவில் தொடர்புடைய பணிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். மாற்று மதத்தினரை பணியமர்த்தக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

K Ganesan
ஜூன் 30, 2025 23:50

Why do hindus migrate to the other religions? Why do politicians change political parties? Caste atrocities, e discrimination, e felony, Dalits genocides, e terrorism, e untouchability etc forcing people to migrate. Will Hinduism eradicate e tem to prevent conversion. Hinduism should maintain equality, fraternity, reflecting attractive to all hindus.


என்றும் இந்தியன்
ஜூன் 30, 2025 16:52

மத மாற்றம் எப்படி நடக்கின்றது. கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை என்று ஒருவன் உளறிக்கொண்டே இருந்தான் அவனிடம் போய் கேட்டால் முருகன் இல்லை சிவன் இல்லை விஷ்ணு இல்லை என்று சொல்வான். ஏன்டா அப்போ அல்லா இல்லை ஏசு கடவுள் இல்லை அப்படித்தானே என்று கேட்டால் நான் இந்து கடவுள் இல்லை என்று சொன்னேன் என்பான். இந்த மாதிரி இந்துவாக இருந்து இந்து/சனாதன மதத்தை அழிக்கவேண்டும் என்று சொல்பவன் பேச்சு கேட்டு, மற்றும் பணம் கொடுக்கின்றோம், வேலை வாங்கிக்கொடுக்கின்றோம் என்ற சொல்பேச்சு கேட்டு பலர் மதமாற்றம் செய்துகொண்டனர் கிறித்துவ மதத்திற்கு. வெளிநாட்டிற்கு உன்னை வேலைக்கு அனுப்புகின்றேன் என்று சொல்பேச்சு கேட்டு சிலர் மதமாற்றம் செய்து கொண்டனர். மற்றும் பூஜாரிகள் அந்த வேலைக்கு ஊதியம் கிடைக்கின்றது அந்த வேலையை செய்கின்றனர், ஆகவே அவர்கள் கோவில் ஊழியர்கள் என்று சொல்லலாம். ஆகவே இதை பூஜாரிகள் மூலம் தடுக்க முடியாது. இதற்கு ஒரே வழி. சட்ட மாற்றம்.1 சனாதன / இந்து மதத்தின் குறைகளை டப்பா டப்பா டப்பா ஏதோ மற்ற மதங்களில் குறையே இல்லை போல அடிப்பவர்களை "தவறு கண்டேன் சுட்டேன்" சட்டம் பின்பற்றவேண்டும். 2 விருப்பத்தோடு மதமாற்றம் செய்து கொண்டவர்கள் அவர்கள் பெயரை அந்த மதப்பெயராக மாற்றிக்கொள்ளவேண்டும். மற்றும் அவர்களுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகை மதமாற்றம் முன்பு இருந்தது மத ஆற்றம் இந்த தொடர விடக்கூடாது SC/ST சலுகைகள்


Palanisamy T
ஜூன் 30, 2025 15:20

பூசாரிகள் செய்வதும் மற்றவர்களை போன்று வெறும் தொழில்கள். அவர்களுக்கு ஆன்மிகம் ஓரளவிற்கு விளங்கும். அவர்களால் மத மாற்றத்தை தடுக்கமுடியாது. ஆன்மிகமென்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. தமிழில் அறிவன் மெய்யறிவு அறிவியல் என்ற வெவ்வேறுப் பிரிவுகள் உள்ளன. இதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள். மதமாற்றக் கும்பல்கள்கள் பணங்களை நிறைய கைகளில் வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஏழ்மைகளோடு விளையாடுகின்றார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாயும் . அவர்களுக்கு மதம் மாற்றம் செய்ய ஆன்மிகம் தேவை யில்லை. அவர்களிடம் ஆன்மீகமும் மிகக் குறைவு. சம்பந்தப்பட்டவர்களின் கண்ணீரை ஏழ்மையைக் கொஞ்சம் குறைத்தால் போதும். மேலும் இந்துக்களிடையே இன்றைக்கும் இருக்கும் உயர்வு தாழ்வு சாதிமனப்பான்மை மற்றும் தீண்டாமைமையை அவர்கள் நன்குப் பயன் படுத்திக் கொள்கின்றார்கள். இதையெல்லாம் குறைக்க ஹிந்து இயக்கங்கள் முயற்சிசெய்தால் மதமாற்றங்களை நிறைய தடுக்கலாம்.


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 16:14

உயர்வு, தாழ்வு எல்லா மதங்களிலும் இருக்கின்றன. அதை மறைத்து சமமாக நடத்துவதாகப் பொய் சொல்லி மதம் மாற்றுகிறார்கள். மாறிப்போன பின்பு இதை உணர்ந்தாலும் போலி தன்மான பிரச்சினைகள் காரணமாக வாய்திறப்பதில்லை. அன்னிய மொழி பேசும் மூர்க்க ஆட்கள் தன் சொந்தமத தமிழ் பேசும் ஆட்கள் உட்கார்ந்து சென்ற இடத்தை தண்ணீர் விட்டுக் கழுவும் கொடுமை தெரியுமா?. பல தேவாலயங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி இடம்.


Ali
ஜூன் 30, 2025 15:02

சான்ஸ் இல்லை...ஒரே குலம் ஒரே தேவன் என சொல்லும் இஸ்லாம் தான் சிறந்தது.. ஜாதி பாகுபாடு இல்லை.. இதெல்லாம் சனாதன மதத்தில் இருக்குது


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 16:06

ஒன்றே குலம். ஆனா ஷியா, சூஃபி, அஹ்மதியா, வகாபி,சலாபி, தாவூதி போஹ்ரா இதில் சேர்த்தியில்லை?


Yasararafath
ஜூன் 30, 2025 14:41

யாரையும் மதம் மாற்றுவது பற்றி கட்டாயபடுத்தகூடாது மற்றும் கட்டாயபடுத்தமுடியாது.


venugopal s
ஜூன் 30, 2025 14:33

இவர்களை நம்பினால் தமிழகமும் விரைவில் பீகார் உத்தரப் பிரதேசம் போல் நாசமாகி விடும்!


ராஜா
ஜூன் 30, 2025 11:12

ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பஞ்சம் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது


sribalajitraders
ஜூன் 30, 2025 10:11

நான் என்னுடைய சுயா விருப்பத்தின்படி கடவுளை பின்பற்றுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை


ஆரூர் ரங்
ஜூன் 30, 2025 10:52

மதமாற்றத்தின் முக்கிய குறிக்கோள் தேசத்தில் குழப்பத்தை உருவாக்கி அப்பாவிகளை அன்னிய அடிமைகளாக ஆக்குவதே. ஆப்பிரிக்க நாடுகள் மதமாற்றத்தின் மூலமே அடிமையாக்கபட்டு வளங்கள் சுரண்டப்பட்டு பிச்சைக்கார நாடுகளாக ஆகிவிட்டன.


Palanisamy T
ஜூன் 30, 2025 14:39

உங்களுக்கு "கடவுள்" என்றச் சொல் என்னவென்று சரியாக தெரியுமா அல்லது கொஞ்சமாவது விளங்குகின்றதா? அது காரணச் சொல். எந்த மதங்களாலும் இறைவனை எந்த காலத்திலும் அறிய முடியாது. சுயவிருப்பத்தின் படி மதத்தையோ மதங்களையோ பின் பற்றலாம். எந்தக் காலத்திலும் கடவுளை அறியமுடியாது. மற்ற மதங்களுக்கு அவர் அன்று போன்று இன்றும் வியாபார பொருள்.


நாஞ்சில் நாடோடி
ஜூன் 30, 2025 10:04

மதமாற்றம் ஒரு தேசிய அபாயம். தூத்துக்குடி ஸ்டர்லைட், குளச்சல் துறைமுகம் திட்டங்கள் முடங்கியதற்கு கிறிஸ்தவ மிஷனரிகளே காரணம். நம் நாட்டு வளர்ச்சியை தடுக்க, தொழில் திட்டங்களை முடக்க எதிரி வெளிநாடுகள் கிறிஸ்தவ மிஷனரிகளையே நாடுகிறது. எனவே மதமாற்றம் ஒரு தேசிய அபாயம்...


kamaraj jawahar
ஜூன் 30, 2025 09:34

சிவாஜி சரி நேதாஜி சரி அது என்ன கோபால்ஜி?


புதிய வீடியோ