உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பட்டீஸ்வரர் கோவிலில் பணிபுரிய ஈ.வெ.ரா., பற்றி தெரிய வேண்டுமாம்; அறநிலையத்துறையின் உச்சகட்ட அபத்தம்

பட்டீஸ்வரர் கோவிலில் பணிபுரிய ஈ.வெ.ரா., பற்றி தெரிய வேண்டுமாம்; அறநிலையத்துறையின் உச்சகட்ட அபத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நேற்று நடந்த நேர்காணலில், 'ஈ.வெ.ரா. பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்' என, அறநிலையத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியது ஆன்மிகவாதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலைச்சிதம்பரம் என்றழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் புகழ் பெற்றது. சைவ சமயக்குறவர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடப்பட்ட புகழ் பெற்ற ஸ்தலம். இக்கோவிலில் இளநிலை எழுத்தர் இருவருக்கும், பதிவறை எழுத்தர் ஒருவருக்கும், சீட்டு விற்பனையாளர் ஒருவர், இரு துாய்மைப்பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நேர்காணல் நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=flv2kael&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று நடந்த நேர்காணலில், 375 பேர் பங்கேற்றனர். அவர்களிடம் கோவில் உதவி கமிஷனர் மற்றும் அதே அந்தஸ்திலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கேள்விகளை கேட்டனர். அப்போது, 'ஈ.வெ.ரா. பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்? ஈ.வெ.ரா.வின் பொன்மொழிகளில் உங்களை கவர்ந்தது எது? திராவிட மாடல் அரசு, தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு செய்த பணிகள் என்ன?' போன்ற கேள்விகளை கேட்டனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பங்கேற்ற பலரும் தடுமாறினர். நேர்காணலில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'ஆன்மிகத்துக்கும், ஈ.வெ.ரா.வுக்கும் என்ன சம்மந்தம்? கடவுள் இல்லை என்று சொன்னவரை பற்றி, வேலை தேடி வருவோரிடம் கேள்வி எழுப்பினால் எப்படி? கோவில் சம்மந்தமாகவோ, சைவ சமயம் சார்ந்த அல்லது ஆன்மிகம் சார்ந்த கேள்வி எழுப்பினால், நாங்கள் பதில் சொல்லியிருப்போம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

மணிமுருகன்
நவ 06, 2025 00:20

ஈவெரா தான் அந்தக் கோயிலில் சாகும் வரை பூஜை செய்தார் அதை மறைத்து அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை வொளம்பர ஊழல்கட்சி திமுகா கூட்டணி அவரிக்கு காசு கொடுத்து அவரை பகுதறிவு முற்போக்கு பொற்போக்கு மூடநம்பிொக்கை என்றெல்லாம் பேச சொல்லியது அவரும் காசுக்கு ஒப்பாரி அந்த பைய்யை ்ன்று வரை கட்டி காத்து வருகிறது ஊழல் பித்தலாட்ட அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி


R.MURALIKRISHNAN
நவ 05, 2025 22:10

கேள்வி கேட்டவனை சூலத்தால் அடிக்க வேண்டும். திருட்டு திராவிட களவாணிகளாக இருப்பார்கள் போல


MAHADEVAN NATARAJAN
நவ 05, 2025 20:21

பேய் ஆண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். நாத்திகர்களுக்கு ஓட்டு போட்ட இந்துக்களுக்கு சரியான பனிஷ்மென்ட். வெட்கக்கேடு


Natchimuthu Chithiraisamy
நவ 05, 2025 20:01

மத்திய அரசு ஆளும் இந்திய நாட்டில் தான் கோவை ஈஸ்வரம் கோவில் உள்ளது டெல்லி வந்து விளக்கம் சொல்லிவிட்டு பணிக்கு செல்ல வேண்டும் என்றால், இவர்கள் இலவசத்திக்காக ஆசைப்பட மாட்டார்கள். தண்டனை யை விட தன் குழந்தைகள் மௌனமாக சிரிக்கவேண்டும் இல்லை என்றால் கொன்றுவிடுவார்கள்.


kumaran
நவ 05, 2025 19:54

அப்துல் காதருக்கும அமாவாசைக்கு என்ன சம்பந்தம் இது மிகவும் நாம் யோசிக்க வேண்டிய கட்டாயம் திட்டமிட்டு நமது கலாச்சாரத்தை சீரழிக்க மிகப்பெரிய கூட்டம் அறமில்லா நிலையில் அறநிலையத்துறையில் இருக்கிறது, நமது மாண்பை குழிதோண்டி புதைக்க தயங்கமாட்டார்கள். ஹிந்துக்கள் ஹிந்துக்களாக இருங்கள்


Arun Kumar
நவ 05, 2025 18:36

இதுதாங்க code word.


SIVA
நவ 05, 2025 14:00

இவங்க தான் எதுவேமே செயலையே ....


Santhakumar Srinivasalu
நவ 05, 2025 13:33

கோவை பட்டீஸ்வரம் கோவிலுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் ?


Shekar
நவ 05, 2025 12:05

ஆமாங்க, எப்படியெல்லாம் இருக்ககூடாதுண்ணு தெரிஞ்சுக்க, அந்த ராமசாமியை பத்தி தெரிஞ்சாதானே புரியும்.


Anantharaman Srinivasan
நவ 05, 2025 12:01

பட்டீஸ்வரம் கோவில் நேர்காணலில் கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று கூறிய பெரியாரைப்பற்றி கூறுமாறு கேட்ட உதவி கமிஷனர் மற்றும் அதே அந்தஸ்திலுள்ள அறநிலையத்துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய நீதிமன்றம் மூலம் வழக்காட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை