உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 4,600 அடி உயரத்துக்கு வந்த முதல் வாகனம்: முதன்முறையாக டிராக்டரை பார்த்த கிராமம்

4,600 அடி உயரத்துக்கு வந்த முதல் வாகனம்: முதன்முறையாக டிராக்டரை பார்த்த கிராமம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஜஸ்தானின் ஷிரோஹி மாவட்டத்தில் உள்ள உத்ராஜ் என்ற மலைக்கிராம மக்கள், வாழ்க்கையில் முதன்முறையாக தங்கள் கிராமத்தில் டிராக்டரை பார்த்தனர். ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆரவல்லி மலைத்தொடரின் மவுண்ட் அபு மீது உத்ராஜ் என்ற மலைக்கிராமம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4,600 அடி உயரத்தில் இருக்கும் இந்த கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

சாலையே கிடையாது

அந்த மலை மீதே, 250 ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர். விவசாய பணிகளுக்கு மாடுகள் மற்றும் பாரம்பரிய கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட தலைநகர் ஷிரோஹியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் இருக்கும் இந்த கிராமத்துக்கு செல்ல வாகன வசதி இல்லை. காரணம், சாலையே கிடையாது. எல்லாமே நடைபயணம் தான். இந்த சூழலில், விவசாய பணிகளுக்காக டிராக்டர் வாங்க, கிராம மக்கள் தீர்மானித்தனர். ஆனால், சாலையே இல்லாமல் டிராக்டரை எப்படி கொண்டு வருவது என்ற சிக்கல் எழுந்தது. அவர்களுக்காக, டிராக்டர் நிறுவனம் ஒரு யோசனையை தெரிவித்தது. அதாவது, அபு சாலையில் உள்ள ஷோரூமில் இருந்து டிராக்டரை, உதிரி பாகங்களாக பிரித்தெடுத்து மலை கிராமத்துக்கு எடுத்துச் சென்று, அங்கு மீண்டும் டிராக்டரை பொருத்தி தருவது என முடிவானது. இதற்காக, மெக்கானிக்குகளையும் டிராக்டர் நிறுவனம் அனுப்பியது. அதன்படி, குரு ஷிகார் பகுதிக்கு இரண்டு டிராக்டர்களில், உதிரி பாகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

ஆடிப்பாடி கொண்டாட்டம்

அங்கிருந்து மொத்தம் 1,000 கிலோ எடை உடைய டிராக்டரின் உதிரி பாகங்களை, கிராம மக்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர். 6 கி.மீ., தொலைவுக்கு பாறைகள், அடர்ந்த காடுகள் நிறைந்த பாதை வழியாக எட்டு மணி நேரம் சுமந்த போதிலும், தங்கள் கிராமத்துக்கு புதிதாக டிராக்டர் வருவதால், அவர்களுக்கு சுமையே தெரியவில்லை. உத்ராஜ் கிராமத்துக்கு அனைத்து பாகங்களும் வந்து சேர்ந்ததும், மெக்கானிக்குகள் அவற்றை ஒன்று சேர்த்து, முழு டிராக்டராக்கினர். தங்கள் கிராமத்தின் புதிய வரவான டிராக்டரை, கிராம மக்கள் ஒன்று கூடி உற்சாகமாக வரவேற்று, மேளதாளம் முழங்க ஆடிப்பாடி கொண்டாடித் தீர்த்தனர். இந்த டிராக்டரை 60 குடும்பத்தினரும் பணம் வசூலித்து, 1.5 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து வாங்கியுள்ளனர். டிராக்டரின் மொத்த விலை 7 லட்சம் ரூபாய். மீதி பணம் கடனாக வழங்கப்பட்டுள்ளது. டிராக்டருக்கு டீசல், பழுதானால் சரி செய்வது என நடைமுறை சிக்கல்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே, குரு ஷிகாரில் இருந்து 200 லிட்டர் டிரம்மில் டீசலை நிரப்பி, கால்நடையாக சுமந்து எடுத்து வர கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். டிராக்டர் பழுதை சரி செய்ய, அவ்வப்போது மெக்கானிக்குகளை அனுப்புவதற்கு, டிராக்டர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. 'ஊர் கூடி தேர் இழுப்பது' போல, உத்ராஜ் ஊர் கூடி, டிராக்டரை இழுத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajesh Ponnambalam
மே 27, 2025 22:19

எனது கருத்து சிலருக்கு தவறாக தெரியலாம் என் மனதில் பட்டதை நான் இங்கு கூறுகிறேன் மகேந்திரா வாகன உரிமையாளர் செஸ் விளையாட்டில் பட்டம் வென்ற அவருக்கு கார் பரிசளித்தார் ஒரு கிராமமே சேர்ந்து டிராக்டர் வாங்க எவ்வளவு பாடுபட்டு இருக்கு என்பதை பதிவில் படித்து அறிந்து கொண்டேன் அந்நிறுவனம் கிராம மக்களுக்காக அதன் பாகங்களை சுமந்து சென்றனர் அதில் ஒருவர் சொன்னது போல ஹெலிகாப்டரில் அல்லது நேரடியாக கிராமத்திற்கு டெலிவரி செய்து இருந்தால் மன மகிழ்ச்சியாக இருந்திருக்கும் 250 ஏக்கர் விவசாயம் செய்யும் கிராமத்திற்கும் அங்கு வாழும் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் வருங்காலங்களில் கிராமத்திற்கு செல்ல பாதைகள் அமைய அல்லது ஆகாய மார்க்கமாக செல்ல வழிவகை செய்திட நல்லதே நடைபெறும் என இறைவனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்


MUTHUKUMAR C
மே 23, 2025 18:05

பல வருடங்களாக ஆண்ட காங்கிரஸ் ஒன்னும் செய்யல, இதுல மற்ற கட்சியை சொல்ல வந்து விட்டீர்கள்.


thewhistle blower1967
மே 23, 2025 16:59

கங்கனா ரெனவுத் அங்கு சென்று ஆடுவதாக இருந்திருந்தால் சங்கிகள் ஹெலிகாப்டர் கொடுத்து இருப்பார்கள் ..இது ஏழை விவசாயிகள் தானே மாடு மாறி மலை மேல் எடுத்து தான் செல்ல வேண்டும்..


MUTHUKUMAR C
மே 23, 2025 18:04

பல வருடமாக ஆண்ட காங்கிரஸ் ஒன்னும் முடியல, இதுல மற்ற கட்சியை குறை சொல்ல வந்து விட்டீர்கள்.


Arul Narayanan
மே 22, 2025 08:22

ஒரு வழியாக அந்த கிராமத்தார்களை கடனாளிகள் ஆக்கி விட்டார்கள்.


hariharan
மே 22, 2025 06:13

அம்ரித் பாரத் திட்டத்தில் இந்த மலைக்கிராமங்களுக்கு சுதந்திரம் கிடைத்தும் சாலை வசதி இல்லையா? அப்படியென்றால் அந்த மாவட்ட ஆட்சியர், தொகுதி MLA, MP எதற்கு இருக்கிறார்கள்? அங்கு அரசு செயல்படுகிறதா? ஸப் கே ஸாத், ஸப் கே விகாஸ் எல்லாம் சும்மா உருட்டு.


Yes your honor
மே 22, 2025 10:48

ஆம் உண்மைதான் இப்பொழுது தான் ஒரு சிறிய விடியல் அங்கு பிறந்துள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக ஆட்சி புரிந்த காங்கிரஸ் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை என்பதையே இது குறிக்கிறது.


ranjani
மே 22, 2025 01:22

Why don't somebody help to use a helicopter to shift materials and assembled tractor there.


visu
மே 22, 2025 18:16

the cost matters


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை