உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாளின் மகத்துவம்: ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

சென்னை: 'மருத்துவமனையில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பிய நாள், ஜோதிட கணக்குப்படி. அவருக்கு மறு பிறப்புக்குரிய நாள்' என, திருக்கோவிலுார் ஜோதிடர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவர் ஜாதகப்படி, ஏப்ரல், 26 முதல், கேது ஜென்ம ராசியில் சஞ்சரித்து வருகிறார். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிக்கும் போது, உடல் ரீதியாக, பதவி வழியாக, சில நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும் என்பது பொதுவான விதி.அதன் காரணமாகவே, ஏப்., 26 முதல், அவருடைய ராசிக்குள், கேது சஞ்சரிக்கும் நாள் வரை, அவரது உடல் நிலையில் சங்கடம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என்பதை, அனைத்து ஜோதிடர்களும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்த கேதுவுடன், கடந்த மாதம் ரத்தக்காரகனான செவ்வாயும் இணைய, உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக இதயத்தில் சங்கடம். ரத்த ஓட்டத்தில் பிரச்னை ஏற்பட, அப்பல்லோ மருத்துவ மனைக்கு சென்றார்.அங்கு சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். அந்த நேரத்தில் ராசிக்குள் சஞ்சரித்து வரும் செவ்வாய், புதன்கிழமை முதல் கன்னி ராசிக்கு செல்கிறார். அதனால், இதுவரை இருந்த பாதிப்பு குறைய ஆரம்பிக்கும்.நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பியது, ஜோதிட கணக்குப்படி அவருக்கு மறுபிறப்பு நாளாகும். அதாவது, நேற்று முன்தினம் மாலை மகம் நட்சத்திரம் முடிந்து பூரம் நட்சத்திரம் துவங்கியது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர், ஒரு கண்டத்தை சந்தித்து, அதே பூரம் நட்சத்திரத்தில் வெளிவருவது என்பது, மறு பிறப்பாகவே கருதப்படும். இதை அறிந்து சரியான நேரத்தில், முதல்வர் வீடு திரும்பி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Bhakt
ஜூலை 29, 2025 23:20

அது தான் வாய்மையின் மகத்துவம்.


MAHADEVAN NATARAJAN
ஜூலை 29, 2025 22:45

கேடுகெட்ட பயலுவ....


sankar
ஜூலை 29, 2025 21:38

இப்படியும் ஒரு ஜால்ராவா- பிடி இருனூறும் குவாட்டரும்


சண்முகம்
ஜூலை 29, 2025 20:15

எல்லாம் அந்த துர்க்கையின் செயல்.


தமிழ்வேள்
ஜூலை 29, 2025 20:00

செந்தில் பாலாஜி டைப் வைத்தியம் மட்டுமே அப்போலோவில் நடந்தது.. பேஸ்மேக்கர் பொருத்தும் சர்ஜரி ஆஞ்சியோகிராம் நடந்த ஒரு நோயாளி படு கேஷூவலாக ஆஸ்பத்திரியில் ஆஃபீஸ் நடத்தவோ ரீல்ஸ் போடவோ இயலாது.. யாருக்கு காது குத்துகிறது திமுக கும்பல்? இதற்கு ஒரு ஜோசியர் பலன் சொல்லுவது கேவலமான காமெடி..மூளையை கழற்றி அடமானம் வைத்த திராவிட கும்பல் வேண்டுமானால் இந்த அசிங்கமான டிராமாவை நம்பலாம்.....


மண்ணாந்தை
ஜூலை 29, 2025 19:32

நம்ம பரணி சொல்றாப்ல பார்த்தா, ஜென்ம நட்சத்திரத்துல வீட்டுக்கு வந்தா மறுபிறப்பு. அப்படிப் பார்த்தா 27 நாளைக்கு ஒருக்கா வீட்டுக்கு வெளிய போயிட்டு வந்து மறு ஜென்மம் எடுத்துக்கலாம். சரி. இந்த மறு பிறப்புக்கு ஜாதகம் போட்டாச்சா?


Gopalan
ஜூலை 29, 2025 19:20

ஊருக்கு தான் உபதேசம் மூட நம்பிக்கை என்று. பூஜை புனஸ்காரம் எல்லாம் நடக்குது முதல் அமைச்சரின் வீட்டில். பாவம் திமுக தொண்டர்கள் மிகவும் குழம்பி இருக்கும் அவல நிலை. இப்போது ஜோஸியத்தின் மூட நம்பிக்கை வேறு. முதல்வர் வீட்டுக்கு திரும்புவது ஜோஸியத்தின் கால கட்டாயமும் நிர்வகிக்கப்பட்டுள்ளது. பாவம் தொண்டர்கள் மற்றும் தலைவர்


JeevaKiran
ஜூலை 29, 2025 19:01

இதை அந்த ஜோசியர் அவர் ஆஸ்பத்திரியில் இருக்கும் போதே சொல்லியிருக்கனுமே? இப்போ ஏன் சொல்றார்?


Jagan (Proud Sangi )
ஜூலை 29, 2025 21:36

டிஸ்சார்ஜ் நேரம் நாள் குறித்து கொடுத்ததே அவர்தான். சொல்லி ரெண்டு நாள் இருக்கும்


Rajasekar Jayaraman
ஜூலை 29, 2025 18:24

பகுத்தறிவு முற்றிய நேரம்.


Bharathi
ஜூலை 29, 2025 16:23

இவரு எப்பங்க சொந்தமா இப்படியெல்லாம் சிந்திச்சி இருக்கார். மக்கள் பணத்தை நாட்டை ஆட்டைய போடறதெல்லாம் மாப்பிள்ளை டைரக்ஷன், ஜோசியம் பரிகாரமெல்லாம் வூட்டுக்காரம்மா உத்தரவு.


முக்கிய வீடியோ