உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பி.எம்.ஸ்ரீ., பெயர்தான் பிரச்னையாம்! திட்டத்தை தமிழக அரசு மறுப்பதற்கு பின்னணி இதுதான்

பி.எம்.ஸ்ரீ., பெயர்தான் பிரச்னையாம்! திட்டத்தை தமிழக அரசு மறுப்பதற்கு பின்னணி இதுதான்

'சி.பி.எஸ்.இ.,யை விட அதிக தரத்தில் இலவச கல்வி வழங்க முன்வந்தால், அதில் கூட அரசியல் செய்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது முக்கியமில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kade3qs2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் எங்கள், 'லேபிள்' இருக்க வேண்டும் என, அரசியல் கட்சிகள் அடம்பிடிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் குற்றம்சாட்டியுள்ளார்.இதனாலேயே, பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளை, தமிழக அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதாக சாடியுள்ளார்.'பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில், தமிழக அரசு கையொப்பம் இடாததால், 'சமக்ர சிக்ஷா' நிதி வழங்க முடியாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இல்லம் தேடிக் கல்வி

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம் எனக்கூறும் தமிழக அரசு, அதன் ஒரு பகுதியான, 'இல்லம் தேடி கல்வி; எண்ணும் எழுத்தும்; ஹைடெக் லேப்' உள்ளிட்டவற்றை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் மாதிரிக் பள்ளிகளை உருவாக்கும், பி.எம்.ஸ்ரீ., திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததால் சிக்கல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற மாதிரிப் பள்ளிகளுக்கு, தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், பிரதமர் பெயர் வைக்க வேண்டும் என்ற காரணத்தால், இதை மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, ஓய்வு பெற்ற, மாவட்டக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது:எஸ்.எஸ்.ஏ., எனும் அனைவருக்கும் கல்வி இயக்கம், 8ம் வகுப்பு வரை எல்லோருக்கும் கல்வி வழங்கவும், ஆர்.எம்.எஸ்.ஏ., எனும் இடைநிலை கல்வி இயக்கம், 9, 10ம் வகுப்புகளை மேம்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டது. இவற்றை இணைத்து, பிளஸ் 2 வரை தரமான கல்வி வழங்கவும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும், 'சமக்ர சிக்ஷா அபியான்' எனும் ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் அமல்படுத்தப்பட்டது.

நவோதயா பள்ளிகள்

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2022ல், பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாட்டில், 14,500 பள்ளிகள் உருவாக்க, 27,360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பள்ளிகள், கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளை போன்று, நேரடியாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல், உட்கட்டமைப்பை உருவாக்கிய பின், பள்ளி நிர்வாகத்தை மாநில அரசுகளே நிர்வகிக்கும்படி விதிமுறைகள் உள்ளன.இதேபோன்ற கட்டமைப்பில், 15 ஆண்டுகளுக்கு முன், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழகத்திலும், 44 மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கும், பி.எம்.ஸ்ரீ., திட்ட பள்ளிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், பள்ளி பெயரில், 'பி.எம்.ஸ்ரீ' என இருக்க வேண்டும் என்பதுதான்.இப்பள்ளியில் தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களான, மும்மொழிக் கொள்கை, 3, 5, 8ம் வகுப்புகளில் மதிப்பீடு செய்தல், பிளஸ் 2 வகுப்பில் மட்டும் பொதுத்தேர்வு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு, தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும். அருகே உள்ள பள்ளிகளும் பயன்படுத்திக்கொள்ள ஆய்வகம் உள்ளிட்ட தரமான கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.மும்மொழியில், 'இந்தி கட்டாயம் அல்ல' என, மத்திய அரசு அறிவித்த பின், இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த தமிழக அரசு, அதற்குப் பின் எதற்காக பின்வாங்கியது என தெரியவில்லை. பிரதமர் பெயரில், தரமான கல்வியை இலவசமாக வழங்கினால், அதன் பெயர், புகழ், பா.ஜ.,வுக்கு செல்லும் என நினைக்கின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது.'ஹைடெக்' கட்டமைப்புடன், தரமான கல்வி வழங்கும் பள்ளியை தடுப்பது ஏன் என புரியவில்லை. இதற்கு காரணமாக, மும்மொழி படிப்பதை, தமிழக மக்கள் யாரும் விரும்பவில்லை எனும் தோற்றத்தை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அப்படி இருப்பின், மும்மொழிக் கல்வி தரும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு வரவேற்பு இல்லாமல் போய் இருக்க வேண்டும். மாறாக தமிழகத்தில் ஆண்டுதோறும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. பல லட்சம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்தாமல் இன்று சி.பி.எஸ்.இ., படிக்க முடியாது. அதைவிட அதிக தரத்தில் இலவசக் கல்வி வழங்க முன்வந்தால், அதில் கூட அரசியல் செய்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது முக்கியமில்லை. அதில் எங்கள், 'லேபிள்' இருக்க வேண்டும் என, தற்போதைய ஆளுங் கட்சி அடம் பிடிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

திரிப்பு

தேசிய கல்விக் கொள்கையில், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு, 'அசஸ்மென்ட்' எனும் மதிப்பீடு செய்யப்படுகிறது. அதாவது தேர்வு நடத்தி, 'பெயில்' செய்வது கிடையாது. அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்து அதற்கேற்ப பயிற்சி அளிப்பது. தற்போதுகூட, 8ம் வகுப்பு வரை, அனைத்து வகுப்புகளுக்கும் தேசிய அளவில் கற்றல் அடைவு மதிப்பீடு செய்யப்பட்டு தான் வருகிறது. இந்த மதிப்பீட்டை, பொதுத்தேர்வு என திரித்து பேசுகின்றனர்.

பி.எம்.ஸ்ரீ., பள்ளியில் என்னென்ன வசதிகள்?

இந்த பள்ளிகளில் கற்பித்தல் பணியை, 4 ஆக பிரித்துள்ளனர். அதன்படி அடிப்படைக் கல்வியாக கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., ஒன்று, இரண்டாம் வகுப்பு பாடங்கள் இருக்கும். 3 முதல், 5ம் வகுப்புகளுக்கு, விளையாட்டு அடிப்படையில் கல்வி முறை இருக்கும். 6 முதல், 8ம் வகுப்புக்கு, 'ஸ்மார்ட் லேர்னிங்'. இதில், 'கோடிங்' உள்ளிட்ட கணினி திறன்கள் வளர்க்கப்படும். 9 முதல் பிளஸ் 2 வரை, தொழிற்கல்வி, விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து கற்கும் வசதி இருக்கும். இந்த கல்வி முறைகளுக்கேற்ப கட்டமைப்பு வசதிகள், அறிவியல், கணினி ஆய்வக வசதி, நுாலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், கலைத்திறன்களை வளர்க்கும் வசதிகளோடு நீர் பாதுகாப்பு, கழிவு மறு சுழற்சி, மின்சார கட்டமைப்பு, இயற்கை வாழ்க்கை முறைக்கேற்ற பசுமைக் பள்ளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Bala
மார் 12, 2025 22:23

எனக்குகூடத்தான் ஸ்டாலின் என்ற ரஷ்ய பெயர் முதல்வருக்கு இருப்பதில் சங்கடம் இருக்கிறது. தமிழில் பெயர் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. தினம் டிவி இல் பார்க்கும் போது கேட்கும்போது நாம் என்ன ரஷ்யாவிலேயா இருக்கிறோம் ? ஒரு தமிழ் பெயர்கூட கிடைக்கவில்லையா என்றெல்லாம் தோன்றுகிறது. இதுதான் திமுக தமிழ் வளர்த்த லட்சணமா ? முதல்வர் அவர்கள் தன்னுடைய பெயரை தமிழில் மாற்றிக்கொள்வாரா ? ஏன் தமிழ் பிடிக்கவில்லையா ?


Venkatasubramanian krishnamurthy
பிப் 21, 2025 13:25

பத்மஸ்ரீயையும் தமிழ்ப்படுத்தி போட்டுக் கொள்ளலாம்தான். ஆனால் அதை தாமரைத்திரு என ஆக்கினால் பாஜகவின் நபரென போய்விடுமோவென மொழி மாற்றாமல் விருதை அனுபவிக்கிறார்கள்.


Kareem Gani
பிப் 21, 2025 07:43

மும்மொழிக் கொக்கையையும், தேசிய கல்விக் கொள்கை 2020ஐயும், ஹிந்தியையும் திணிக்காமல் எந்த பெயரில் திட்டம் வந்தாலும் எங்கள் தமிழ்நாட்டுக்கும், எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏற்புடையதே...


நிக்கோல்தாம்சன்
பிப் 22, 2025 05:54

கனி பாய் நம்ம பெயரிலேயே ஹிந்தி இருக்கே ? தமிழுக்கு மாற்ற உதவி தேவையா


வேலுதம்பி
பிப் 20, 2025 16:32

திராவிஷ திருட்டு கும்பலால் ஸ்டிக்கர் ஒட்டி , மோசடி செய்யப்படும் எல்லா மத்திய அரசு திட்டத்துக்கும் மேலும் நிதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்


c.mohanraj raj
பிப் 20, 2025 13:59

இன்னும் ஒரு வருடம் தான் அடுத்த வருடம் நிச்சயம் இவர்கள் ஆட்சி இருக்காது அப்பொழுது மூன்று மொழி என்ன ஐந்து மொழி கூட படிக்க வைத்துக் கொள்ளலாம்


Kareem Gani
பிப் 21, 2025 07:45

பகல் கனவு


venugopal s
பிப் 20, 2025 11:59

காசா பணமா? சும்மா ஆளாளுக்கு வாய்க்கு வந்த காரணங்களை அடிச்சு விடுங்கள், யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை!


venugopal s
பிப் 20, 2025 11:55

தமிழகத்தில் உள்ள நாற்பத்தி ஒன்பது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழாசிரியர் நியமனம் செய்யப்படவில்லை என்று ஆர் டி ஐ மூலம் மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது. கே வி பள்ளிகளில் மூன்றாவது மொழியாக மாநில மொழி கற்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று பொய்யாக பிரசாரம் மட்டும் செய்து விட்டு அதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.காரணம் கேட்டால் ஒவ்வொரு வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களில் குறைந்தது இருபது பேர் மாநில மொழி கற்க விருப்பம் தெரிவித்தால் மட்டுமே இதை நடைமுறைப் படுத்தலாம் என்றும் சட்டம் போட்டுள்ளனர். ஆக மொத்தத்தில் தமிழக கே வி பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் வெறும் பேப்பரில் மட்டுமே உள்ளது.இது தான் மத்திய பாஜக அரசின் உண்மையான முகம்.கபட நாடகம் ஆடுகின்றனர்.


ஆரூர் ரங்
பிப் 20, 2025 14:35

தமிழக அரசுப் பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்றாண்டு கூட ஏராளமான மாணவர்கள் தமிழில் தோல்வி. ஊரைக் குறை கூறும் முன் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.


ஆரூர் ரங்
பிப் 20, 2025 09:45

பத்மஸ்ரீ கொடுத்தா ஆட்சேபிக்காமல் போட்டு கொள்கிறார்கள். ஆனா பிஎம்ஸ்ரீ பெயர்தான் பிரச்சனை. 21 ம் பக்க இயல்புதான் இந்த மனநிலைக்குக் காரணம்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 20, 2025 09:42

நீங்களும் மும்மொழி கொள்கையை ஏற்க்க வேண்டாம், அவர்களும் நிதியை தரமாட்டார்கள்....தகுதியே இல்லாத அரசு பள்ளிகளில் என் மக்களும் படிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் புலங்காகிதம் அடைந்து.. பிள்ளைகளை உங்களை போலவே கொத்தடிமை ஆக்கி அவர்கள் வாழ்வை நாசமாக்குங்கள்....மும்மொழி கொள்கையை வேண்டாம் என்று சொல்லுபவர் பிள்ளைகள் ஐந்து மொழி பாடங்களை படித்து முதலாளிகளாய் மாறட்டும்....தமிழகம் உருப்படும்....!!!


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 20, 2025 09:08

இந்த திராவிட மாடல் அரசுகள் அதிமுக சரி திமுகவும் சரி மத்திய ஒன்றிய அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தை தான் இங்கு முதலமைச்சர் காப்பீடு திட்டம் என்று கொடுத்து கொண்டு உள்ளார்கள். இந்த முதலமைச்சர் காப்பீடு திட்டம் முழுக்க முழுக்க மத்திய ஒன்றிய அரசின் பணத்தின் மூலமாகவே நடக்கிறது. தற்போது முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டையில் சிஎம்கேடி மற்றும் பிஎம்ஜெவொய் என்றே குறிப்பிட்டு கொடுக்கிறார்கள். கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று தமிழகத்தை பூர்வீகமாக இல்லாமல் சமீபத்தில் தமிழகத்தில் வந்து குடியேறியவர்கள் நல்ல சிகப்பு நிறமாகவும் இருப்பவர்களுக்கும் கொஞ்சம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கும் போட்டி போட்டு கொண்டு திமுக அதிமுக உள்ளாட்சி நிர்வாகிகள் கொடுக்கிறார்களே அது கூட பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து ரூபாய் இரண்டே முக்கால் இலட்சம் பெற்று கூட எழுபத்தி ஐந்தாயிரம் போட்டு மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ஆக கொடுக்கிறார்கள். அது தற்போது கட்டுபடி ஆகவில்லை என்று தான் நமது மாண்புமிகு மிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றறை இலட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். இது போல் எல்லா நல திட்டங்களையும் இவர்கள் மத்திய அரசின் நிதியிலே செலவு செய்கிறார்கள். அப்புறம் இந்த தமிழக அரசின் நிதி எங்கே செல்கிறது. அமலாக்க துறை விரிவான விசாரணை நடத்தி கண்டுபிடித்து இந்த திமுக அதிமுக இரட்டை இரயில் என்ஜின் தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
பிப் 20, 2025 11:20

அய்யோ ஜெயச்சந்திரன் அவர்களே மறந்து போய் இரண்டு இடத்தில் மத்திய அரசு என்று குறிப்பிட்டு மாபெரும் தவறை செய்து விட்டீர்கள்....அது மத்திய ஒன்றிய அரசு என்றல்லவா இருக்க வேண்டும்....இது நம் கொள்கைக்கு இழுக்கு அல்லவா ??? பிறகு நம்மை பாஜகவின் B டீம் என்று சொல்ல வாய்ப்பு கொடுக்காதீர்கள்....!!!


சமீபத்திய செய்தி