உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர் நீக்கணும்

வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர் நீக்கணும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. இது குறித்து, ஒவ்வொரு முறையும், தேர்தல் கமிஷனிடம், அ.தி.மு.க., சார்பில் புகார் தெரிவித்து வருகிறோம். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்க, இறப்பு சான்றிதழ்களை, அவர்களை சார்ந்தோர் அல்லது அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் கொடுக்க வேண்டும் என்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளே, இறப்பு சான்றிதழ் அடிப்படையில், இறந்தவர்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாக அ.தி.மு.க., தொடர்ந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'இரட்டை பதிவு, போலி வாக்காளர்கள் போன்றோரை நீக்கி, 100 சதவீதம் முழுமையான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதை அமல்படுத்தும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும்.- வேலுமணி, முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஏப் 30, 2025 06:54

எவன் செத்தாகும் இறப்பைப் பதிவு செய்யும்போதே சர்க்கார் பட்டியலிலிருந்தும் நீக்கப் படும்படியான ஒருங்கிணைப்பு வேண்டும். அதேபோல ரேஷன் கார்டு, பென்சன், வீட்டு உரிமை, போன்றவற்றிலிருந்தும் நீக்கப்பட வேண்டும். நம்ம தத்திகளுக்கு இதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு? ஒன்றியன், விடியல் எல்லாம் அரசியல், ஆட்டையப் போடத்தான் லாயக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை