உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 10 ஆண்டாக தகுதியானோருக்கு பத்ம விருது: கவர்னர் பெருமிதம்

10 ஆண்டாக தகுதியானோருக்கு பத்ம விருது: கவர்னர் பெருமிதம்

சென்னை: ''கடந்த, 10 ஆண்டு களாக, தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் கிடைத்து வருகின்றன,'' என கவர்னர் ரவி பெருமையாக கூறினார். மத்திய அரசு, 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை சமீபத்தில் அறிவித்தது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த, 13 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்தன.அவர்களுக்கான பாராட்டு விழா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. விருதுக்கு தேர்வானவர்களுக்கு, கவர்னர் ரவி சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.பத்ம விருதுகள் பெற உள்ள, 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திர குமார், குருவாயூர் துரை, தாமோதரன், ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், வேலு ஆசான், ராதாகிருஷ்ணா தேவசேனாபதி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.நடிகர் அஜித்குமார் பங்கேற்கவில்லை; கிரிக்கெட் வீரர் அஸ்வின் சார்பாக, அவரது பெற்றோர் பங்கேற்றனர். விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:பத்ம விருது பெறுவோரோடு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. விருதுக்கு தேர்வாகி உள்ள ஒவ்வொருவரும், தாங்கள் சார்ந்த துறைகளுக்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ளனர். அவர்கள் கடினமாக உழைத்ததால், இந்த இடத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த விருது பெறுபவர்களால், நம் நாடே பெருமை அடைகிறது. விருது பெற உள்ளவர்களின் பங்களிப்பு, நாட்டுக்கும், மக்களுக்கும், பெருமை அளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக பத்ம விருதுகள் தகுதியான நபர்களுக்கு கிடைத்து வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பத்ம விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படைத் தன்மையுடன், விருதுகளை வழங்கி வருகிறது.அரசு சாராத நடுவர் குழு வாயிலாக, விருதுகள் வழங்கப்படுவது பெருமைக்குரியது. இதனால், சமூகத்தில் வெளியில் தெரியாமல், சிறப்பாக சேவை செய்பவர்களை, மத்திய அரசு தேடிக் கண்டறிந்து, பத்ம விருதுகளை வழங்க முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

'நெறிமுறையை பின்பற்றுபவர்'

ஆர்.லட்சுமிபதிக்கு பாராட்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, 'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி குறித்து, கவர்னர் ரவி கூறியதாவது:நிகழ்காலத்தில், வர்த்தக பொருளாதார உலகில், எப்படியும் அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனோபாவம் மேலோங்கி இருக்கிறது. அதற்காக, சிலர் நெறிமுறைகளையும், மதிப்புகளையும் புறக்கணிக்கின்றனர். ஆனால், 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர். லட்சுமிபதி அப்படி செய்யவில்லை. மக்கள் உண்மையை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், எதற்கும் ஒரு போதும், தன் பத்திரிகை நெறிமுறையை துறக்கவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்வித்து, விளம்பரங்கள் பெற வேண்டும் என்று நினைக்காமல், மக்களிடம் உண்மையை முன்வைப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நேர்மையான பத்திரிகையைச் சேர்ந்த அவரை நாம் பெருமையாக நினைக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் ரவி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அன்பே சிவம்
பிப் 16, 2025 15:15

1).பத்ம விருது தினமலர் நாளிதழில் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 2). பத்ம விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்


venugopal s
பிப் 16, 2025 11:20

கடந்த பத்தாண்டுகளாகத் தான் தகுதியற்றவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது!


கிஜன்
பிப் 16, 2025 10:58

சில தகுதியானோர் விருதை வாங்க வர மறுக்கிறார்கள் ....


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 16, 2025 09:55

தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி அவர்களுக்கு கிடைத்த இவ்விருது, என்னைப்போல ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தினமலர் பத்திரிக்கை வாசிக்கும் வாசகனுக்கு பெருமை சேர்க்கிறது


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 16, 2025 09:05

உண்மை. இந்நேரம் எங்கள் தூய தமிழ்ப் பெயரார் ஜெகத் ரட்சகனார் மைய ஒன்றிய அரசில் இணை அல்லது துணை அமைச்சராக இருந்திருந்தால் எங்கள் டயமண்டு பேர்ல் க்கு பாரத ரத்னா சலுகை விலையில் கிடைத்திருக்குமே


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 16, 2025 08:58

ஆளுநர் சொல்வது ஓரளவுக்கு உண்மையே. அதே நேரம் அடையாறு புற்று நோய் மருத்துவமனை டாக்டர் சாந்தா அவர்களுக்கு இரண்டு முறை சிபாரிசு செய்தும் பாரத ரத்னா விருது கிடைக்கவில்லையே


பாமரன்
பிப் 16, 2025 08:51

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்...


raja
பிப் 16, 2025 07:22

ஆனா எங்க திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை மாடல் அரசு பெண்களை அண்டா குடம் என்று கிண்டல் செய்பவனுக்கு கலைமாமணி விருது கொடுத்து பாடநூல் தலைவர் பதவி கொடுத்து அழகு பார்க்கும்...


KR india
பிப் 16, 2025 07:16

பத்ம விருது பெரும் தினமலர் நாளிதழ் நிர்வாக ஆசிரியர் டாக்டர். லட்சுமிபதி அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் டாக்டர். லட்சுமிபதி ஐயாவுக்கு வழங்கப்படும் "பத்ம" விருதால், அந்த விருதே புகழ் பெறுகிறது என்று கூறினால் அது மிகையல்ல தமிழகத்தில், ஏழை முதல் பணக்காரன் வரை அனைத்து தரப்பு மக்களும், காலையில் முதலில் செய்தியை படிக்க, ஆர்வத்துடன் தேடுவது "தினமலர்" பத்திரிக்கையை தான். முன்பு ஒரு முறை, மறைந்த தி.மு.க தலைவர் திரு.கருணாநிதி அவர்களால், தினமலர் நிறுவனர் ராம சுப்பு ஐயர் அவர்களுக்கு நினைவு தபால் தலை வழங்கி கவுரவிக்கும் விழாவில், திரு.கருணாநிதி அவர்கள், தினமலர் பத்திரிக்கை பற்றி கூறியதை நினைவு கூறுகிறேன். "தினமலர் தி.மு.க வை தாக்கியும், எழுதி உள்ளது. தாங்கியும் எழுதி உள்ளது. தினந்தோறும் அதிகாலையில், தினமலர் படிப்பதன் மூலம், மகிழ்ச்சியும், அறிவும் பெறுகிறேன்// என்று அந்த விழாவில், பாராட்டி இருந்தார். தற்போது, கவர்னர் பாராட்டும் பொருத்தமாக உள்ளது. // அதிகாரத்தில் இருப்பவர்களை மகிழ்வித்து, விளம்பரங்கள் பெற வேண்டும் என்று நினைக்காமல், மக்களிடம் உண்மையை முன்வைப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நேர்மையான பத்திரிகையைச் சேர்ந்த அவரை நாம் பெருமையாக நினைக்க வேண்டும்.// வாழ்க தினமலர் செய்தி சேவை


Kasimani Baskaran
பிப் 16, 2025 06:44

வாழ்த்துகள்


முக்கிய வீடியோ