உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை

முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை

சென்னை: “தமிழக நன்மைக்காக ஓரணியில் திரள்வோம் என்றால், நாங்களும் முதல்வர் பக்கம் இருக்க தயார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. காவல் துறையை, தலைமை செயலகத்தில் இருந்து யாரோ இயக்குகின்றனர்.திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மீதான புகாரில், வழக்குப்பதிவு செய்யாமல், போலீசார் அவரை அடித்து கொலை செய்துள்ளனர். முதல்வர் ஈசியாக 'ஸாரி' என்று சொல்கிறார்.புகார் கொடுத்த நிகிதாவுக்கு ஆதரவாக, தலைமை செயலகத்தில் இருந்து போன் செய்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜித்குமாரின் குடும்பத்திற்கு, குறைந்தது 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்த, துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட ஜெயராஜ் - பெனிக்ஸ் வழக்கில், இன்னும் தீர்வு வரவில்லை. அண்ணா பல்கலை வழக்கில் ஞானசேகரனுக்கு, ஐந்து மாதங்களுக்குள் தீர்ப்பு வந்துவிட்டது. சாத்தான்குளம் வழக்கை தாமதம் செய்வது ஏன்? இதை எல்லாமல் மறைக்கவே, ஓரணியில் திரள்வோம் என்று பிரசாரம் செய்கின்றனர். தமிழக நன்மைக்காக ஓரணியில் திரள்வோம் என்றால், நாங்களும் முதல்வர் பக்கம் இருக்க தயார். தமிழக வளர்ச்சிக்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் முதல்வர் எதுவுமே செய்யாததைத்தான் குறை சொல்கிறோம். இனி எல்லா போராட்டங்களிலும் அ.தி.மு.க., - பா.ஜ., இணைந்து செயல்படும். கூட்டணிக்கு விஜய் வருவது குறித்து கருத்து சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ளன; நல்லதே நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூலை 05, 2025 21:27

ஆம், உண்மை. தமிழகத்தில் காவல் துறை தடம்புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது என்று ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் அவர்களே குற்றம் சாட்டி உள்ளார்.


Barakat Ali
ஜூலை 05, 2025 16:06

அண்ணாச்சி ...... மொதல்ல முதல்வரே முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்காரா ன்னு உறுதிப்படுத்துங்க ....


Sridhar
ஜூலை 05, 2025 14:02

எதோ அந்த ஆளு யோக்கியன் போலவும் போலீஸ்க்காரங்கதான் தவறு செஞ்சாங்கங்கற மாதிரி பேசறாரு? இவுரு அரசியல்வாதியா இல்ல அப்பாவியா?


beindian
ஜூலை 05, 2025 11:34

அதான் தெரியுமே ஏவல்துறையை யார் வைத்திருக்கிறதென்று அன்றே அண்ணாமலை சொல்லவில்லையா? காவல் மற்றும் மீடியாவை நாம் கைக்குள் கொண்டு வரவேண்டும் என்று.


venugopal s
ஜூலை 05, 2025 09:31

நீங்கள் முதலில் அந்த காஷ்மீர் கொலைகாரர்கள் நான்கு பேரையும் பிடித்து விட்டு வந்து தமிழக அரசை குறை கூறுங்கள்!


Padmasridharan
ஜூலை 05, 2025 06:51

சாமியோவ், காவல் துறையில் இருப்பவர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை. மக்களிடையே அமைதியை காக்க அவர்களுக்கு கொடுத்த வேலைகள் என்னென்ன ஆனால் அவர்கள் மாமூல் வசூலிப்பதற்காக மக்களுக்கு எப்பெடிப்படி எந்தெந்த விதமாக பாதகங்கள் செய்யவேண்டுமென்று நன்கு அறிவர். எல்லா குற்றங்களுக்கும் கட்சியை குறை கூறிக்கொண்டிருப்பது மற்ற கட்சிகளுக்கு அவலப்பெயர் உண்டாக்குகிறது. யார் நினைத்தாலும் நடுவில் இறக்க முடியாத கட்சிக்கு வெறுமனே பேசிக்கொண்டிருக்கிறார்கள்


சமீபத்திய செய்தி