உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., எதிர் த.வெ.க., என மாறிய அரசியல் களம்; இந்த நிலைக்கு தள்ளியது அ.தி.மு.க., நிலைப்பாடா?

தி.மு.க., எதிர் த.வெ.க., என மாறிய அரசியல் களம்; இந்த நிலைக்கு தள்ளியது அ.தி.மு.க., நிலைப்பாடா?

தமிழக தேர்தல் களம், 'தி.மு.க., எதிர் த.வெ.க.,' என மாறியுள்ளது. அதற்கு அ.தி.மு.க.,வின் நிலைப்பாடே காரணம் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ffgwcjlc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 1957 முதல் 1977 வரை, 20 ஆண்டுகள், தமிழக தேர்தல் களம், 'தி.மு.க., எதிர் காங்கிரஸ்' என, இருந்தது. தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவங்கிய பின், கடந்த 1977 முதல் 48 ஆண்டுகளாக, தமிழக அரசியல் களம் என்பது, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையிலான போட்டி களமாகவே இருந்து வருகிறது. கடந்த 1989ல் நான்கு முனை போட்டியில், 12 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியை தி.மு.க., கைப்பற்றினாலும், அ.தி.மு.க.,வின் ஒரு பிரிவான ஜெயலலிதா அணிதான் பிரதான எதிர்க்கட்சியானது. கடந்த 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2019, 2024 லோக்சபா, 2021 சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் என, அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. இதனால், அக்கட்சி தொடர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் தனியாக பிரிந்திருப்பதும், அக்கட்சியின் வெற்றியை கேள்விக்குறியாக்கி உள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் தனி அணி அமைத்து, தோல்வி அடைந்த பழனிசாமி, வரும் சட்டசபை தேர்தலுக்காக, கடந்த ஏப்ரல் 11ல், பா.ஜ.,வுடன் கூட்டணி அறிவித்தார். ஆனால், ஐந்து மாதங்கள் கடந்தும், இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் சேரவில்லை. அதே நேரத்தில், 10 கட்சிகள் கொண்ட தி.மு.க., கூட்டணி அப்படியே உள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தனது பிரசார பயணத்தை துவங்கியுள்ளார். இதுவரை திருச்சி, அரியலுார், நாகை, திருவாரூர் ஆகிய இடங்களுக்கு சென்ற அவருக்கு, திரண்ட மக்கள் கூட்டம், மற்ற கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு கூடும் கூட்டம், ஓட்டாக மாறினால், அவர் கூறுவது போல, வரும் 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என, பலரும் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்ட் 21ல், மதுரையில் நடந்த த.வெ.க., மாநாட்டில் பேசிய விஜய், 'வரும் தேர்தலில் தி.மு.க., -- த.வெ.க., இடையே தான் போட்டி' என்றார். கடந்த 20ம் தேதி, நாகை கூட்டத்திலும், இதையே மீண்டும் தெரிவித்தார். நாகை, திருவாரூர் கூட்டங்களில் பேசிய விஜய், 'வெளிநாட்டு முதலீடா; வெளிநாட்டில் முதலீடா?' என, முதல்வர் ஸ்டாலினை நேரடியாகவே விமர்சித்தார். செல்லும் இடங்களில் எல்லாம், ஸ்டாலின், அவரது குடும்பம் மற்றும் தி.மு.க., அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விஜய் விமர்சிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை, விஜய் கருத்துக்களுக்கு, பதில் அளிக்காமல் கடந்து சென்ற தி.மு.க., தரப்பு, தற்போது விஜய் விமர்சனத்துக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறது. இதனால், தி.மு.க., எதிர் அ.தி.மு.க., என இருந்த அரசியல் களம், தற்போது, தி.மு.க., எதிர் த.வெ.க., என மாறி உள்ளது. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வின் பிரசாரம் எடுபடாமல் போய் உள்ளது.

இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

அ.தி.மு.க., கூட்டணியில் பெரும் நெருக்கடியும் நெருடலும் உள்ளது. அதிலிருந்து மீண்டு, கூட்டணியை வலுப்படுத்துவது என்பது எளிதான காரியமல்ல. இதனால், பலவீனப்பட்டிருக்கும் அ.தி.மு.க.,வால் தி.மு.க.,வை முழு வேகத்தில் எதிர்க்க முடியவில்லை. அதே நேரம், மக்கள் சக்தியை தன் பக்கம் வைத்துக் கொண்டு, தி.மு.க.,வை மிகக் கடுமையாக விஜய் விமர்சிப்பது, மக்கள் மத்தியில் எடுபடுகிறது. இதனால், தி.மு.க,.வுக்கு எதிர்கட்சி என்றால், அது த.வெ.க., என்று மாறிப் போய் உள்ளது. இந்த நிலைக்குக் காரணம், அ.தி.மு.க.,வின் நிலைப்பாடுதான். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின. விஜய் கூறுவதற்கு பழனிசாமியே காரணம் புல் அவுட்: மத்திய அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய 2,080 கோடி ரூபாய் கல்வி நிதியை பெற, தமிழக எம்.பி.,க்கள் அனைவரும், டிசம்பரில் கூடும் பார்லிமென்ட் கூட்டத்தில் குரல் எழுப்புவோம். தமிழகத்துக்கு நிதி தர மாட்டோம் என கூறும் பா.ஜ., வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருப்பதால், வரும் தேர்தலில் அந்தக் கூட்டணி நிச்சயம் தோற்கும். எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பழனிசாமி இழப்பார். தி.மு.க., வுக்கும் த.வெ.க., வுக்கும் தான் போட்டி என விஜய் கூறுவதற்கு காரணமே பழனிசாமி தான். தே.ஜ., கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருவதால் விஜய் அப்படி கூறுகிறார். . தி.மு.க., கூட்டணி வெற்றிக் கூட்டணி; கடந்த 2019, 2021, 2024 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலிலும் வெற்றி பெறும். - மாணிக்கம் தாகூர், எம்.பி., - காங்., --நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

indian
செப் 23, 2025 21:46

த.வெ.க. பற்றி ஏன் தி மு க பயப்படுகிறது என்று தெரியல. தற்போது பலமான எதிர் கட்சிகள் ஏதும் இல்லை. எம். ஜி..ஆர். ஆவது தி மு க வில் இருந்து ADMK கட்சி தொடங்கினார். விஜெய்க்கு எந்த அரசியல் அனுபவும் கிடையாது. ADMK நான்காக பிரிந்துல்லதால் இதுவரை ADMK விற்கு வாக்கு அளித்தவர்கள் 2026 தேர்தலில் த.வெ.க. விற்கு வாக்கு அளிக்க அதிக வாய்புள்ளது. அதனாலேயே 2026 தேர்தலில் தி மு க - விற்கும் த.வெ.க. விற்கு மட்டுமே போட்டி என்று விஜய் கூறியுள்ளார்


Haja Kuthubdeen
செப் 23, 2025 19:27

விளையாட்டு செய்திக்கெல்லாமா கருத்து தெரிவிப்பது???வெயிட்...தேர்தலுக்கு இருமாதம் முன்புஎல்லாமே தெரிந்திடும்.


Saai Sundharamurthy AVK
செப் 23, 2025 08:50

திமுக vs தவேக எல்லாம் ஒரு மாயை தான். வெறும் ட்ராமா தான். ஒன்றும் நடக்கப் போவதில்லை.


Moorthy
செப் 23, 2025 07:44

அதிமுக மூன்றாவது இடமே .


Moorthy
செப் 23, 2025 07:42

திமுக ஒரு புறம் வேல்முருகன், கருணாஸ் போன்ற சிறு கட்சி தலைவர்களையும் அரவணைக்கிறது. ஆனால் இ பி எஸ் கட்சியில் ஒரு இளைஞர் தலைவரோ பெண் தலைவரோ கூட இல்லாத நிலையில் வெறும் 20% வாக்குகளை வைத்துக்கொண்டு 2026இல் முதல்வர் கனவில் இருக்கிறார் அண்ணாமலை இல்லாத பிஜேபி வெறும் 3 % வாக்குதான் பெரும் . தே மு திக ,பா மா க கேள்விக்குறி


pakalavan
செப் 23, 2025 06:33

எடப்பாடி போன்ற சுயநலவாதியால் அதிமுக அழிந்துவிட்து


Kannan
செப் 23, 2025 04:50

2025 செப்டம்பர் 08 தேதி பதிவிட்ட என் கருத்தை மீண்டும் இங்கே பதிவுசெய்கிறேன். நான் 35 வருடமாக அதிமுக வில் இருப்பவன் என்ற முறையில் இந்த 4 முக்கிய கருத்தை எழுதுகிறேன். 1. தலைவர் காலத்தில் தலைவருக்காகவும், அம்மா காலத்தில் அம்மாவுக்காகவும், பெரும்பாலான பொதுமக்களும் தொண்டர்களும் அதிமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால், இன்றைய இளம் தலைமுறையினர் மனநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இளம் தலைமுறையினர், அதிமுகவில் சேர விருப்பம் காட்டவில்லை. மேலும், செயல்திறன் மிக்க கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அமைதியாக கட்சி பணியை விட்டு ஒதுங்கிவிட்டனர். இந்த நிலைதான் அதிமுக தமிழகத்தின் அனைத்து நகரம் மற்றும் கிராமத்திலும் இருக்கிறது. 2. ஆளும் திமுக அசுர பலத்தில் உள்ளது. அந்த கட்சியின் செயல்திறன் மிக்க நிர்வாகிகளும் தொண்டர்களும் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று நம்பிக்கையுடன் பணியாற்றுகின்றனர். 3. கவனிக்க வேண்டிய ஓன்று இது: நடிகர் விஜய்யின் தா வெ க, பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் ஆணிவேர் விட்டு வளர்கிறது. இதற்கு உதாரணம், இளம் தலைமுறையினர் தன் சொந்த செலவில், மதுரையில் நடைபெற்ற தா வெ க மாநாட்டிற்கு சென்றனர். இது போன்று தலைவர் காலத்தில் மட்டுமே தலைவர் பேசும் கூட்டத்திற்கு அதிமுக தொண்டர்கள் சொந்த செலவில் அவர்களாகவே நடந்தும் சென்றனர். அம்மா காலத்தில் கூட பணம் கொடுத்துதான் தொண்டர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4. பஜக தமிழகத்தில் வேர் ஊன்ற அதிமுகவை பயன்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டு கொண்டு வருவதற்கு கட்சியில் நல்ல தலைவர் மற்றும் இரண்டாம் மட்ட தலைவர்கள், செயல் திறன் மிக்க கட்சி நிர்வாகிகள் உள்ளனரா என்ற கேள்வி எஞ்சிஉள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஆழமாக எழுந்துள்ளது. பெரும்பாலான தமிழக மக்களின் இதயம் சிம்ம அரியணை என்றால், அதற்கு நிரந்தர அரசன் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே.


புதிய வீடியோ