உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் திறந்துவைத்த குடியிருப்பு ஒரே ஆண்டில் சேதமான சோகம்

முதல்வர் திறந்துவைத்த குடியிருப்பு ஒரே ஆண்டில் சேதமான சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களுக்கு 443 வீடுகள் கட்ட முடிவானது.தலா 269 சதுர அடியில், ஒரு வீட்டுக்கு 4.60 லட்சம் ரூபாய் என கணக்கிட்டு, 20.37 கோடி ரூபாய் நிதியில் இந்த வீடுகள் கட்டப்பட்டன.

புகார்

மலையாங்குளம் - 178; காட்ராம்பாக்கம் - 31; ஊத்துக்காடு - 76; குண்டுகுளம் - 58; மற்றும் சிங்காடிவாக்கம் கிராமத்தில் 100 வீடுகள் என, ஐந்து இடங்களில் மொத்தம் 443 வீடுகள் கட்டப்பட்டன.ஊரக வளர்ச்சித் துறை சார்பில், அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்கள் மேற்பார்வையில் வீடுகள் கட்டும் போதே, தரமற்ற முறையில் கட்டுவதாக, மலையாங்குளம் ஊராட்சியில் புகார் எழுந்தது.அப்போதைய கலெக்டர் ஆர்த்தி, திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி ஆகியோர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கடிந்து கொண்டனர்.அனைத்து பணிகளையும் முடித்து, 2023 டிசம்பரில், முதல்வர் ஸ்டாலின், 443 வீடுகளையும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின் பயனாளிகள், அந்த வீட்டிற்குள் குடிபெயர்ந்து வசித்தனர்.வீடுகள் திறக்கப்பட்டு ஓராண்டு கூட முழுமை பெறாத நிலையில், தரை, கான்கிரீட் கூரை உள்ளிட்ட இடங்கள் சேதமாகியுள்ளது, பழங்குடியின மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரமம்

சமீப நாட்களில் பெய்த மழைக்கு, காட்ரம்பாக்கம், ஊத்துக்காடில் கட்டியுள்ள பல இருளர் வீடுகளில் கான்கிரீட் கூரையில் தண்ணீர் கசிந்து வருகிறது. தரை முழுதும் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், பயனாளிகள் துாங்க சிரமப்படுகின்றனர்.இருளர்கள் கூறியதாவது:கட்டி கொடுக்கப்பட்ட ஓராண்டிலேயே, எங்களது வீடுகளின் கான்கிரீட் தளத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் கசிகிறது. தரை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமாகிவிட்டது.

வருத்தம்

போதிய ஜல்லி, சிமென்ட் கொண்டு தரை அமைக்கப்படவில்லை. இப்போதே கூரை, தரையில் சேதமடைவதால், வரும் ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகும்.சாலை, குடிநீர், மின் இணைப்பு போன்ற வசதிகள் செய்து கொடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், வீடு தரமான முறையில் கட்டவில்லை என்பது வருத்தமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இருளர்களுக்கு கட்டி கொடுத்த வீடுகள் சேதமடைவதாக, எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை. புகார்கள் வந்தால், ஊரக வளர்ச்சி துறையிடம் விளக்கம் கேட்கப்படும். சேதமான வீடுகள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ethiraj
டிச 13, 2024 18:23

Because they are oppressed community govt treats them badly


Ethiraj
டிச 13, 2024 18:20

Our politicians know what is happening in Manipur,UP not in TN SINVE OUR CM is busy in Nationalmpoliticas we have d new post of DY CM but he is busy with Sanathana darmam


Bhaskaran
டிச 11, 2024 07:51

சிமிண்ட் என்ற பொருளை பெயருக்கு பயன்படுத்தும் ஒப்பந்தக்காரர்கள் நீடுழி வாழ்க.


Raj S
டிச 11, 2024 00:51

திருட்டு திராவிடத்தோட வெங்காயத்தோட ஒவ்வொரு லேயரா இனிமே வருவானுங்க, ஒருத்தன் தெரியாதும்பான், இன்னொருத்தன் கம்பளைண்ட் குடுக்கலைனு சொல்லுவான், அப்புறம் இது போன ஆட்சில கட்டினது, ஒன்றிய அரசு... இப்டி பல விதமா முட்டு குடுப்பானுங்க... எதுவுமே சரி வரலைனா இருக்கவே இருக்கு அதானி, அம்பானி உருட்டுகள்...


v
டிச 10, 2024 19:50

எந்த கொம்பனும் ஒண்ணும் சொல்ல முடியாது


வாசகர்
டிச 10, 2024 17:00

வாக்காளர் உரிமை தொகையை பெற்று மீண்டும் திராவிட மாடலுக்கே வாக்களித்து இது போன்ற நிகழ்வுகளை எதிர் கொள்ளவும். சுதந்திர காற்று மற்றும் ஜணநாயகத்தின் பயனை அறியாமல் இன்னும் அடிமை காற்றை சுவாசிக்கும் மக்கள்


என்றும் இந்தியன்
டிச 10, 2024 16:40

3 பாலங்கள் மூன்றே மாதத்தில் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டன. குடியிருப்பு ஒரு வருடத்தில் சேதம். குடியிருப்பு ரூ 1310/ஒரு சதுர அடிக்கு. இப்போதைய சாதாரண மிக மிக மலிவான விலை என்றால் ரூ 4100/ஒரு சதுர அடிக்கு நல்ல உயர்தர கட்டிடம் என்றால் ரூ 9500/ஒரு சதுர அடிக்கு. அதாவது ஒரு ஒட்டு வீடு கட்ட என்ன செலவு ஆகுமோ அதை கான்ட்ராக்டருக்கு தந்து அதில் 45% கமிஷன். அதாவது கான்ட்ராக்டருக்கு கிடைப்பது ரூ 720/ஒரு சதுர அடிக்கு. அப்போ வான் என்ன பண்ணுவான் இப்படித்தான் கட்டிக்கொடுக்கமுடியும் அவனுக்கும் அதற்கு ஒரு 5% லாபம் கிடைக்க வேண்டாமா. திருட்டு திராவிட அறிவிலி அரசுக்கு சப்போர்ட் செய்யும் ரூ 200 உபிஸ் என்ன சரிதானே


lana
டிச 10, 2024 14:01

அடேங்கப்பா ஒரு வருடம் தாக்கு பிடித்து இருக்கிறது அந்த வீடு. இது தான் டா தீய முக. திராவிட மாடல்.


Ethiraj
டிச 13, 2024 18:21

National achievment


அப்பாவி
டிச 10, 2024 13:47

இவருக்கு கடுமரமே தேவலை. அவரை கட்டிக்குடுத்த சமத்துவபுர வீடுகள் நல்லாத்தான் இருக்கு. அவரு கிலோ கணக்குல ஊழல் பண்ணுனா இவுரு டன் கணக்கில் ஊழல்.


சந்திரசேகர்
டிச 10, 2024 13:19

269அடிக்கு வீடு என்பதை விட ஒரு நீண்ட அறை கட்ட இவ்வளவு செலவா?ஊழல் லஞ்சம் வாங்குபவர்கள் நல்லாத்தான் இருக்கிறார்கள். அவர்கள் குடும்பமும் நல்லா தான் இருக்கிறது


புதிய வீடியோ