உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உதயநிதிக்காக போடப்பட்ட விழா மேடை - பந்தல் பிரிப்பு

உதயநிதிக்காக போடப்பட்ட விழா மேடை - பந்தல் பிரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, கடந்த மாதம் 23ல் தமிழக துணை முதல்வர் உதயநிதி கோவைக்கு வருவதாக இருந்தது. இதையடுத்து, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் நுழைவாயில் கோட்டை போல் அலங்கரிக்கப்பட்டு, மேடை, பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் கொடி, போஸ்டர், பிளக்ஸ் என தயாராக இருந்த நிலையில், திடீரென 22ம் தேதி இரவு 7:00 மணியளவில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், 30ல் நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சி நடக்க ஏற்பாடாகி இருந்த மேடைக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தினமும், 'ஷிப்டு' முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எதிர்பார்க்கப்பட்டது போல, கடந்த 30ம் தேதியும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. அடுத்து, வரும் 13ல் நிகழ்ச்சி நடக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதனால், மேடைக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்தது.இதுதொடர்பாக, கடந்த 3ல், நம் நாளிதழில் படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. விழா பந்தலுக்கு, 10 நாட்களுக்கும் மேலாக போலீசார் காவல் காத்ததும், தொடர்ந்து 10 நாட்களுக்கு காவல் இருக்கப் போகும் தகவலும் கசிந்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், மேடையை உடனடியாக அகற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இதையடுத்து நுழைவாயில் அலங்காரம், பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டு, விழா மேடை மற்றும் பந்தல்கள் பிரிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

c.mohanraj raj
ஏப் 08, 2025 20:44

இது மட்டும் என்ன அவர் அப்பன் வீட்டு காசா... மக்களுடைய வரிப்பணம் வீணாகப் போகிறது...எத்தனை பள்ளிக்கூடங்களுக்கு ஒழுங்கான கட்டிடம் இல்லை


Karthik
ஏப் 08, 2025 20:01

அப்ப பந்தல் போட்டவர் காட்டுல பண மழை னு சொல்லுங்க.இளிச்சவாய அப்பன் வீட்டு காச அப்பா அள்ளி குடுத்திருப்பாரே..


Ramesh Sargam
ஏப் 08, 2025 14:33

யார் அப்பா வீட்டு காசு? எல்லாம் மக்களின் வரிப்பணம்?


எவர்கிங்
ஏப் 08, 2025 12:38

அப்பா வீட்டு காசா? பிறவி குணம்


ram
ஏப் 08, 2025 03:55

இதெல்லாம் எவன் அப்பனுடைய பணம்..


புதிய வீடியோ