உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்

திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'விஜயும், சீமானும் பா.ஜ.,வின் பிள்ளைகள் என கூறும் திருமாவளவன், தி.மு.க.,வின் பிள்ளையா' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் குஷ்பு விமர்சித்து உள்ளார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து விடுமா' என கேட்கிறார். அவரால், 'கிறிஸ்துமஸ், ரம்ஜான் கொண்டாடுவதால் எய்ம்ஸ் வந்துவிடுமா' என பேச முடியுமா? ஓட்டு வங்கிக்காக, சிறுபான்மையினரை தொடுவதற்கே பயப்படுகிறீர்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என பா.ஜ., சொல்லவில்லை; அது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. திருப்பரங்குன்றம் விவகாரம் மக்கள் நம்பிக்கை சார்ந்தது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை காக்க அவர்கள் போராடுகின்றனர். மதச்சார்பின்மை எனும் பெயரில் மத வெறுப்புணர்வை திருமாவளவன் வெளிப்படுத்துகிறார். த.வெ.க., தலைவர் விஜயும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பா.ஜ.,வின் பிள்ளை என திருமாவளவன் கூறுகிறார். முதலில், திருமாவளவன் யாருடைய பிள்ளை? தி.மு.க.,வின் பிள்ளையா அல்லது காங்கிரசின் பிள்ளையா என அவர் பதில் அளிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என் நோக்கமல்ல; பா.ஜ., வெற்றியே என் வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தமிழன்
டிச 28, 2025 17:21

அண்ணன் திருமா பற்றி பேச ஒரு அடிப்படை தகுதியாவது இருக்கா


Vijayakumar
டிச 28, 2025 15:51

அவர் திமுக பிள்ளை இல்லை.


senthil kumar.k
டிச 28, 2025 10:11

திருமா, திமுக வின் பிள்ளை அல்ல.....அவர் திமுக வின் எடுபிடி.


தமிழன் மணி
டிச 28, 2025 09:25

தேர்தல் முடிந்த பிறகு எந்த ... செல்வாக்காசு திருட்டு கட்சியில் ஐக்கியம்?


அப்பாவி
டிச 28, 2025 09:11

வாங்க தாயீ... வாங்க


vivek
டிச 28, 2025 10:56

போயிட்டு நாளைக்கு வா


அரசு
டிச 28, 2025 07:58

இவ்வளவு நாள் தூங்கி இருந்து விட்டு திடீரென வீரம் பேசுவது சட்டசபைத் தேர்தல் சீட்டுக்காக தானே.


guna
டிச 28, 2025 08:24

அரசு. நீயும் தூங்கிவிட்டு இப்போது எதற்கு கருத்து போடுகிறார்


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி நாயக்கர்
டிச 28, 2025 08:58

அரசு கூறுவது குருமா பற்றி தானே?


பேசும் தமிழன்
டிச 28, 2025 09:37

இரண்டு சீட்டுக்காக வாங்குன காசுக்கு மேலே கூவி கொண்டு திரிகிறார்.. என்ன தான் செய்வது வாய் கிழிய கத்தினாலும்.... அவருக்கு பிளாஸ்டிக் சேர் தான்.


V RAMASWAMY
டிச 28, 2025 07:47

சபாஷ்.


Mani . V
டிச 28, 2025 07:45

ஸாரி மேடம், அவர் தி.மு.க.,வின் பிள்ளை அல்ல. ..


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ