உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காலி பணியிடங்களை நிரப்புங்கள் திருமாவளவன் வலியுறுத்தல்

காலி பணியிடங்களை நிரப்புங்கள் திருமாவளவன் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அறிக்கை:தமிழக அரசு துறைகளில், 12 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாதமும், ஆயிரக்கணக்கானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. அவற்றை நிரப்பவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அரசு முன்வர வேண்டும்.குறிப்பாக, தமிழக மின் வாரியத்தில் மட்டும், 65,000 காலி பணியிடங்கள் உள்ளன. மின் உற்பத்தி, மின் பகிர்மானம், தட்டச்சு பணிகளில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர்.மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என, 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில், தி.மு.க., தெரிவித்துள்ளது.அதன்படி, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும், 'கேங்மேன்' பணியாளர்களாக உள்ள 5,443 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியிடங்கள் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAMESH
ஏப் 25, 2025 04:41

பணம் வேண்டும் என்றால் நேரடியாக கேள்....அதுவும் கை செலவுக்கு....நேராக அறிவாலபம் சென்று கை நீட்டு


Ethiraj
ஏப் 24, 2025 05:39

Salary will be paid by VCK


SunMohan
ஏப் 22, 2025 21:07

நான்கு ஆண்டுகள் திமுக அரசியல் முடிந்து விட்டது.இப்பொழுதான் உங்களுக்கு தெரிகிறதா?வேண்டாம் வேஷம்


theruvasagan
ஏப் 22, 2025 17:51

ஐயா சொல்லிட்டாருல்ல. மறுபேச்சு கிடையாது .அடுத்தபடியா 12 லட்சம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அடிக்கப் போறாங்க பாருங்க. அந்தளவுக்கு பவர் இருக்கு அவர் கையில. நாம் டீம்காவை நம்பி இல்லைன்னு அன்னிக்கு அவர் போட்ட போடுக்கு அரண்டு போயிட்டாங்க இல்ல.


Prabakaran J
ஏப் 22, 2025 17:40

ippadilam pesinal tan 2 sheet avathu kidaikum Athuvum suriyan sinnathil. vsk oru adimai katchi


sankaranarayanan
ஏப் 22, 2025 17:11

ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாதமும், ஆயிரக்கணக்கானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். அதனால் ஏற்படும் காலியிடங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. அவற்றை நிரப்பவும், என்று கூறிய குருமாவளவனே இந்த அரசு டாஸ்மாக் கடைகளை தினந்தோறும் திறந்து அவைகளை அதிகரித்து அங்கே வேலை வாய்ப்பளித்துவதைத்தான் முக்கியமாக அதிகரிக்கும் அதுதான் அவர்களுக்கும் வருமானம் கொடுக்கும் அழிவுத்துறை


Haja Kuthubdeen
ஏப் 22, 2025 10:50

என்னாச்சு திருமாக்கு??????


பேசும் தமிழன்
ஏப் 22, 2025 08:52

ஒன்றும் அவசரமில்லை... இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது.... ஆட்சி முடிந்த பிறகு வரும் புதிய அரசை கேளுங்கள்..... அது தானே நமது வழக்கம்.


ஆய்வாளர்
ஏப் 22, 2025 08:23

ஸ்டாலின் அரசு சரியாக ஆளவில்லை. தேவையில்லாத பாஜக எதிர்ப்பு நாடகம். ஆட்சியிலே அதிகார பகிர்வில்லை. உதயநிதி கத்துக்குட்டி. என்றைக்கு மூப்பதாயிரம் கோடி பணத்தை எண்ணி முடிப்பானோ ! அக்னியே ஸ்வாஹா செய்து கொள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஏப் 22, 2025 08:00

தமிழக அரசு துறைகளில் 12 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகத் தெரியவருகிறது. அதுசரி இது இந்த நாலு வருஷம் தெரியலையாக்கும். முந்த நாள் திமுகவை மட்டுமே நம்பி இருக்கும் கட்சி இல்லை விசிக.. நேற்று காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்.. இன்று என்னவோ? குருமாவிற்கு தேர்தல் எனும் ஜலதோஷம் பிடித்து விட்டது அதனால் தான் டோன் மாறுகிறது!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை