உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இது தானா சேர்ந்த கூட்டம்: திருச்சி பிரசாரத்தில் விஜய் பெருமிதம்

இது தானா சேர்ந்த கூட்டம்: திருச்சி பிரசாரத்தில் விஜய் பெருமிதம்

திருச்சி: திருச்சியில், 'மக்கள் சந்தி ப்பு' பிரசார பயணத்தை துவக்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ''இங்கே கூடியிருக்கும் கூட்டம், தானா சேர்ந்த கூட்டம்; அன்புக்கும், பாசத்துக்கும் மட்டுமே அடிமையாக இருக்கும் கூட்டம்,'' என்று பேசினார்.

திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று அவர் பேசியதாவது:

அந்த காலத்துல போருக்கு போறதுக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்குறதுக்காக, குல தெய்வ கோவிலில் சுவாமியை கும்பிட்டு விட்டுத்தான் போவாங்க. 'நோ காம்ப்ரமைஸ்!' அந்த மாதிரி, தேர்தலுக்கு போறதுக்கு முன்னாடி, மக்களை பார்த்துட்டு போகலாம்னு வந்திருக்கேன். ஒரு சில மண்ணை தொட்டா ரொம்ப நல்லதுன்னு சொல்வாங்க. அந்த அடிப்படையில தான், திருச்சியில இருந்து பிரசாரத்தை துவங்கி இருக்கிறேன். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1956ல் தேர்தல்ல நிக்கணும்னு முடிவெடுத்தது, திருச்சி மாநகரில் தான். அதேபோல, இன்னொரு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1974ல் அ.தி.மு.க.,வை துவங்கி, முதன் முதலில் மாநாடு நடத்தினது திருச்சியில தான். இது மாதிரி, திருச்சியை மையமா வெச்சு ஏகப்பட்ட சம்பவங்களையும், உதாரணங்களையும் சொல்லலாம். கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., தரப்பில் 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தீங்க சி.எம்., சார். ஆனால், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேத்தலை சார். இதை சொன்னாலும், உங்களிடம் இருந்து பதில் வராது சி.எம்., சார். தி.மு.க.,-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. பஸ்களில் பெண்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதித்து விட்டு, 'ஓசி ஓசி' என்று கேவலமாக சொல்லிக் காட்டுகின்றனர். அனைத்து மகளிருக்கும் 1,000 ரூபாய் தரவில்லை; ஆனால், சிலருக்கு கொடுத்ததை சொல்லிக் காட்டுகின்றனர். கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை, த.வெ.க., ஆட்சிக்கு வந்தால் செய்து கொடுப்போம். பெண்கள் பாதுகாப்பிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளிலும் 'நோ காம்ப்ரமைஸ்!' 'மணல் மாபியா' கூட்டம் தமிழகம் முழுக்க இருக்கிறது. அதில், பெரும் பங்கு தி.மு.க.,வினருக்கு இருக்கிறது. துறையூரைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி, செம்மண் விவகாரத்தில் கைதானதே இதற்கு ஆதாரம் . இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர்; இருந்தும், என்ன பிரயோஜனம். மாவட்டத்துக்காக ஒரு நல்லதையும் செய்யவில்லை; வரும் தேர்தலிலும் இவர்களுக்குத்தான் ஓட்டு போடுவீர்களா? சம்மட்டி அடி தேர்தலில், மக்கள் நல்ல தீர்ப்பு அளிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் இருக்கும் தி.மு.க.,வுக்கு, ஓட்டு வாயிலாக சம்மட்டி அடி கொடுக்க வேண்டும். முடியாததையெல்லாம் தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க., தராது. எதெல்லாம் சாத்தியமோ, அதை மட்டுமே கொடுப்போம். இங்கே கூடியிருக்கும் கூட்டம், தானா சேர்ந்த கூட்டம்; அன்புக்கும், பாசத்துக்கும் மட்டுமே அடிமையாக இருக்கும் கூட்டம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அரியலுார் சென்ற நடிகர் விஜய், அங்குள்ள பஸ் நிலையம் அருகில் திரண்டிருந்த கட்சியினர் மத்தியில் பேசினார். அங்கு அவர் பேசியதாவது: மக்களின் அன்புக்காக மட்டுமே பெரிய வருமானத்தையும், வசதியையும் துாக்கி எறிந்துவிட்டு, அரசியலுக்கு வந்திருக்கிறேன். உங்கள் பாசம் தான் எனக்கு பெரிது. வேணுங்கற அளவுக்கு பணத்தைப் பார்த்தவன் இந்த விஜய். த.வெ.க.,வுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து, எதிரிகள் பயந்து போயிருக்கின்றனர். பா.ஜ., நம்மை ரொம்ப கஷ்டப்படுத்துகிறது. பீஹாரில், 65 லட்சம் ஓட்டுகளை காணோம். ஓட்டு திருட்டு என்ற மோசமான செயலில் ஈடுபடுகின்றனர். ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம், தில்லுமுல்லு திட்டம்; ஜனநாயக படுகொலை. அது மட்டுமல்ல, தொகுதி மறுசீரமைப்பும் தென் மாநிலங்களை பெரிய அளவில் பாதிக்கும். பா.ஜ., துரோகம் செய்கிறது என்றால், தி.மு.க., நம்ப வைத்து கழுத்தறுக்கிறது. பா.ஜ.,வும், தி.மு.க.,வும் மறைமுக உறவுக்காரர்கள். தி.மு.க., போல் மக்களை ஏமாற்றும் வேலையை நாங்கள் செய்யப் போவதில்லை. தீர்வை நோக்கி போவதும், தீர்வு காண்பதும் மட்டும் தான் த.வெ.க.,வின் லட்சியம். இவ்வாறு அவர் பேசினார். விஜய்க்கு வந்த கூட்டம் ஓட்டாக மாறுமா? திருச்சியில் விஜய்க்கு பெரிய அளவில் கூட்டம் கூடியதாக சொல்கின்றனர். கூட்டம் கூடலாம்; ஆனால், அதெல்லாம் ஓட்டாக மாற வேண்டுமே. கூடும் கூட்டம் விஜய் ஒரு நடிகர் என்பதால், அவரை பார்க்க வரும் கூட்டமாகக் கூட இருக்கலாம். விஜயை பார்க்க சென்ற ஒவ்வொரு தம்பி வீட்டிலும் உள்ள குடும்பத்தினர் மற்றும் அந்த தம்பிகளின் உறவினர்கள் வீடுகளில் இருப்போரும், தி.மு.க., அரசின் திட்டங்களால் பயன் பெற்றிருப்பர். அதனால், ஓட்டுச்சாவடிக்கு செல்லும் முன், அவர்கள் பயன் பெற்றதையெல்லாம் நினைத் துப் பார்ப்பர். மற்றபடி, யாருக்கும் எவ்வித பாரபட்சமும் இன்றி, எங்களது வேலை ெதாடர்கிறது. - மகேஷ், தமிழக அமைச்சர், தி.மு.க.,'மைக்' வேலை செய்யவில்லை கண்டுகொள்ளாத கட்சியினர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்ட பிரத்யேக வாகனம், முண்டியடித்த மக்கள் கூட்டத்திற்குள் மரக்கடை வரை ஊர்ந்து வந்தது. இதனால், 15 கிலோ மீட்டர் துாரத்தை, விஜய் வாகனம் கடக்க ஐந்தரை மணி நேரம் ஆனது. காலை 9:30 மணிக்கு பயணத்தை துவங்கிய விஜய், போலீசார் அனுமதிக்காத போதிலும், ரோடு ஷோ நடத்தியது போல் மிக மிக மெதுவாக கூட்டத்தை கடந்து, மாலை 3:00 மணிக்கு மரக்கடை பகுதியை வந்தடைந்தார். மரக்கடை ஏரியாவில் மக்கள் மத்தியில் விஜய் பேசும்போது, ஒலிபெருக்கியின் மைக் வேலை செய்யவில்லை. இதனால், விஜய் பேசுவது எதுவுமே கூட்டத்தினருக்கு கேட்கவில்லை. ஆனால், இதை கடைசி வரை கட்சித் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. நீண்ட தாளில் எழுதி எடுத்து வரப்பட்டதை, சினிமா வசனம் போல் பேசி முடித்த நடிகர் விஜய், பேச்சை முடித்ததுமே பிரசார வாகனத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Tamilan
செப் 14, 2025 21:30

கோவிலுக்கும் இப்படி போகிறது கொள்ளைக்கும் போகிறது சினிமாவிற்கும் போகிறது கச்சேரிக்கும் போகிறது இது எந்தமாதிரி?


Mr Krish Tamilnadu
செப் 14, 2025 21:07

எஸ்காட் போலீஸ் அனுமதிக்கப்பட்டு, நகர மக்களின் அன்றாட வாழ்வின் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, ஆளும் அரசு தான் காழ்ப்புணர்ச்சி இன்றி செயல் பட வேண்டும். இன்றைய மக்கள் தொகைக்கு, மாற்றம் விரும்புவர்கள் அதிகமாகி இருக்கலாம். விஜய் அவர்கள் எஸ்காட் வேண்டாம் என்றால் மட்டுமே, கூட்ட நெரிசல் இடையூறுக்கு அவர் பொறுப்பு ஏற்க முடியும். இல்லை என்றால் ஆளும் அரசு தான் இந்த மக்கள் அசெளகரியத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.


Rajasekar Jayaraman
செப் 14, 2025 17:14

சிரிப்பு நடிகனோ நடிகயோ வந்து கூட்டம் போட்டாக்கூட கூட்டம் தானா சேரும் ஜோசப்பு விஜய் நடிகன் தானே.


Vasan
செப் 14, 2025 16:57

Marina Air show had 15 lakh people. How many were there in Trichy meeting?


Balaa
செப் 14, 2025 15:56

டுபாக்கூர் ரஜினி போல் இல்லாமல் விஜயகாந்த் போல் தைரியமாக அரசியலில் நுழைந்தற்கு பாராட்டுக்கள். ஆனால் இவர் மாயை விட்டில் பூச்சி போல் இரு தேர்தல் வரைக்கும் தான். அனுபவமுள்ள நேர்மையான அறிவாளிகளை சேர்த்துக் கொண்டால் நிலைக்கலாம்.


Subburamu K
செப் 14, 2025 10:56

Tamizhagam peoples are addicted to Liquor, Narcotics, Cinema, Fans mostly lazy peoples to heros heroines, TV serials etc. Reading quality books is very minimum among the youths. Leaders like Annamalaiji is side lined by Power mongers, looters selfish political leaders


Oviya Vijay
செப் 14, 2025 10:25

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் ஆளுங்கட்சியே மீண்டும் ஜெயிக்கப் போகிறது என்பதே நிதர்சனம். அதில் சிறு மாற்றமும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் இதுவரை மக்களுக்கு என்ன செய்தீர்கள் எனக் கேட்டால் திமுகவிடம் சொல்வதற்கு நிறைய உண்டு. ஆனால் இதே கேள்வியை தவெகவிடம் கேட்டால் சொல்வதற்கு பெரிய அளவில் ஒன்றுமில்லை. ஆகையால் என்னதான் முயற்சித்தாலும் இந்த தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கும் அளவிற்கெல்லாம் வெற்றி பெற முடியாது. சில காலம் கூட பொறுத்திராமல் நேரடியாக முதல்வர் அரியணையில் சென்று அமர வேண்டுமென நினைப்பது பேராசை. ஆனால் தவெக இந்த தேர்தல் களத்தில் கடும் உழைப்பைக் காட்டினால் கண்டிப்பாக பெரும்பான்மையான இடங்களில் அதிமுக பாஜக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பெறக் கூடும். தங்கள் பலத்தை மக்கள் முன்னே காட்டக் கிடைக்கும் இந்த அருமையான வாய்ப்பை தவெக தவற விட்டுவிடக் கூடாது. ஏனெனில் இது அடுத்தடுத்து வரும் தேர்தல்களை எதிர்கொள்ள மிகப்பெரிய பலத்தை கட்சித் தலைமைக்கும் ரசிகர்களாகிய தொண்டர்களுக்கும் கொடுக்கும்... அதற்கு முதலில் முக்கியமாகச் செய்ய வேண்டியது தனித்துப் போட்டியிட வேண்டும்... அதிமுக ஒருவேளை பாஜகவுடன் அமைத்திருக்கும் கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினாலும் அதனோடு மட்டும் தவெக கூட்டணி வைத்து விடவே கூடாது. ஏனெனில் இந்த தேர்தல் முடிந்த கையோடு சிதறிப் போகக்கூடிய கட்சி அதிமுக. அதற்கென்று எதிர்காலம் என்ற ஒன்று இனியில்லை. இருக்கப் போவதுமில்லை. ஆகையால் அதனை நம்பி உங்கள் புதிய கட்சியை சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று விடாதீர்கள். மேலும் சிறு சிறு துக்கடா ரப்பர் ஸ்டாம்ப் கட்சிகளையும் கூட்டணி என்ற பெயரில் இணைத்துக் கொண்டு போட்டியிடுவதைக் காட்டிலும் தனித்துப் போட்டியிடும் போது அதிக வாக்குகளை பெற முடியும். ஏனெனில் பெரும்பாலான வாக்காளர்களின் மன ஓட்டமும் அது தான்... 2026 தேர்தலை தவிர்த்துப் பார்த்தோமானால் தவெகவிற்கு மிகச்சிறந்த எதிர்காலம் உண்டு. ஏனென்றால் உதய சூரியனும் ஒருநாள் தமிழகத்தில் அஸ்தமிக்கும்... மறந்துவிடக்கூடாது... ஆனால் அதற்கான காலம் கனியும் வரை பொறுத்திருக்க வேண்டும்...


vivek
செப் 14, 2025 10:43

எதுக்கு இவளோ பெரிய மொக்கை கருத்து....மொத்ததில் ஆப்பு இருக்கு.


vivek
செப் 14, 2025 10:43

மொத்ததில் ஒரு மொக்கை கருத்து


பாரத புதல்வன்
செப் 14, 2025 11:10

பாட்டிலுக்கு கொடுக்கும் 10 ரூபாய் யை கொடுக்கலாம்....அதுவே அதிகம்.


Kjp
செப் 14, 2025 11:26

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். நாலரை வருடத்தில் நாலே முக்கால் லட்சம் கோடி கடன் ஏன் வாங்கினீர்கள். அந்த நாளே முக்கால் லட்சம் கோடிக்கு வட்டி எவ்வளவு கட்டுகிறீர்கள். ஏன் கல்வி கடன் ரத்து பண்ணவில்லை. நீட் தேர்வு ரகசியம் என்று தெரிந்தும் ஏன் நீட் தேர்வு இன்னும் ரத்து செய்ய முடியவில்லை. பெட்ரோல் விலை டீசல் விலை ஏன் இன்னும் குறைக்கவில்லை. 300 அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை ஏன் நியமிக்கவில்லை. மின்சார கட்டணத்தை ஏன் ஏற்றினீர்கள். கேட் சிலிண்டர் இருக்கு ஏன் இன்னும் மானியம் தரவில்லை. ஆசிரியர்கள் அரசு பணியாளர்களுக்கு ஏன் ஓய்வூதிய பலன் கொடுக்கவில்லை. சொத்து வரியை பன்மடாக ஏற்றியது ஏன். தகுதி இல்லாத மகளிர் என்று ஒதுக்கப்பட்ட பின் இப்போது அவருக்கு எப்படி தகுதி வந்தது. நான் கரிய ஆட்டுக்களாக இல்லாத அக்கறை முதியோர்கள் மேல் இப்போது எப்படி வந்தது. தாலிக்கு தங்கம் திட்டத்தை ஏன் நிறுத்தினீர்கள். கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட லேப்டாப் ஏன் கொடுக்கவில்லை. கடந்த தேர்தலில். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏகப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக ஏன் கூறுவீர்கள். இதுவரை வெளிநாட்டில் ஈர்த்த முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை கொடுக்க முடியவில்லை. எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கூடிட்டீர்கள் வெள்ளை அறிக்கை தாருங்கள். இன்னும் எத்தனையோ இருக்கிறது. இப்போது கேட்ட கேள்விகளை மக்கள் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.


Krishnaswame Krishnaswame
செப் 14, 2025 14:52

அரசியல் புரிதல் இல்லாமல் அரைகுறையாக இவ்வளவு நீட்டி முழங்கியிருக்க வேண்டாம். தீம்க 2021 குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்தது. இந்த முறை அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை மிகத்தீவிரமாக உள்ளது. விஜய் அதிகம் பிரிக்க உள்ள ஓட்டுக்கள் திமுக வாங்கிய ஓட்டுகளே. அதேசமயம் அதிமுக ஆட்சியை திமுக வுடன் ஒப்பிடும்போது மக்கள் அதிமுக ஆட்சியை சிறந்ததாக கூறுகிறார்கள். தீய முக வின் தோல்வி என்பது அக்கட்சி இதுவரை கண்டிராத மோசமான தோல்வியாகத்தானிருக்கும்.


செல்வேந்திரன்,அரியலூர்
செப் 14, 2025 16:28

ஏனென்றால் நீயும் விஜய் ஜோசப்பும் அப்பத்துக்கு மதமாறிய கை கூலிகள் அதனால்தான் உன்னுடைய இந்த வக்காலத்து ஏலே ஓவியா தயவு செய்து நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொண்டு நீண்ட நெடிய கொடிய உன்னுடைய பழைய அறுவை கட்டுரையை போட்டு எங்களை வதைத்து விடாதே..


jeyakumar
செப் 14, 2025 16:50

சாக்கடையை அள்ள ஒருத்தன் இறங்கினால் ஊரே திரண்டு வரும் இது ஒன்றும் விந்தையில்லை


R.MURALIKRISHNAN
செப் 14, 2025 10:00

எழுதி வந்த துண்டு சீட்டை படிப்பதை பார்க்க ஒரு கூட்டம். இனி 1 வாரம் ஏசி ரூமில் ரெஸ்ட். பார்க்க வந்த கூட்டம் போன செலவை ஈடாக்க தூக்கம் மறந்து வேலை பார்க்க வேண்டும். இவனால் இவனுக்கும் இவன் கூட உள்ள அல்கைகளுக்கும் இவன் பின்னால் உள்ள சில முதலைகளுக்கும் மட்டுமே லாபம்.


subramanian
செப் 14, 2025 08:28

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சினிமா பைத்தியங்கள் கூட்டம். தேசவிரோத கூட்டம். அந்நிய கைக்கூலி கூட்டம். தீவிரவாதிகள் கூட்டம்.


Ranganathan
செப் 14, 2025 08:26

தானா சேர்ந்த கூட்டம் என்றாலே இப்போது எல்லாம் பெருத்த சந்தேகம் வருகிறது. ஏனோ ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் போராட்டம் தான் கண் முன்பு நிழலாடுகிறது. இவரது மதுரை மாநாட்டிற்கு கைக்குழந்தைகள் சகிதம் வந்தது அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. உளவுத்துறை இதை கண்காணிக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை