வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எனக்கும் இந்த அனுபவம் ஏற்ப்பட்டது...எக்மோரிலிருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல்லில் இறங்கும் ஒரு பெரிய குடும்பம் நான் இருந்த அதே பெட்டியில் பயணித்தனர்... அவர்கள் தாம்பரம் வரை கூட்டமாக உட்கார்ந்து பேசி ஆண்கள் பெண்கள் கலகலப்பான பேச்சுக்கள் சத்தமாக இருந்தது.... செங்கல்பட்டு வந்தும் அவர்கள் தூங்காமல் லைட் போட்டுக்கொண்டு பேசியபடியே வந்தனர்...8படுக்கைகள் கொண்ட ஒரு பகுதியில் என்னைத்தவிர மற்ற அனைவரும் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள்...நான் தாம்பரம் தாண்டும் போதே லைட் அனைத்து விடுகிறேன் நான் தூங்க வேண்டும் என்றேன்...அவர்கள் நாங்கள் பேசி முடிக்க நேரம் ஆகும் என்றனர்..சரி நானும் கொஞ்ச நேரம்தானே என்று விட்டுவிட்டேன்.... ரயில் செங்கலபட்டு தாண்டியும் அவர்கள் பேச்சு நிற்கவில்லை...இந்த தடவை நான் அவர்களிடம் தொந்தவராக இருக்கிறது என்றேன்...அதற்கு அனைவரும் சேர்ந்து என்னிடம் சண்டைக்கு வருவதுபோல உங்கள் சொந்த வண்டி அல்ல நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றனர்...நான் இந்த தடவை கடுமையான எச்சரித்துவிட்டேன்...சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி வேண்டியிருக்கும் என்று எச்சரித்தேன்...எனக்கு மற்ற பயணிகளும் ஆதரவிற்கு வந்தனர்...இருந்தாலும் அந்த மூடர்கூடம் குடும்பம் தொல்லையாக இருந்தது. சண்டை போடலாம் ...ரயில் போலீஸை அழைக்கலாம் தவறே இல்லை.
இரவு 10 மணிக்கு ரயில் ஏறுபவர்கள் வெளியிலேயே உணவு உண்ணாமல், சக பிரயாணிகள் பற்றி கவலையின்றி, 11 மணிக்கு சத்தமாகப் பேசிக்கொண்டே உண்கிறார்கள். நிலை கெட்ட மாந்தர்.
உறங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் இரவு 10 மணிக்கு மேல் சத்தமாக பேசுவதோ பாடுவதோ அல்லது சமூக வலைத்தள காணொளிகளை ஏர் போன் இல்லாமல் கேட்டுக் கொண்டிருப்பதோ கூடாது என்பதுதான் சட்டம் ஆனாலும் இதுவெல்லாம் மிகவும் சாதாரணமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது அதற்கெல்லாம் மேலாக இவர்கள் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் போது அவ்வழியே கடந்து போகும் டிக்கெட் பரிசோதகர்களாகட்டும் ரயில்வே பாதுகாப்பு படையினராகட்டும் எங்களுக்கும் இதற்கும் எந்த ஒரு பந்தமும் இல்லை என்பதைப் போல கடந்து போவார்கள் அதுதான் ஜீரணிக்கவே முடியாத கொடுமையிலும் கொடுமை
அம்மணி நீங்கள் வசிப்பது பாரத நாட்டில். ரயிலில் இதைவிட அக்கிரமங்களை நான் பார்த்து உள்ளேன். வீட்டில் இருப்பது போன்ற உணர்வுடன் நாடா கட்டிய அந்தர்வேர் போட்டுக்கொண்டு பாத்ரூம் போவான். பனியன் கூட போடாமல் வெறும் உடம்போடு லுங்கி கட்டிக்கொண்டு உலாத்துவான். பல பேர் முன்னிலையில் வாயில் நுரை தள்ள பல் துலக்குவான். எதிர் சீட்டில் ஆள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் காலை நீட்டிக் கொண்டு உட்காருவான்..... பொது இடங்களில் பல பேர் பயணிக்கும் ரயில் பெட்டியில் எப்படி நாகரீகமாக பவ்யமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற பொது அறிவு கூட கிடையாது. நம்முடைய செயல்கள் பிறருக்கு இடையூறாக இருக்குமே என்ற ஒரு குற்ற உணர்வு கூட கிடையாது.
After 10pm, passanger should not make sound. TTE must have acted properly when he receives complaint of public nuisance. Railway authorities may instruct TTEs.
சமீபத்தில் நெல்லைக்கு வந்தேபாரத் ரயிலில் பயணித்தபோது ஒரு குழந்தைக்கு மூச்சு திணறல் வந்துள்ளது… மருத்துவர்கள் யாராவது பயணித்தால் 10ஆவது கோச்சுக்கு வரவும் என அறிவித்தார்கள் … அடுத்தது 6-7 மருத்துவர்கள் வந்துவிட்டனர் …உங்களிடம் பயன்படுத்தாத இன்ஹேலர் இருந்தால் தரவும் என்ற அறிவிப்பு ஒட்டுனரிடம் இருந்து வந்தது… கொஞ்ச நேரம் கழித்து குழந்தை சரியாகிவிட்டது …இன்ஹேலர் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்கள்… எல்லொரும் கை தட்டினோம்… ஒரு பிரச்சனை என்று வரும்போது இந்தியர்கள் எப்படி உதவுவார்கள் என்று உலகுக்கே தெரியும்…அம்மணி கொஞ்சம் பாசிட்டிவ் சைடையும் பார்ப்பது நல்லது….
அதென்ன நாலுபேர்சேர்ந்தால் கத்தி கூப்பாடு போட்டு ரகளை செய்து தீரவேண்டுமா? அதையெல்லாம் எதற்கு அட்ஜஸ்ட் செய்து போகவேண்டும்? காட்டுமிராண்டி பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்....
ஆட்டோ டிரைவர வுடுங்க. ஆட்டோவில கடைசி குழந்தைய ஏத்தி விட்டது ஒரு அம்மாதானே
நிறைய பேர் கையில் பணத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் யாராவது ஒருவன் உதவி என்று கேட்டால் என்ன ஏது என்று விசாரிக்காமல் பணத்தை அனுப்பி விடுகின்றனர் அப்புறம் மோசடி மோசடி என்று கத்திக்குப்பாடு போடுகின்றனர்