உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / திருமண விழாவில் வைகோ அபசகுன பேச்சு: மணமக்கள் குடும்பம், உறவினர்கள் அதிர்ச்சி

திருமண விழாவில் வைகோ அபசகுன பேச்சு: மணமக்கள் குடும்பம், உறவினர்கள் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ம.தி.மு.க., முன்னாள் எம்.பி., ரவிசந்திரன் இல்ல திருமணம் நேற்று நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். அவருடைய பேச்சால், மணமக்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

நல்ல பொருத்தம்

வைகோ பேசியதாவது: உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் என்னை சந்திக்க வேண்டும் என தலைகீழாக நின்றார். ஆனால், ஒரு நிமிடம் கூட அவரை சந்திக்க மாட்டேன் என்று மறுத்து விட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியே அனுப்பிய பங்கு, எனக்கும் ம.தி.மு.க.,வுக்கும் தான் உண்டு. தற்போது விவாகரத்து அதிகரித்து வருகிறது. கோவில்பட்டி, சாத்துார் பகுதிகளில் விவாகரத்து ரொம்பவும் அதிகமாக உள்ளது. நாடு தற்போது பதற்றமான நிலையில் உள்ளது. இங்குள்ள மணமக்கள் இருவருக்கும் நல்ல பொருத்தம். படிப்பிலும், அழகிலும் கூட பொருத்தமான ஜோடி. இதேபோல, மாலையும், கழுத்துமாக தேனிலவிற்கு சென்ற 4 தம்பதிகள் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டுஉள்ளனர்.காஷ்மீரில், பயங்கரவாதிகள் சுடுவதற்குமுன், ஹிந்துவா, முஸ்லிமா என கேட்டுள்ளனர். அதை வெளியில் சொல்லக்கூடாது. இதனால், முஸ்லிம்களின் மீது ஹிந்துக்களுக்கு பகை உணர்வு ஏற்படலாம்.

உணவு பஞ்சம்

இந்தியாவில் விவசாயிகள் நொறுங்கிப் போய் உள்ளனர். அவர்கள் முதுகெலும்பும் நொறுங்கிப் போய் உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினால் அழிந்துபோன விவசாய குடும்பங்கள் ஏராளம். தயவு செய்து விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம். உலகத்தில் உணவுப் பஞ்சம் வரவுள்ளது. அப்போது விவசாயிகளை எல்லோரும் தேடுவர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Nallavan
மே 02, 2025 10:16

நெருப்பென சொன்னால் கை சுடும? இவர் பேசியதில் எந்த அபசகுனமாக வார்த்தையும் இல்லை


Malarvizhi
மே 02, 2025 09:46

தன்னை வெளியேற்றிய கட்சியுடன் கூட்டு வைத்ததிலிருந்தே, இவருடைய கொள்கை பிடிப்பு மற்றும் பகுத்தறிவு எவ்வளவு ஆழமானது என்பது விளங்கிவிட்டது.


Bhaskaran
மே 01, 2025 04:27

வயதாகி பல் போச்சுன்னு பார்த்தால் இப்போ மூளையும் கெட்டுப் போச்சு ஆனா நாயக்கர் பையன் சொல்றாரு இவரு தமிழ்நாட்டின் வருமாம் அதனால் ராஜ்யசபா சீட் இன்னொரு வாட்டி தரனுமாம்.


Parthasarathy Badrinarayanan
ஏப் 29, 2025 12:29

இப்படி உளறுவது தொழில்


ram
ஏப் 28, 2025 14:03

இவனே ஒரு அபசகுன ஆளு அப்புறம் இவன் பேச்சு எப்படி இருக்கும்


Rasheel
ஏப் 28, 2025 11:34

திருமணம் செய்ய கூப்பிட்டா, திதி கொடுத்துட்டு போயிட்டான் ஏன்டா உனக்கு இந்த கெட்ட நேரம்


என்றும் இந்தியன்
ஏப் 27, 2025 18:17

வைகோ பெயர் அவரின் பேச்சை வைத்து இன்று முதல் "சைக்கோ" என்றே மாற்றப்படுகின்றது அதிகார பூர்வமாக


sugumar s
ஏப் 27, 2025 15:07

இந்த காபோதியையெல்லாம் கூப்பிட்டா இப்படித்தான் ஆகும்


K V Ramadoss
ஏப் 27, 2025 13:47

வயதாகி விட்டது ..


Ranganathan Muthusamy
ஏப் 27, 2025 07:21

இவனெல்லாம் தமிழ் நாட்டின் சாபக்கேடு.


V RAMASWAMY
ஏப் 28, 2025 17:33

அயல் மாநிலத்தவர்களெல்லாம் தமிழ் போர்வையில் கூத்தடிக்கின்றனர், தமிழகத்தின் தமிழர்களின் சாபக்கேடு.