உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் மீது வேல்முருகன் தாக்கு: த.வெ.க., தொண்டர்கள் கொதிப்பு: சபாநாயகருக்கு அவசர கடிதம்

விஜய் மீது வேல்முருகன் தாக்கு: த.வெ.க., தொண்டர்கள் கொதிப்பு: சபாநாயகருக்கு அவசர கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்தது, த.வெ.க., தொண்டர்களை கொதிப்படைய வைத்து உள்ளது. சேலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வேல்முருகன் பேசியதாவது:இன்னிக்கு யாரோ இரண்டு படத்தில் நடித்துவிட்டு, நான் தான் தமிழகத்தின் முதல்வர் என்கிறார். இரண்டு கிராம் தங்கப்பரிசு கொடுத்ததும், நம்ம முட்டாள்பயல் என்னவெல்லாம் செய்கிறான் தெரியுமா? நான் நடிகர்களை குறை சொல்ல மாட்டேன்.

நிற்கக்கூடாது

நடிகன் நடத்தும் நிகழ்ச்சிக்கு, வீட்டில் இருக்கும் பெண்ணை நம்மாளு அழைத்துச் செல்கிறான். அங்கு போய் என்னவெல்லாம் செய்கிறான் தெரியுமா; சொந்தமாக புத்தி வேண்டாமா?வயது பெண், தன் தந்தை, தாய், ஆயிரக்கணக்கான நபர்கள் முன், ஒரு சினிமா கூத்தாடியை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கிறதை எப்படி அனுமதிக்க முடியும்? இதுதான் தமிழன் கலாசாரமா? நடிகர்கள் யாராக இருந்தாலும், அவர்களை என்ன வேண்டுமானாலும் பாராட்டுங்க; நடிப்பை ரசிங்க. தயவுசெய்து, அவர்களின் வெறியர்களா மாறி கண்டதையும் பண்ணாதீங்க. இது தமிழ் சமூகத்தோட அடையாளம் இல்லை. தமிழனோட கலாசாரம் இல்லை. எந்த நடிகர் வீட்டு வாசலிலும், தமிழ் பிள்ளைகள் போய் நிற்க வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு த.வெ.க., நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து வேல்முருகனை நீக்க வேண்டும் என, சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:த.வெ.க., தலைவர் விஜய், அவரது ரசிகர் மன்றம் சார்பில், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியரை, ஆண்டுதோறும் சந்தித்து கவுரவப்படுத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவியர், விஜய் மீது இருக்கும் அன்பை, பல வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். தன் குழந்தைகள் போல் விஜய் அவர்களுடன் நடந்து கொள்கிறார்.பள்ளி படிக்கும் குழந்தைகள், விஜயை கட்டிப்பிடிப்பது, அவர் மீது தங்களுக்கு இருக்கும் அன்பை வெளிக்காட்டுவதை, சில அரசியல் சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அநாகரிகமாகவும், கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசி இருப்பதை, தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கண்டிக்கிறோம்.மாணவியரையும், அவரது பெற்றோரையும், அருவருக்கத்தக்க வகையில், மிகவும் கீழ்த்தரமாக வேல்முருகன் பேசி இருப்பது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகில்லை. எம்.எல்.ஏ.,வாக இருந்துகொண்டு, தமிழக பெண் குழந்தைகள் குறித்தும், அவர்கள் பெற்றோர் குறித்தும் அநாகரிகமாக பொதுவெளியில் பேசியிருப்பது, வரலாற்று சிறப்புமிக்க சட்டசபைக்கு, மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அவரை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

நடிகர் விஜய் மற்றும் மாணவியர் குறித்து பேசிய வேல்முருகனுக்கு, த.வெ.க., மற்றும் விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.தன்னுடைய கருத்தை வேல்முருகன் வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவோம் என த.வெ.க.,வினர் அறிவித்து உள்ளனர்.அதேபோல, விஜய் ஆதரவாளரான நடிகர் தாடி பாலாஜி, விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நேற்று அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Murugan
ஜூன் 06, 2025 21:38

முஸ்தபா உன் புள்ளய அவன் முத்தம் குடுக்கலாமா?


Haja Kuthubdeen
ஜூன் 06, 2025 11:19

விஜயை அல்லக்கையை விட்டு திமுக பேசவைக்கிறது...அதை விஜய் புரிந்து கொள்ளனும்..


lana
ஜூன் 06, 2025 11:17

அப்படி கண்டிக்கும் இவர் சமூக பெண்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுத்தால் ஏற்று கொள்வார்கள். எனென்றால் முன்னேற்றம் படிப்பு என்று எல்லாம் சொல்லி மற்ற மத பெண்கள் அரை குறை ஆடையுடன் இருப்பதை நியாயம் படுத்தும் இதே கும்பல் அவர் சமூக பெண்கள் உடையில் மட்டும் மாற்றம் ஏற்க மறுப்பது ஏன். அப்பா வே ஆனாலும் ஒரு வயதிற்கு பின் தொடாமல் பேசுவது நல்லது


ராமகிருஷ்ணன்
ஜூன் 06, 2025 09:39

டோல் கேட் முருகனை TVK கட்சியினர் நன்கு கவனிக்க வேண்டும். தன் கட்சி கடைசி விசிலடிச்சான் குஞ்சுகள் கூட ஓடி விட்டால் என்ன பண்றது


Manaimaran
ஜூன் 06, 2025 09:04

கொதிச்ச ஒண்ணும் பண்ண முடியாது


எஸ் எஸ்
ஜூன் 06, 2025 08:46

வேல்முருகன் சொன்னதில் ஓரளவு உண்மை உள்ளது. மாணவிகளை தொடாமல் பாராட்ட முடியாதா? நேற்று விஜய் ஒரு கை மாணவியின் தோள் மீதும் இன்னொரு கை மாணவியின் தாயார் தோள் மீதும் வைத்து போட்டோ வுக்கு போஸ் கொடுத்ததை டிவியில் பார்த்தேன். அப்பெண்ணின் முகத்தில் தர்ம சங்கடத்தையும் பார்க்க முடிந்தது. விஜய் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். வயது வந்த பெண்ணை மகள் ஆனாலும் தொட்டு பேசுவது நமது கலாச்சாரம் அல்ல


RAAJ68
ஜூன் 06, 2025 08:37

வாய் அடக்கம் தேவை. அவனுக்கு எங்கு பற்றி எரிகிறது என்று புரியவில்லை


Padmasridharan
ஜூன் 06, 2025 08:31

வெற்றி கூடட்டும், MGR பாணியில்.. நடிப்பை விட்டுவிலகுகிறேன் என்று சொன்னதே விஜயத்திற்க்கு ஒரு வெற்றிதான்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 06, 2025 08:30

மேடை நாகரீகம் முற்றிலும் சிதைந்து விட்டது. பெண்கள் ஆண்களுக்கு சால்வை அணிவிப்பது மாலை மரியாதை செய்வது ஆண்கள் பெண்களுக்கு சால்வை போர்த்துவது பெண் குழந்தைகளை அன்பாக கட்டி பிடிக்கிறேன் என்று சொல்லி நாகரீகம் இல்லாதது பெண் குழந்தைகளை ஆண் பாடகர்களோடு காதல் இரட்டை அர்த்த பாடல்கள் பாட வைத்து பாராட்டுவது ஆண் குழந்தைகளை பெண்களோடு காதல் பாடல்கள் இரட்டை அர்த்த பாடல்கள் பாட வைத்து ஆண் குழந்தைகளை கொஞ்சி ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது இதெல்லாம் இப்போது சாதாரணம் ஆகி விட்டது. எல்லாம் பணத்திற்காக சுய மரியாதை கூட இழக்க தயங்காத சமூகம். சினிமா என்னும் அரக்கன் ஒரு மனிதனின் தலையில் இருந்து கால் நுனி வரை ஒவ்வொரு செல்களிலும் நுழைந்து விட்டது.