உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் ஏலம் போகும் துணைவேந்தர் பதவிகள்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வேதனை

தமிழகத்தில் ஏலம் போகும் துணைவேந்தர் பதவிகள்: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வேதனை

கோவை: 'தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் ஏலத்துக்கு விடப்படுகின்றன. அதிக பணம் கொடுப்பவர் மட்டுமே அப்பதவியைப் பெறும், மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது' என்று பேராசிரியரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான பாலகுருசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

துணைவேந்தர்நியமனம் தொடர்பாக, யு.ஜி.சி.,பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தமிழக சட்டசபையில்அவசரமாகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது விந்தையளிக்கிறது. யு.ஜி.சி., விதிமுறைகளின் சரியான பார்வையைப் புரிந்து கொள்ளாமல், இவ்வாறு தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம்.யு.ஜி.சி., பிறப்பித்தவிதிமுறைகள், இப்போது வரைவு நிலையில்தான் உள்ளன. மாநில அரசுகள், கல்வியாளர்கள், மக்கள் தங்களது யோசனைகள், பரிந்துரைகள், மாற்றங்களை தெரிவிக்கமுப்பது நாட்கள் அவகாசம் உள்ளது. ஆகவேஇந்நிலையில், யு.ஜி.சி., விதிகள் குறித்த சட்டசபையில் தீர்மானம் தேவையற்றது.

முந்தைய வரலாறு

துணைவேந்தர்களை நியமிப்பதில் அரசியல் குறுக்கீடுகள், ஊழல் ஆகியவை 2006ம் ஆண்டு ஏற்பட்டது. தமிழக கவர்னராக,பன்வாரிலால் புரோஹித் 2017ம் பொறுப்பேற்கும் வரைநீடித்தது. அப்போது, நான்கு வழிமுறைகளில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது ஆட்சியாளர்களின் தீவிர விசுவாசிகள்குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (வாக்கு வங்கி அரசியலுக்காக)அதிக தொகை அளிப்போர், கடந்த காலத்தில், கல்லூரி, பல்கலையில் விரிவுரையாளர், துணைப் பேராசிரியர் பதவிகளில் இருந்த சிலர் முன்னணி பல்கலைதுணைவேந்தர்களாக நியமனம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மருமகன்கள், மருமகள்கள், சகோதரிகள், சகோதரர் மனைவிமார் என்பது கடந்த காலச் சம்பவம்.இது மட்டுமல்ல, ஓர் அமைச்சரின் தனி உதவியாளர், துணைவேந்தரின் தனி உதவியாளர் ஆகியோர் கூட துணைவேந்தராகநியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதை விட அதிர்ச்சியானது, தங்கக் கடத்தல் தொடர்பான வழக்கில் தில்லி, திஹார் சிறையில் இரண்டு ஆண்டுகள் அடைக்கப்பட்டவர், ஒரு புகழ்பெற்ற பல்கலையின்துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவையெல்லாம் அப்போது இருந்த அரசாங்கம், கவர்னரைகையில் போட்டுக் கொண்டு, அவரது ஆதரவோடு நிகழ்த்தியிருக்கின்றன.

துணைவேந்தர்கள் நியமனம்

துணைவேந்தர்களை வேந்தர் நியமிக்கும் நடைமுறை, நாட்டில் பல காலமாகவே இருக்கிறது. இந்த உத்தேச வரைவு, நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறையைத்தான் மறுபடியும் உறுதி செய்கிறது. புதிய விதிமுறையின்படி, துணைவேந்தர்களைப் பரிந்துரைப்பதற்கான தேடல் குழுவில் மூன்று பேர் உறுப்பினர்களாக இடம்பெற, வகை செய்யப்பட்டுள்ளது.அதில், வேந்தர், பல்கலை, யு.ஜி.சி., ஆகிய மூன்றும்பரிந்துரைப்பவர்களாக இருக்கின்றனர்.இது சமநிலையில் அமைந்துள்ள, சரியான குழு அமைப்பு ஆகும். இக்குழுவில், மாநில அரசு தனது பரிந்துரை, யோசனைகளை பல்கலையின்பிரதிநிதியின் மூலம் தெரிவிக்கலாம். நேர்மையான, அறிவாற்றல், நிபுணத்துவம், தலைமைத் திறன் கொண்டவர்களை, துணைவேந்தர்களாக நியமிப்பர்.உயர் கல்வி நிலையங்களின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கும்போது, அரசியல் தலையீடு இல்லாமலும், உறவினர், வேண்டியவர் வேண்டாதவர், ஊழல் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.முன்பு நடந்தது போல, நடப்பதற்கான அறிகுறி இருந்தால், துணைவேந்தர்களை அரசு நியமிப்பதில் ஊழல், உறவினரை நியமித்தல், பாரபட்சம் ஆகியவை மீண்டும் வந்துவிடும். மிகமோசமாகஉள்ள, உயர்கல்வியின் தரம் இதனால் மேலும்சிதையும்.

பதவிக்கு தொகை நிர்ணயம்

உயர்கல்வித்துறையில் பரவியுள்ள, ஊழல் துணைவேந்தர்களைப் போலவே, அரசு நிதியுதவி பெறும் பல்கலையிலும்கல்வி நிறுவனங்களிலும், பியூன் முதல் பேராசிரியர் வரைஅனைத்துப் பதவிகளிலும், ஆட்களை நியமிக்க தொகை நிர்ணயிக்கப்பட்டது.இதன் விளைவாக, ஊழல், முறைகேடுகள் காரணமாக பணி நியமனங்கள், மாணவர் சேர்க்கைகள், மறு மதிப்பீடுகள், பொருட்களை வாங்குவது ஆகியவை, பல்கலைக்கழகங்களில் சாதாரணமாக நடக்கின்றன. இது மட்டுமின்றி, பல்கலை மற்றும்கல்லூரிகளிலோ, புதிதாக உருவாக்கப்படும் பாடத்துக்கு ஒப்புதல் பெறுவது, புதிய கல்லூரிக்கு பல்கலைஇணைவு வழங்குவது, கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் தருவது ஆகியவற்றுக்கு, அமைச்சர்களும் துணைவேந்தர்களும் பணம் வசூலித்த சம்பவமும் நடந்திருக்கிறது. பல துணைவேந்தர்களின் இல்லங்களில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலர்கள் சோதனையிட்டிருக்கிறார்கள். அது தொடர்பான வழக்குகளில் சிலர், ஜாமினில் வெளியில் உள்ளனர்.சிலர் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். அதில், உயர்கல்வி அமைச்சர் உட்பட பலர் மீதான வழக்குகள் இன்னும் நீடிக்கின்றன.

புதிய விதிமுறைகள் எதற்காக?

துணைவேந்தர்களை நியமிப்பதில் பாரபட்சம், அரசியல் குறுக்கீடுகள் களையப்பட்டு, நேர்மையான வெளிப்படையான அணுகுமுறை இருப்பதை, இந்த புதிய விதிமுறைகள் வரைவுத் திட்டம் உறுதி செய்யும்.தமிழக சட்டசபையில்நிறைவேற்றப்பட்ட தீர்மானம், துணைவேந்தர் நியமனத்தில் முன்பு இருந்தது போல ஊழல், முறைகேடு ஆகியவை நீடிக்கவே துணை புரியும். இது ஏற்கெனவே மோசமாக இருக்கும், உயர்கல்வியின் தரத்தை மேலும் சிதைக்கும்.

யு.ஜி.சி., நெறிமுறைகள்

யு.ஜி.சி., அமைப்பு, லோக்சபாவில்கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தரத்துக்கான விதிமுறைகளை வகுக்கவும், தரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரம் படைத்தது.எனவே, நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் யு.ஜி.சி., விதிமுறைகளைக் கண்டிப்பாக உறுதியாகப் பின்பற்றியே ஆக வேண்டும். எந்த வகையிலும் விதிகளை மீறினால், எந்தப் பல்கலையின்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது. இச்சூழலில், மத்திய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மோதும் போக்கைமாநில அரசு கைவிட்டு, மாநிலத்தின் உயர்கல்வியின் நலனுக்காக, அந்த அமைப்புகளுடன் இணைந்துசெயல்படுவதே சிறப்பு. அதற்கு இது நல்ல தருணம்.இவ்வாறு, பாலகுருசாமி கூறியுள்ளார்.

'பேரம் நடத்த தரகர்கள்'

பாலகுருசாமி மேலும் கூறியுள்ளதாவது:அண்ணா பல்கலையின் முன்னாள் துணை வேந்தராக இருந்த மறைந்த பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் 2010ம் ஆண்டு கூறிய கருத்தை, இங்கே நினைவுகூர்கிறேன். 'தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் தற்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன. அதிக பணம் கொடுப்பவர், அப்பதவியைப் பெறுகிறார். அதற்காகக் கொடுக்கப்படும் தொகை, பல்கலைக்கு ஏற்ப 5 கோடியிலிருந்து10 கோடி ரூபாய் வரை இருக்கிறது. இதற்கான பேரத்தை நடத்த, தலைமைச் செயலகத்திலிருந்து, கவர்னர் மாளிகை வரை, தரகர்கள் உள்ளனர்' என்று கூறியிருக்கிறார் அவர் இவ்வாறு, பாலகுருசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அசோகன்
ஜன 13, 2025 15:21

திருட்டு திமுக அலறி குதிக்கும் போதே புரியவில்லை.... பல ஆயிரம் கோடிகள் இழப்பு என்று


SS
ஜன 13, 2025 13:44

யுஜிசி தனியார் நிகர்நிலை பல்கலையில் எவ்வாறு துணைவேந்தர்கள் நியமனத்தை கையாகின்றது. அங்கெல்லாம் கல்வித்தரம் நிலைநிறுத்தபடுகிறதா?


S S
ஜன 13, 2025 12:39

துணைவேந்தர் நியமனத்தில் தவறுகள் நடைபெறுகிறது என்றால் அதனை களைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கலாம். அதனை காரணம் காட்டி மாநில அரசு அதிகாரத்தை பறித்து கொள்வது தவறு. மாநில அரசு நிதியில் பல்கலைகழகங்கள் நிறுவப்பட்டு செயல்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


R K Raman
ஜன 13, 2025 12:23

அத்தனையும் உண்மை. இந்த மாதிரி நியமனம் பெற்ற சிலர் உயிர்த் தோழியிடம் காலில் விழாத குறையாக முதுகு வளைந்து நின்றது சான்று.


அப்பாவி
ஜன 13, 2025 10:43

எல்லாமே காசுதான்.


ஆரூர் ரங்
ஜன 13, 2025 10:33

புதிய விதிகளின்படி பேராசிரியர் அனுபவம் இல்லாவிடினும் துணைவேந்தர் ஆகலாம் என்பதை ஸ்டாலின் எதிர்க்கிறார். இவரது எண்ணப்படி அப்துல் கலாம், நம்பி நாராயணன் போன்ற அறிவாளிகள் தகுதியற்றவர்கள். ஏனெனில் அவர்களிடம் கட்டிங் கறக்க முடியாது என்றால்?.


Manian
ஜன 13, 2025 10:29

Balagurusamy is a SANGHI -Dravidian looters will disgrace this experienced educationist.


karthik
ஜன 13, 2025 09:35

அதனால் தான் ஆளுநரை கமிட்டியில் இருந்து வெளியேற்ற பார்க்கிறார்கள். அவரை வெளியேற்றிவிட்டால் பின்பு இவர்கள் சொல்லும் ஆளை கண்ணை மூடிக்கொண்டு துணைவேந்தராக நியமிக்கலாம். கொடிகள் வாங்குவதில் சிக்கல் வாராது.. இது தெரியாத தமிழ் ஜனங்கள் அரசியவாதிகள் ஊதும் மகுடிக்கு தலையை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பத்திரைக்கைகள் உள்பட.


vbs manian
ஜன 13, 2025 09:26

சார் நெஞ்சம் பொறுக்குதில்லையே. நாட்டின் எதிர்கால அடிப்படையான கல்வி துறையையும் சீரழித்து விட்டார்கள். என்று தணியும் இந்த பேரிடர்.


கிருஷ்ணதாஸ்
ஜன 13, 2025 08:54

மிகவும் தாமதமான கருந்துரைப்பு. ஆனாலும் உண்மை.


சமீபத்திய செய்தி