உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமைச்சர் வேலுவுக்கு நோட்டு மாலை அணிவிப்பு; விஜய் அதிருப்தியால் மா.செ., கேட்டார் மன்னிப்பு

அமைச்சர் வேலுவுக்கு நோட்டு மாலை அணிவிப்பு; விஜய் அதிருப்தியால் மா.செ., கேட்டார் மன்னிப்பு

திருவண்ணாமலை: தமிழக வெற்றிக் கழக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலர் பாரதிதாசன், சமீபத்தில் வீடு கட்டி குடியேறினார். அதற்காக, கடந்த 8ல், கிரஹப்பிரவேச விழா நடத்தினார். விழாவுக்கு அமைச்சர் வேலுவுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார். அதை ஏற்று, விழாவுக்கு வந்தார் அமைச்சர் வேலு. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jn0hcvod&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, அமைச்சரை, பாரதிதாசன் 20 ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. தி.மு.க.,வையும் தமிழக அரசையும் மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் நடிகர் விஜய் கட்சியைச் சேர்ந்த மா.செ., ஒருவர், தி.மு.க., அமைச்சரை வீட்டுக்கு வரவழைத்து, நோட்டு மாலை அணிவித்து மகிழ்வதா எனக் கேட்டு, கட்சியில் இருக்கும் சிலர், த.வெ.க., தலைவர் நடிகர் விஜய்க்கு கடிதம் அனுப்பினர். கட்சியினர் சிலரும், இந்த விவகாரத்தை தலைமை வரை கொண்டு சென்றனர். உடனே, கட்சித் தலைமை இது தொடர்பாக, பாரதிதாசனிடம் விளக்கம் கேட்டுள்ளது.இதையடுத்து, த.வெ.க., மாவட்டச் செயலர் பாரதிதாசன், கட்சித் தலைமைக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலையில் நான் கட்டியிருக்கும் புதிய வீட்டு கிரஹபிரவேசம், கடந்த 8ல், நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, நண்பர்கள், கட்சியினர் உள்ளிட்டோரை அழைத்தது போல், என்னுடைய குடும்ப நண்பரான அமைச்சர் வேலுவையும் அழைத்தேன். அவரும் வருகை தந்தார். அமைச்சர் என்பதால், அவருக்கு மரியாதை செய்யும் வகையில் 20 ரூபாய் நோட்டு மாலையும், மலர் மாலையும் அணிவித்தேன். தவறுதலாக நடந்த விஷயம் அது.அச்செயலுக்காக வருந்துகிறேன். அதற்காக, தலைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாற்று கட்சியினரை அழைக்க மாட்டேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
ஜூன் 11, 2025 18:49

இனி இதுபோன்று இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவோர் மீது உச்சநீதி மன்றமே தகுந்த நட வடிக்கைளை எடுக்க வேண்டும். நாட்டின் இந்த நோட்டுகளை மதிப்பின்றி செய்யும் ராஜ துரோகம் ஆகும். அப்படிப்பட்டவர்களை உடனே உள்ளே தள்ள வேண்டும். மனிதர்களுக்கு இதுபோன்று நாட்டின் நாணய மதிப்பான நோட்டுகளை மக்களுக்கு மாலையாக போடுவது கோயில்களில் தெய்வத்திற்கு மாலையாக போடுவது எல்லாமே ராஜ துரோகம் தான். உடனே நிறுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Sun Mohan
ஜூன் 11, 2025 15:36

அரசு பணத்தை மாலையாக செய்தது தவறு இல்லையா?????


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 11, 2025 10:50

தவெக திமுகவின் IVF baby. திமுகவின் ஜீன் இதில் உள்ளது. திமுகவிற்கு எது பிடிக்கும் நிதி. நிதி என்றால் பணம். எழுபது எண்பதுகளில் திமுக தலைவருக்கு பணமாலை அறிவிப்பார்கள் மேடையில். திமுகவின் உளமறிந்து தவெக செய்துள்ளது. இதில் என்ன தவறு உள்ளது மன்னிப்பு கேட்க. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் துணை முதல்வர் முதல்வருக்கு பண மாலை போடாமல் இரண்டாம் தர வரிசை தலைவருக்கு போட்டததற்காக வேண்டும் ஆனால் மன்னிப்பு கேட்கலாம். எப்படியும் தவெக மநீம போல் திமுகவில் ஐக்கியம் ஆகத்தான் போகிறது. அதை குறிப்பாக உணர்த்தி உள்ளார்கள். நல்லது தானே. இதுவும் நாட்டுக்கு தேவை யோ என்னவோ.


theruvasagan
ஜூன் 11, 2025 09:38

அமைச்சர் என்பதால் நோட்டுமாலை அணிவித்தேன். இதுக்கு மேல விளக்கம் தேவையில்லை.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 11, 2025 09:31

திமுக ஆசியோடு ஓட்டுக்களை பிரிக்க ஆரம்பித்த கட்சி தவெக....எப்படியும் தேர்தலுக்கு பின் திமுகவில் தவெகவை ஐக்கியமாக்கி பின் பழையபடி சினிமாவில் நடிக்க தொடங்குவார்.... இவைகளை தெரிந்து தான் தவெக மாவட்ட செயலர் பாரதிதாசனின் புதுமனை புகு விழாவிற்கு எ வ வேலுவை அழைத்திருக்கிறார்... மன்னிப்பு கடிதத்தை ஏற்று விஜய் இவரை மன்னிப்பார்.... போ....போ....போ...பஞ்சாயத்து முடிஞ்சி போச்சி....!!!


nisar ahmad
ஜூன் 11, 2025 08:37

இந்தியாவில் மட்டூம்தான் இந்த கேவலமான அரசியல் நடக்கிறது. தன் வீட்டு விஷேசத்திற்கு சொந்தக்காரணாகவோ நண்பனாகவோ இருந்து அவன் மாற்று கட்சியில் இருந்தால் அழைக்ககூடாதென்பது விதி.படு கேவளம் .


Padmasridharan
ஜூன் 11, 2025 08:35

சேத்துல செந்தாமரை மலருமா இல்லை சேத்தோட சேரா மாறுமா.. தெரியலையே சாமி. ஓட்ட வாங்கி மொதல் 5 வருஷத்துல தெரியப்படுத்தவேண்டிய விஷயத்தை இப்பவே கூட இருக்கிறவங்க தெரியப்படுத்தறாங்களோ பாலபிஷேகம் நடிகர்களுக்கு, பணமாலை அரசியல்வாதிகளுக்கு இதுதான் நல்வழி கலாச்சாரமா


Venukopal, S
ஜூன் 11, 2025 07:24

இப்போ தெரியுதா யாரு பீ டீம் அப்டின்னு


RAAJ68
ஜூன் 11, 2025 06:21

கிரஹப் ப்ரவேசம் அல்ல. க்ருஹம் என்று எழுதவும். க்ரஹம் என்றால் கோள். க்ருஹம் என்பது வீடு. தயவு செய்து இனிமேல் திருத்திக் கொள்ளவும்.


theruvasagan
ஜூன் 11, 2025 09:41

க்ரஹம் என்பது கிரகம். இந்த இடத்தில் சரியாகத்தான் உள்ளது.


முக்கிய வீடியோ