உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வடக்கில் பிரபலமாகும் விஜய்!

வடக்கில் பிரபலமாகும் விஜய்!

புதுடில்லி: பார்லிமென்டில் பல நிலைக்குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்; நாட்டின் பல மாநிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வர். கள ஆய்வுகளின்போது தாங்கள் சேகரித்த விபரங்கள், கோரிக்கைகள் மற்றும் குறைகளை, பார்லி., செயலக அதிகாரிகள் உதவியுடன், எம்.பி.,க்கள் முழுமையாக தொகுத்து, அறிக்கையாக பார்லிமென்டில் தாக்கல் செய்வர்.இந்த நிலைக்குழு தலைவர்களுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை அளித்துள்ளார். 'மாநிலங்களுக்கு செல்லும்போது, சம்பந்தப்பட்ட முதல்வர்களை சந்தித்து மாநில வளர்ச்சி, தேவைகள் என, பல விஷயங்களை விவாதியுங்கள்; அப்போது தான் மாநிலத்திற்கு என்ன தேவை என்பது தெரிய வரும்; அதை வைத்து பார்லி.,யில் பேசலாம். தமிழகம் செல்வோர், முதல்வர் விஜயை கண்டிப்பாக சந்திக்க வேண்டும்; ஏனெனில், கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டில் ஆட்சியைப் பிடித்தவர்; அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ium00ti8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, நிலைக்குழுவில் உள்ள மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா எம்.பி.,க்கள், முதல்வர் விஜயை சந்திக்க ஆவலாக உள்ளனர்; ஒரு சில நிலைக்குழு எம்.பி.,க்கள் முதல்வரை சந்தித்து விட்டனராம்.விஜய் குறித்த காணொளிகளை, வட மாநிலங்களில் பலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை அடுத்து, இப்போது வட மாநிலங்களில் பிரபலமாக இருப்பவர், முதல்வர் விஜய் தான். 'இதனால் தான், அடுத்த பிரதமர் விஜய்' என, த.வெ.க.,வினர் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

skv srinivasankrishnaveni
செப் 08, 2026 18:12

விஜய் சாப் க்கோ ஹிந்திமாலும் ???????????திமுக அதிமுக எல்லாம் ஹிந்திக்கு விரோதிகள் ஆச்சே அதான் சந்தேகம் varadhu


Barathi
செப் 07, 2026 00:59

தமிழ்நாட்டை தாண்டி சோசப்பு விசயின்னு போடறதில்லை.வெறும் விசய் தான். மிஷனரியின் சந்தர்பவாதம்


skv srinivasankrishnaveni
செப் 08, 2026 18:16

மிஷனரி கூட்டமெல்லாம் ஆலகாலவிஷம் விட மோசமானவர் களாச்சே முஸ்லீம் மதமாற்றிகள் ஒருவிதமான ஏமாற்றி நம்ம இலையவர்களை நம்ம நாட்டுக்கே துரோகிகளா ஆக்குறாவா எனறால் இந்த மதமாற்றம் செய்யும் கிறிஸ்துவா தமிழாலேதான் ஆனால் தங்களெல்லாம் ஜெர்ஊசலாம்லேந்துவந்தாப்போல ஷோ பண்ணravangka


என்றும் இந்தியன்
செப் 06, 2026 17:59

ரூ 10 லட்சம் கோடி கடனில் டாஸ்மாக் நாட்டரசு விஜய் ஆட்சிக்குவந்தபோது. ஆனால் விஜய் ஆட்சிக்கு வந்து 100 நாளில் ரூ 45,000 கோடி கடன் வாங்கியிருக்கின்றது அப்படியென்றால் 5 வருட ஆட்சி - 1825 நாட்களில் 182545000/100= ரூ 8,21,250 கோடி கடன் வாங்கிவிடும் இந்த தரம்கெட்ட வெட்டி கழக அரசு என்று உறுதியாகின்றது . டாஸ்மாக்கினாட்டின் மொத்த கடன் ரூ 18.2 லட்சம் கோடி 5 வருடம் கழித்து அதாவது 2031ல் பேஸ் பேஸ். இதனால் தான் வடக்கில் பிரபலமாகும் விஜய்


என்றும் இந்தியன்
செப் 06, 2026 17:41

இந்திய சினிமா எடுக்க ஆரம்பிசுட்டாங்களா???அதில் விஜய் தான் ஸிரோவா???அடுத்த அறிவிப்பு விரைவில் இப்படி வந்தாலும் ஆச்சரியமில்லை. உலகம் பூராவும் பிரபலமாகும் விஜய்


ALAGAPPAN NACHIAPPAN NACHI
செப் 06, 2026 17:39

மைனாரட்டி ஆட்சி இதுல வேற அடுத்து பிரதமர் ...இது மோடிக்கு தெரியுமா....ஹிஹிஹிஹி


G.SENTHIL KUMAR
செப் 06, 2026 17:24

திமுக, அதிமுக செய்த மிகப்பெரிய ஊழலை பற்றிய எண்ணம் மக்களை மிகவும் கோபமடைய செய்தது. அப்போது அண்ணாமலை சரியாக பிஜேபி தனியாக நிற்க வேண்டும், மாற்று சக்தி உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் செய்த செயலின் பெரும் லாபத்தை மிக பெரிய அறுவடை செய்தது நடிகரின் கட்சி. தற்போது சட்டசபை மன்றம் என்பது புகழ் பாடி ஜிங் ஜாக் போடும் சத்தம் மட்டுமே அதிகம் கேட்கிறது. போதை பொருட்கள் விற்பதை முதலில் தடுங்கள், எல்லாம்செய்துவிட்டதாக பொய் பித்தலாட்டம் ரீல்ஸ் போடுவதை நிறுத்துங்கள் நண்பர்களே


D Natarajan
செப் 06, 2026 17:18

வடக்கில் ராமர் தான் வெற்றி பெற முடியும். வட மாநில மக்கள் சினிமா மோகத்தில் , விசில் குஞ்சுகள் போல வோட்டு போட மாட்டார்கள்.


Govi
செப் 06, 2026 17:04

மலைக்கும் மடுவுக்கும்


Suppan
செப் 06, 2026 16:04

எல்லாம் Influencers செய்யும் மாயம். பணம் பத்தும் செய்யும்


krishna
செப் 06, 2026 15:33

THUNDU SEATTIN MAHA KEVALAMAANA AATVHI PLUS EPS PONDRA SUYANALA UDHAVAADHA THALAIVARGALAI ODHUKKI VITTU IVARUKKU LUCKY CHANCE KIDAITHADHU.ONNUM THERIYAADHA IVARAAL ARANMANAI READ AS ASSEMBLY KOMAALIGAL KOODARAM AAGI.ULLADHU.