உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரஜினி வழியில் விஜய்?

ரஜினி வழியில் விஜய்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூரில் நடந்த கோர சம்பவம் தமிழக அரசியலை மட்டுமன்றி டில்லி அரசியலையும் புரட்டி போட்டுவிட்டது. இந்த சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளுமே, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், விஜயின் அடுத்த பிரசாரம் எப்போது துவங்கும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அ.தி.மு.க.,வோ, விஜய்க்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. பா.ஜ.,வினரும், தங்களுக்கு சாதகமாக கரூர் விவகாரத்தை பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இதனால் தான், எம்.பி.,க்கள் குழுவை கரூருக்கு பா.ஜ., உடனடியாக அனுப்பி வைத்தது.தற்போது பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜ.,வின் மொத்த கவனமும் பீஹாரில் தான் உள்ளது. அதே போல காங்கிரஸ் மேலிடமும் த.வெ.க.,வை தங்கள் பக்கம் வளைக்க முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.ராகுல் வெளிநாட்டில் உள்ளதால், இது குறித்து உடனடியாக எந்த முடிவையும் அந்த கட்சி எடுக்கவில்லை. ராகுல் தாயகம் திரும்பிய பின், விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது சாத்தியமா என்பது தொடர்பாக விவாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு அதிகரிக்கும் நிலையில், விஜய் கட்சி நீடிக்குமா அல்லது ரஜினி போல பின்வாங்கி விடுவாரா என்றும் பா.ஜ.,வுக்குள் அலசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ