உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  எஸ்.ஐ.ஆர்., போராட்டத்தில் த.வெ.க., பலத்தை காட்டணும் : கட்சியினருக்கு விஜய் உத்தரவு

 எஸ்.ஐ.ஆர்., போராட்டத்தில் த.வெ.க., பலத்தை காட்டணும் : கட்சியினருக்கு விஜய் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக, நாளை நடக்கும் போராட்டத்தில், த.வெ.க., பலத்தை காட்ட வேண்டும்' என, கட்சியினருக்கு, த.வெ.க., தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். த.வெ.க., தலைவர் விஜய், கடந்த செப்., 27ம் தேதி, கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். அதன்பின், விஜய் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை, ஒரு மாதம் வரை, கட்சி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். தற்போது, மீண்டும் கட்சி நடவடிக்கைகளில், கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு, த.வெ.க.,வும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதற்காக, தமிழகம் முழுதும், த.வெ.க., சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. சென்னையில் பொதுச்செயலர் ஆனந்த் பங்கேற்க உள்ளார். மற்ற மாவட்டங்களில், கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமை ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, கட்சியின் மாவட்ட செயலர்களுக்கு, விஜய் 'இ - மெயில்' அனுப்பி உள்ளார். அதில், 'போலீசார் அனுமதி அளிக்கும் இடத்தில் மட்டுமே, ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும், பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும், இடையூறு ஏற்படுத்தக் கூடாது' என, விஜய் அறிவுரை வழங்கி உள்ளார். தேர்தலில், 'தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இடையே மட்டும்தான் போட்டி' என, விஜய் முழங்கி வருகிறார். எனவே, நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.,வை மிஞ்சும் அளவிற்கு பலத்தை காட்ட வேண்டும் எனவும், மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 'பலத்தையும் காண்பிக்க வேண்டும்; போலீசாரின் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்' என உத்தரவிட்டுள்ளதால், மாவட்டச் செயலர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

Venkat
நவ 15, 2025 22:48

The so called educated TN says Biharis are fit only for labourers works and Pani poori sellers, bur mind every Bihari working in different parts of India travelled and vote on the day of election. They elected the leader whom they want. In contrary in TN, on the day of election, educated people enjoy vacation and rest become slaves to money given by parties.


V K
நவ 15, 2025 22:25

அவர் எதாவது காட்டடடும் நீங்க வீட்டுல சும்மா இருங்கோ கூத்தாடி பின்னால் போக வேண்டாம்


சாமானியன்
நவ 15, 2025 22:18

S I R ல் என்ன தவறு உள்ளதாக விஜய் அவர்கள் கருதுகிறார் ? அதனை பட்டியலிட்டு மாநில தேர்தல் கமிஷனிடம் தந்தீர்களா ? அவர்கள் ஏதாவது பதில் அளித்துள்ளார்களா ? இப்படி எதுவுமே தெரியாமல் தெருவில் வந்து போராட உங்கள் தொண்டர்கள் அரை லூசூகளா ? திமுகவினருக்கும் இதே தான்.


Venkat esh
நவ 15, 2025 21:22

இவர் என்னத்துக்கு அரசியலுக்கு வந்தார்... நீட் எதிர்ப்பு, எஸ். ஐ. ஆர். எதிர்ப்பு என்று விஷயம் புரியாமல் மானங்கெட்ட மாடலுக்கு வெளிச்சம் காட்டுகிறார்... ஆனால் திமுக வுக்கு முடிவு கட்ட வந்தவர் போல பேசுகிறார்.... நிஜத்தில் மானங்கெட்ட மாடலை விட மோசமானவர் ஆபத்தானவர்..


நிக்கோல்தாம்சன்
நவ 15, 2025 19:37

ஏற்கனவே இப்படி காட்டப்போயி தான் அப்பாவிகளின் உயிரை parittheergal , இப்போ அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதோ புலி


oviya vijay
நவ 15, 2025 19:04

இவருதான் டீ மூ கா வின் பீ டீம். சொறிவு ஆலயம் என்னத்தை சொல்கிறதோ அதை நிறைவேற்றும் அடி maii


P SURESHBABU
நவ 15, 2025 17:51

இவர் எல்லாம் ஒரு கட்சித் தலைவர் . இவர் பின்னால் ஒரு கூட்டம். அய்யோ பாவம் தமிழ் நாட்டு மக்கள்!!


M Ramachandran
நவ 15, 2025 17:48

பீஹார் தேர்தல் ஒரு முன் உதாரணம். மக்கள் இபோது முன்னை போல் இல்லை. மக்கள் சிந்திக்கும் திறன் அதிகமாகி விட்டது சிந்திக்க கூடியவர்கள். பசப்பு வார்த்தைகள் எடுபடாது. பாடம் கற்க வேண்டியவராக நடிகர் ஜோசப் விஐய் உள்ளார்.


krishna
நவ 15, 2025 17:14

IDHELLAM ORU KATCHI.IVAR ELLAM ORU THALAIVAR.IVARUKKU VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI THONDARGAL VERA.


krishna
நவ 15, 2025 17:13

ONNUKKUM UDHAVAADHA BUDHI ILLADHA KOOTHADI SIR ENDRAAL ENNA ENDRE PURIYAADHU SONNALUM PURIYUM THIRAN ILLAI PARIDHAABAM.


முக்கிய வீடியோ