உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி

விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி பற்றி, சி.ஆர்.பி .எப்., அதிகாரிகளிடம், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. த.வெ.க., தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 11 பேர், 24 மணி நேரமும் விஜயின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மீறி, சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீட்டிற்குள், சில தினங்களுக்கு முன், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த அருண், 24 என்பவர் புகுந்தார். இது, விஜய் வீட்டில் பாதுகாப்பு குளறுபடி இருப்பதை, அம்பலப்படுத்தியது. இந்த நிலையில், கடந்த செப்., 27ல், கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர். விஜய் மீதும் செருப்பு வீசப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. இக்கூட்டத்திலும் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்துள்ளன. தொடர்ந்து, விஜய்க்கான பாதுகாப்பு பணியில் குளறுபடிகள் நீடிப்பதால், அது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்களிடம், டில்லியில் இருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Mahendran Puru
அக் 03, 2025 21:19

தமிழன் உலகை ஆளுகிறான்.


Mahendran Puru
அக் 03, 2025 21:14

எப்படியாவது விஜய்யை வளைத்து விட வேண்டும் என்று அவசர கதியில் இயங்குகிறார் அ ஷா. முயற்சி பலிக்குமா??


Sun
அக் 03, 2025 21:10

இவருக்கு எல்லா பாதுகாப்பும் நல்லாத்தான் இருக்கு! .மத்திய பாதுகாப்பு படையும் இருக்கு!.சொந்த பாதுகாப்புப் படையும் இருக்கு! இவரை பார்க்க வந்த மக்கள் தான் தாய் பிஞ்சு குழந்தையை இழந்து, குழந்தை தாயை இழந்து, கணவன் மனைவியை இழந்து, மனைவி கணவனை இழந்து ஊரார், உறவினர்கள் ஏச்சு, பேச்சுடன் நிர்கதியாய் இன்று நிற்கின்றனர்.


Yasararafath
அக் 03, 2025 16:13

இப்போதாவது விஜய் மீது பாஜாக்கு பயம் இருக்கு.


BHARATH
அக் 03, 2025 14:47

முதல்ல .....


nisar ahmad
அக் 03, 2025 14:03

பஜகவும் எப்படியாவது தமிழக்தில் புகுந்துவிட வேண்டும் வடமாநிலங்களை போல தமிழகத்தையும் மாற்றிவிட வேண்டும் என்று அலைகிறது


shakti
அக் 03, 2025 17:31

வடமாநிலங்களை போலவே தமிழகத்திலும் தீவிரவாதிகளையும் பயங்கவாதிகளையும் என்றாவது ஒரு நாள் "தூச்"சடிக்கப்படும் ... இன்ஷா அல்லாஹ் ..


nisar ahmad
அக் 03, 2025 14:01

விஜய் மேல் பஜக வுக்கு இவ்வளவு கரிசம் ஏன் என்பது தமிழக மக்களுக்கு தெறியும்


தென்றல் மோகன், துறையூர்
அக் 03, 2025 20:04

அதென்ன கரிசம்? இது என்ன உருது மொழியா அல்லது அரேபிய மொழியா?


Mario
அக் 03, 2025 13:53

மதுரையில் தொண்டரை குப்பை போல தூக்கி போட்ட பவுன்சர்கள் வேடிக்கை பார்த்த விஜய் இப்ப மட்டும் என்ன?


முருகன்
அக் 03, 2025 13:43

இவரை பார்க்க வரும் மக்கள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு உயிர் பலி ஏற்பட்ட உடன் பழியை தமிழக அரசின் மீது போடுவது ஏன்


Sun
அக் 03, 2025 13:42

நடந்து முடிந்த கரூர் சம்பவத்தில் போலீஸ் மற்றும் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால் அரசும், போலீசும் மட்டும்தான் இதற்கு காரணம் என்பது போல் அ.தி.மு.கவும் ,பா.ஜ.வும் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. சம்பவத்திற்கு உடனடிக் காரணம் விஜயின் லேட்டான வருகை தான். நாமக்கல் கூட்டம் ஆரம்பிக்க அறிவிக்கப் பட்ட நேரத்தில் இவர் சென்னையில் இருந்தே கிளம்பவில்லை. கரூரில் காலை, முதலே பெண்கள், குழந்தைகள் தண்ணீர் கூட இல்லாமல் காத்திருப்பது விஜய்க்கு தெரியாமல் போனதா? குறித்த நேரத்தில் பகலில் விஜய் வந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்குமா? வந்தவர் என்ன செய்தார்? மக்களெல்லாம் சாவின் விளிம்பில் இருக்கும் போது வாகனத்தின் விளக்கை அணைத்து, எரிய விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுதான் ஒரு பொறுப்புள்ள தலைவன் செய்யும் செயலா?